மதுரை சுல்தானியம் தேற்றம் :

மதுரை சுல்தானியம் அல்லது மாபார் சுல்தானியம், பதினான்காம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்ட ஒரு சிற்றரசாகும். பாண்டியப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின் நடைபெற்ற இஸ்லாமிய படையெடுப்புகளால் தோன்றிய இந்த சுல்தானியம், பின்னர் விஜயநகரப் பேரரசின் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது. இதுவே தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆட்சிபுரிந்த ஒரே இஸ்லாமிய அரசு ஆகும். மாலிக்கபூர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து, இராமேஸ்வரம் வரை வந்து வெற்றி கண்டார். 

பின்பு குஸ்ருகான் கி.பி. 1318 - இல் பாண்டியர் அரசின் மீது படையெடுத்தான். பின்னர் கியாசுதீன் துக்ளக்கின் மகன் உலூக்கான் என்பவன் கி.பி.1323 - இல் பராக்கிராம பாண்டியனைத் தோற்கடித்து, மதுரையை டெல்லி சுல்தானியத்தின் பகுதியாக அறிவித்தான். பாண்டியநாடு, மாபார் என்ற பெயருடன் டெல்லி சுல்தானியத்தின் ஐந்து தென்னிந்திய பிரதேசங்களுள் (மாபார், தேவகிரி, டிலிங்க், கம்பிலி, துவாரசமுத்திரம்) ஒன்றாகியது. இதுவே மதுரை சுல்தானியம் என அழைக்கப்பட்டது.

1325 - ஆம் ஆண்டு உலூக் கான் முகமது பின் துக்ளக் என்ற பெயருடன் டெல்லி சுல்தானாக முடிசூடினார். டெல்லி சுல்தான் முகமதுக்கு பின் துக்ளக் கி.பி.1327 - இல் மதுரையின் ஆளுநராக சைய்யது ஜலாலுதின் அஷன் ஷா என்பவரை நியமித்தார். 1335 - இல் முகமது பின் துக்ளக்கிற்கு எதிராக ஏற்பட்ட கலகத்தில், அஷன்ஷா தன்னை சுதந்திர மன்னராக அறிவித்துக் கொண்டார். இவ்வாறாக 1335 - இல் மதுரையின் முதல் சுல்தான் என்ற பெருமையுடன் ஜலாலுதீன் அஷன் ஷா ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.

ஜலாலுதீனின் மகளை மொரோக்கோ நாட்டின் வரலாற்றாளர் இபுன் பதூதா மணந்திருந்தார். 1340 - ஆம் ஆண்டு ஜலாலுதீன் அவருடைய பிரபு (சிற்றரசர்) ஒருவரால் கொலை செய்யப்பட்டார். அஷன் ஷாவை தொடர்ந்து அலாவுத்தீன் உதாஜி, சுல்தான் குத்புதீன், கியாசுதீன் தமகன் ஷா என பல சுல்தான்கள் ஆட்சி செய்தனர். கி.பி. 1371 - இல் விஜய நகரப் பேரரசின் தளபதி குமாரகம்பணன், மதுரை சுல்தான் பக்ருதீன் முபாராக் ஷாவைத் தோற்கடித்து மதுரை சுல்தானியத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தான்.

மதுரை சுல்தானியம் வீழ்ச்சி :

குமார கம்பணரின் மனைவி கங்காதேவி எழுதிய மதுராவிஜயம் என்ற நூலில் இப்படையெடுப்பு விவரிக்கப்பட்டுள்ளது. பின்பு திறமையற்ற ஆட்சியாளர்களின் ஆட்சியால் மதுரை சுல்தானியம் வீழ்ச்சி அடைந்தது. மதுரையின் கடைசி சுல்தானான சிக்கந்தர் ஷாவை கி.பி.1378 - இல் இரண்டாம் புக்கர் என்ற விஜய நகர மன்னர் வென்றார். இதன் மூலம் மதுரை சுல்தானியத்தின் ஆட்சி முடிவுற்றது. மதுரை விஜயநகரப் பேரரசின் கீழ் வந்தது.

Previous Post Next Post