விக்கிரமாதித்தனிடம் வேதாளம் புதிர் கதை கூறுதல் :

ஒரு ஊரில் திவாகரன் என்ற செல்வந்தன் வாழ்ந்து வந்தார். அவருக்கு கலா என்ற ஒரு மகள் இருந்தாள். அந்தக் கலா நன்கு வளர்ந்து, திருமண வயதை எட்டியதும் அவளுக்கு மாப்பிள்ளைத் தேடத் தொடங்கினார் அவள் தந்தை திவாகரன். ஏதோ ஒரு காரணத்தால் தன் மகள் கலாவுக்கு சரியான வரன் அமையாமல் தள்ளிக் கொண்டே போனது.

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன், மரத்தின் மீதேறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கிழே இறக்கி தன் முதுகில் சுமந்து கொண்டான். அப்போது தான் ஒரு கதை சொல்லப்போவதாகவும் அக்கதையின் முடிவில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலை கூறவேண்டும் என்று விக்ரமாதித்தியனிடம் கூறிய வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது. ஒரு ஊரில் திவாகரன் என்ற செல்வந்தன் வாழ்ந்து வந்தார். அவருக்கு கலா என்ற ஒரு மகள் இருந்தாள். அந்தக் கலா நன்கு வளர்ந்து, திருமண வயதை எட்டியதும் அவளுக்கு மாப்பிள்ளைத் தேடத் தொடங்கினார் அவள் தந்தை திவாகரன். ஏதோ ஒரு காரணத்தால் தன் மகள் கலாவுக்கு சரியான வரன் அமையாமல் தள்ளிக் கொண்டே போனது.

இதனால் கவலையடைந்த கலாவின் தாய், தன் சகோதரனான கோபியின் உதவியை நாடினார். கோபி தன் நண்பனும், புகழ்பெற்ற ஜோதிடருமான கெளசிகனிடம், கலாவின் ஜாதகத்தைக் காட்டி அவளின் திருமண யோகத்தைக் குறித்து கேட்டான். கலாவின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்த கௌசிகன் "கலாவின் ஜாதகம் சாட்சாத் அந்த சீதாதேவியின் ஜாதகத்தை ஒத்திருப்பதாகவும், அந்த சீதையைப் போலவே அவள் சிறிது காலம் துன்பம் அனுபவிப்பாள், ஆனால் இறுதியில் எல்லாம் நன்மையாக முடியும்" என்று கூறினார்.

மேலும் ஜெய்புரி என்ற ஊரிலுள்ள ராமர், சீதை கோவிலுக்கு கலா மற்றும் அவள் குடும்பத்தினர் சென்று தரிசித்து, அங்கு தரப்படும் பிரசாதத்தை வாங்கி கலா தன் கையால் ஒரு உத்தமனுக்கு தந்தால், அவள் திருமணம் நடைபெறும் என்று கூறினார் ஜோதிடர் கௌசிகன். கௌசிகன் இறுதியாக கூறிய உத்தமனை தங்களால் அடையாளம் காண முடியாதென்றும், ஆதலால் கௌசிகனும் தங்களுடன் கோவிலுக்கு வந்து அந்த உத்தமன் யாரென்று காட்ட வேண்டும் என கூறினார்.

இதற்கு ஒப்புக்கொண்ட கௌசிகனும், கலாவின் குடும்பத்தோடு ஜெய்புரி கோவிலுக்கு சென்று ராமர் சீதையை தரிசித்து, அங்கு தந்த பிரசாதத்தை கலா தன் கைகளில் பெற்றுக் கொண்டான். பிறகு அனைவரும் உத்தமமான ஒரு மனிதனைத் தேடி, ஒரு மாட்டு வண்டியில் ஊர் முழுவதும் சுற்றி வந்தனர். அப்போது ஒரு வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தச் சொன்ன கௌசிகன், கலாவை அந்த வீட்டிலிருப்பவர்களுக்கு தன் கைகளிலிருக்கும் பிரசாதத்தை தருமாறு கூறினார்.

