விஜயநகரப் பேரரசு தேற்றம் :

கி.பி.1336 - ல் ஹரிஹரர், புக்கர் என்ற இரு சகோதரர்கள் துங்கபத்திரை ஆற்றங்கரையில் விஜயநகரப் பேரரசை நிறுவினர். விஜயநகரம் இப்பேரரசின் தலைநகராக விளங்கியது. சங்கமா, சாளுவா, துளுவா, அறைவீடு ஆகிய நான்கு வம்ச மன்னர்களால் விஜயநகரப் பேரரசு ஆளப்பட்டது. தமிழ்நாட்டின் மீது படையெடுத்த முதல் விஜயநகர மன்னர் முதலாம் புக்கர் ஆவார்.

கி.பி.1336 - ல் ஹரிஹரர், புக்கர் என்ற இரு சகோதரர்கள் துங்கபத்திரை ஆற்றங்கரையில் விஜயநகரப் பேரரசை நிறுவினர். விஜயநகரம் இப்பேரரசின் தலைநகராக விளங்கியது. சங்கமா, சாளுவா, துளுவா, அறைவீடு ஆகிய நான்கு வம்ச மன்னர்களால் விஜயநகரப் பேரரசு ஆளப்பட்டது. தமிழ்நாட்டின் மீது படையெடுத்த முதல் விஜயநகர மன்னர் முதலாம் புக்கர் ஆவார்.

பின்னர் குமாரகம்பணர் தொண்டைமண்டலம், திருச்சி, மதுரை, கொங்குதேசம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி தமிழ்நாட்டில் விஜயநகர அரசை ஏற்படுத்தினார். குமார கம்பணாவிற்குப் பிறகு விருப்பணா, இரண்டாம் ஹரிஹரா, தேவராய சாளுவ நரசிம்மன் போன்ற விஜயநகர மன்னர்களால் தமிழ்நாடு ஆளப்பட்டது. விஜயநகர மன்னர்களில் கிருஷ்ணதேவராயர் தலைசிறந்த நிர்வாகி ஆவார். விஜயநகா ஆட்சியின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நாயக்கர் முறையை மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கிருஷ்ணதேவராயர் ஏற்படுத்தினார்.

Also Read :  தமிழகத்தின் தியாகச் செம்மல்கள்!!!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி நிர்வாக முறையை மாற்றியமைக்கும் பொருட்டு பிரபுத்துவ நயன்கார நிர்வாக முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் விஜயநகர மன்னர்கள், தமிழ்நாட்டிலுள்ள முக்கிய பகுதிகளுக்கு நாயக்கர்களை தலைவர்களாக நியமித்தார்கள். கி.பி.1565 - இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசு சுல்தானிடம் வீழ்ச்சியடைந்தது. விஜயநகர அரசர்களின் முக்கிய சமயம் இந்து சமயமாகும்.

ஆரம்பகால விஜயநகர மன்னர்கள் சைவர்களாகவும், பிற்கால விஜயநகர மன்னர்கள் வைணவர்களாகவும் விளங்கினர். வைணவ சமயத்தில் வடகலை, தென்கலை என்ற இரு பிரிவுகள் இருந்தன. வேதங்களைப் பின்பற்றிய வடகலைப் பிரிவிற்கு வேதாந்த தேசிகர் தலைவராக விளங்கினார். பிரபந்தங்களைப் பின்பற்றிய தென்கலைப் பிரிவிற்கு மணவாள மஹாமுனி தலைவராக விளங்கினார். தெலுங்கு விஜயநகர மன்னர்கள் தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருத அறிஞர்களையும், புலவர்களையும் ஆதரித்துப் போற்றினர்.

கிருஷ்ண தேவராயர்:

கிருஷ்ண தேவராயர் எழுதிய "ஆமுக்தமால்யதா" மொழியில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களுல் ஒன்றாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணதேவராயர் அவையில் அஷ்டதிக்கஜங்கள் என்று அழைக்கப்பட்ட எட்டு அறிஞர்கள் இருந்தனர். கங்கா தேவி எழுதிய "மதுரை விஜயம்" என்ற நூல், அவரது கணவர் குமார கம்பணாவின் தமிழ்நாட்டு வெற்றியைக் குறிப்பிடுகிறது. நல்லூர் வீரகவிராயரின் அரிச்சந்திரப் புராணம், பவனந்தி முனிவரின் நன்னூல் போன்றவை விஜயநகர காலத்தில் எழுதப்பட்ட முக்கிய தமிழ் இலக்கியங்களாகும்.

 விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி :

திராவிடக் கட்டடக் கலையும், இந்தோ - சரசானிக் கட்டடக் கலையும் விஜயநகர மன்னர்கள் காலத்தில் சிறப்புற்று விளங்கின. விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மதுரை அரண்மனை இந்தோ - சரசானிக் கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

வேலூர் கோட்டையிலுள்ள கோயில் இவர்களது திராவிடக் கட்டடக்கலைக்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றது. விஜயநகர மன்னர்கள் பின்பற்றிய கடைசி கட்டடக்கலை முறை மதுரைக் கட்டடக்கலை முறையாகும். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு தமிழகத்தில் நாயக்கர்கள் சுதந்திர ஆட்சியாளர்களாக உருவெடுத்தனர். விஜயநகர அரசின் கடைசி அரசர் மூன்றாம் ஸ்ரீரங்கர். கி.பி.1614 - இல் விஜயநகரம் முழுமையாக வீழ்ச்சியடைந்தது.

Also Read : தமிழ்நாட்டில் பக்தி இயக்கம்!!!

Previous Post Next Post