கலா உள்ளே சென்ற போது அவ்வீட்டிற்குள்ளிலிருந்து வீரபத்திரன் என்ற திருமணமாகாத வாலிபன் வெளியே வந்தான். கலாவைக் கண்ட வீரபத்திரன் அப்படியே பிரமித்து நின்றான். கோவில் பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளுமாறு கலா அவனிடம் கூறினாள். இதைக் கேட்டு வெளியில் வந்த வீரபத்திரனின் பெற்றோர்களும் கலாவை கண்டவுடன் மகிழ்ந்தனர். கலா யாரென்று விசாரித்தப்பின் வெளியிலிருந்த அவளின் பெற்றோரை உள்ளே அழைத்து தங்கள் மகன் வீரபத்திரனுக்கு, கலாவை திருமணம் செய்ய பெண் கேட்டனர். 

இருவரின் ஜாதகத்தையும் ஆராய்ந்த ஜோதிடர் கெளசிகன், இருவருக்கும் திருமணம் செய்யலாம் என்று கூறினார். அதன்படி அவ்வூரிலேயே கலாவுக்கும், வீரபாத்திரனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, கலாவின் குடும்பத்தாரும். கெளசிகனும் ஊர்திரும்பினர். திரும்பும் வழியில் இரவு ஒரு சத்திரத்தில் தங்கினர். மறுநாள் அதிகாலை அச்சத்திரத்தின் அருகிலிருந்த குளத்தில் நீராடச் சென்றார் கௌசிகன்.

அப்போது அங்கிருந்த மரத்திலிருந்து ஒரு பூதம் கெளசிகனை வழிமறித்து, "நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில்களை கூறவில்லையெனில் உன்னைக் கொன்று விடுவேன்" என கௌசிகனை மிரட்டியது. இதைக் கண்டு சிறுதும் அஞ்சாத கௌசிகன்" நீ ஏதோ ஒரு சாபத்தின் காரணமாகேவே இவ்வாறு பூதமாக அலைகிறாய், அந்த சாபம் தீருவதற்கான வழியை நான் உனக்கு கூறுகிறேன் "என்று அப்பூதத்திடம் கூறினார்.

இதைக்கேட்ட கௌசிகன் "அப்படியான சக்தி பெற்ற பழத்தை, ஒரு குழந்தை பாக்கியமற்ற புண்ணிய வதியான பெண்ணுக்குத் தந்தால், உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்" என்று கூறினார். அதைக் கேட்ட அந்த பூதம் "தனக்கு யார் புண்ணியவதி என்று அடையாளம் தெரியாதென்றும், தாங்கள் தான் அப்படியான பெண்ணைக் காட்ட வேண்டும்" என்று கூறியது. அதைக் கேட்ட கெளசிகன் அப்பூதத்தை சிறிது காலம் பொறுத்திருக்குமாறு கூறிச் சென்றார். இதற்கிடையில் கலா, வீரபத்திரன் திருமணம் முடிந்து இல்லறம் நடத்தினர். இப்படி மூன்றாண்டுகள் இல்லற வாழ்க்கைக்கு பின்பும் கலாவிற்கு, குழந்தை பேறு கிட்டவில்லை. 

இதனால் கலாவின் மீது கோபம் கொண்ட வீரபத்திரனின் பெற்றோர்கள், அவர்களின் ஒரு உறவுக்காரப் பெண்ணை வீரபத்திரனுக்கு இரண்டாம் திருமணம் செய்ய முயற்சித்தனர். இந்த தூரத்து உறவுக்கார பெண்ணின் தந்தை, ஒரு ஜோதிடனை அணுகி "கலாவிற்கு குழந்தை ஒருபோதும் பிறக்காது என்றும், என் மகளைத் வீரபத்திரன் திருமணம் செய்தால் குழந்தை பிறக்கும் என்றும் வீரபத்திரனின் பெற்றோரிடம் நீ கூறினால், நான் உனக்கு அதிக பணம் தருகிறேன் என்று கூறி ஜோதிடரின் மனதை மயங்கினான்.

அதன் படியே அந்த ஜோதிடனும் செய்தான். அப்போது அங்கே வந்த கௌசிகன் அந்த ஜோதிடரிடம் "கலா தன் கணவன் மூலமாக இன்னும் இரண்டு மாதத்தில் கருத்தரிக்கா விட்டால் தான் ஜோதிடத் தொழிலையே விட்டு விடுவதாகவும், அதுவே அந்த ஜோதிடர் தோற்றால் செருப்பு மாலை அணிவித்து, கழுதையின் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவாய் என்று சவால் விடுத்தார். இதைக் கேட்டு பயந்துவிட்ட அந்த ஜோதிடன் அங்கிருந்து ஓடி விட்டான்.

இப்போது நேரே அப்பூதமிருந்த மரத்திற்குச் சென்ற கௌசிகன், அப்பூத்திடம் "உனக்கு சாப விமோச்சனம் கிடைக்க, ஒரு புண்ணியவதிக்கு கொடுக்க. இப்போது அந்த மந்திர சக்தி ஏற்றப்பட்ட பழத்தைக் தருமாறு" கேட்டான். அதன் படியே அப்பழத்தைக் கொடுத்த பூதம், சாப விமோச்சனம் கிடைத்து மறைந்தது. அந்தப் பழத்தை வாங்கிக் கொண்ட கெளசிகன் நேராக கலாவிடம் சென்று அந்தப் பழத்தைத் தந்தான். அதை சாப்பிட்ட கலா, அதன் பின் இரண்டு மாதங்களில் கருத்தரித்து, பத்து மாதம் கழித்து ஒரு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். 

வேதாளம் கூறிய புதிர் கதையிலிருந்து விக்கிரமாதித்தனிடம் கேள்வியை கேட்டது வேதாளம்!

இங்கு இக்கதையை நிறுத்திய வேதாளம் விக்ரமாதித்தியனிடம் "கௌசிகன் நினைத்திருந்தால் எப்போதோ அந்த பூதத்திடம் அப்பழத்தைப் பெற்று, கலாவின் குறையைத் தீர்த்திருக்கலாம். அவளை இவ்வளவு காலம் தவிக்க விட்டது ஏன்? மேலும் அப்பூதத்தையும் இத்தனைக் காலம் காக்க வைத்தது ஏன்? பதில் கூறு விக்ரமாதித்தியர்" என்று சொன்னது.

சற்று நேரம் யோசித்த விக்ரமாதித்தியன் "கௌசிகன் ஒருவரின் விதியை கணிக்கும் ஜோதிடன் தானே தவிர அவர்களின் விதியை தீர்மானிக்கும் கடவுளல்ல, கலாவின் ஜாதகப் படி அவளுக்கு மூன்றாண்டுகள் கழித்து குழந்தைப் பிறக்கும் என்பது விதி. அதனால் மூன்றாண்டுகள் வரைக் காத்திருந்தான், அது போலவே அப்பூதத்திற்கும் மூன்றாண்டுகள் கழித்தே சாப விமோச்சனம் கிடைக்கும் என்று கௌசிகன் கணித்திருந்தான். 

தகுந்த காலம் வந்தவுடன் இருவருமே ஒருவருக்கொருவர் தங்கள் சாபங்களை நீக்கிக் கொள்ளுமாறு செய்ய கௌசிகன் செய்த இச்செயல், இருவரையும் தவிக்க விடுவதற்காக எடுக்கப்பட்ட முடிவல்ல, மாறாக இருவருக்குமே நன்மை ஏற்பட, நன்கு ஆலோசித்து கெளசிகன் எடுத்த முடிவு" என்று பதிலளித்தான் விக்ரமாதித்தியன்.

Previous Post Next Post