தமிழகத்தை ஆட்சி செய்த பண்டைய அரசுகளான, பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில் மக்கள் சைவம், வைணவம் ஆகிய சமய வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர். அதனை அன்றையக் காலகட்டத்தில் நாயன்மார்களும், ஆழ்வார்களும் தழைத்தோங்கிடச் செய்தனர்.

தமிழகத்தை ஆட்சி செய்த பண்டைய அரசுகளான, பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில் மக்கள் சைவம், வைணவம் ஆகிய சமய வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர். அதனை அன்றையக் காலகட்டத்தில் நாயன்மார்களும், ஆழ்வார்களும் தழைத்தோங்கிடச் செய்தனர்.

நாயன்மார்கள் வரலாறு (Nayanars)

சிவபெருமானை முழு முதல் தெய்வமாக வணங்கியவர்கள் சைவர்கள் எனப்பட்டனர். சைவத் துறவிகளே நாயன்மார்கள் என அழைக்கப்பட்டனர். நாயன்மார்கள் மொத்தம் 63 பேர் ஆவர். அவர்கள் சைவ சமயத்தை நாடெங்கும் பரப்பினார்கள். அவர்களில் திருநாவுக்கரசர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் முதன்மையானவர்களாவர்.

சிவபெருமானை முழு முதல் தெய்வமாக வணங்கியவர்கள் சைவர்கள் எனப்பட்டனர். சைவத் துறவிகளே நாயன்மார்கள் என அழைக்கப்பட்டனர்.

திருநாவுக்கரசர் என்கின்ற அப்பர் கி.பி.600-ஆம் ஆண்டில் தென்னாற்காடு மாவட்டத்தில் பிறந்தார். முதலில் சமண சமயத்தை சார்ந்திருந்த அப்பர் தனது தமக்கை திலகவதி அம்மையாரின் தாக்கத்தினால் சிவபக்தரானார். இவர் 49,000-க்கும் மேற்பட்ட பதிகங்களை எழுதியுள்ளார். எனினும் 311 பதிகங்களே இதுவரை கிடைத்துள்ளன.

ஒரே கடவுள் என்ற கோட்பாட்டையுடைய மாணிக்கவாசகர், கடவுளை அடைய ஒரே வழி 'அன்பு' மட்டுமே தவிர, சடங்குகள் இல்லை என உறுதியாக அறிவுறுத்தினார். இவருடைய நூல் திருவாசகம் ஆகும்.

சம்பந்தர் 16,000 பதிகங்களைப் பாடினார் எனக் கூறப்படுகிறது, எனினும் 384 பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

தென்னாற்காடு மாவட்டத்தில் எட்டாவது நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பிறந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் 38,000 பதிகங்களை பாடினார் என அறிகிறோம். இருப்பினும் 100 பதிகங்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன.

சேக்கிழாரின் பெரியபுராணம் (நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்று நூல்) மற்றும் தேவாரம், திருவாசகம், திருமுறை ஆகிய நூல்கள் இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட முக்கிய நூல்கள் ஆகும். இந்நூல்களின் பாக்களில் தத்துவம், இலக்கியம் மற்றும் பக்தி ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.

நாயன்மார்கள் அருளிய பாடல்கள் அனைத்தும் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டது. அந்த தொகுப்பு சைவத்திருமுறைகள் எனப்படுகின்றது. மொத்தம் 12 சைவத் திருமுறைகள் உள்ளன. அவை,

1. திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 1,2,3 திருமுறைகளாகும். 
2. திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் 4,5,6 திருமுறைகளாகும்.
3. சுந்தரமூர்த்தி அருளிய தேவாரம் ஏழாம் திருமுறையாகும். 
4. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையார் எட்டாவது திருமுறையாகும்.
5. திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது பேர்கள் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறையாகும். 
6. திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும். 
7. திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் முதலிய பன்னிருவர் அருளியவை பதினோராம் திருமுறையாகும். 
8. சேக்கிழார் அருளிய பெரிய புராணம் பன்னிரெண்டாம் திருமுறையாகும்.

முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும்.  மேல்நாட்டு அறிஞராகிய போப்பையர் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

ஆழ்வார்கள் வரலாறு (Alvars)

திருமாலை வணங்கியவர்கள் வைணவர் எனப்பட்டனர். வைணவத்துறவிகளுக்கு ஆழ்வார்கள் என்று பெயர். ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவர்.

1.பொய்கை ஆழ்வார்
2.பூதத்தாழ்வார்
3.பேயாழ்வார்
4.மதுரகவியாழ்வார்
5.பெரியாழ்வார்
6.ஆண்டாள்
7.திருப்பாணாழ்வார்
8.திருமங்கையாழ்வார்
9.திருமழிசையாழ்வார்
10.தொண்டரடிப் பொடியாழ்வார்
11.நம்மாழ்வார்
12.குலசேகர ஆழ்வார்

ஆழ்வார்களில், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள் ஆவார். இவர் பெரியாழ்வாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி ஆழ்வாரான மதுரகவியாழ்வார், நம்மாழ்வாரின் சீடர் ஆவார்.

திருமாலை வணங்கியவர்கள் வைணவர் எனப்பட்டனர். வைணவத்துறவிகளுக்கு ஆழ்வார்கள் என்று பெயர். ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவர்.

ஆழ்வார்கள் பாடிய சுமார் 4000 பாடல்களை நாதமுனி என்பவர் நாலாயிரத் திவ்யபிரபந்தம் என்னும் நூலாகாத் தொகுத்தார். இந்நூல் முதலாயிரம், பெரிய திருமொழி, இறைப்பா, திருமொழி என நான்கு பகுதிகளைக் கொண்டது. இந்நூல் இருபத்திநான்கு நூற்களால் ஆனது. இந்நூலில் காணப்படுகின்ற பாடல்களில் அதிக பாடல்களை நம்மாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் பாடியுள்ளனர். நம்மாழ்வாரின் திருமொழி 'திராவிட வேதம்" என்று அழைக்கப்படுகிறது. 

பக்தி இயக்கத்தின் தாக்கம்

பக்தியியக்கத்தின் விளைவாக தஞ்சாவூர், சிதம்பரம். கங்கைகொண்ட சோழபுரம் போன்ற இடங்களில் பிரமாண்டமான கோயில்கள் எழுப்பப்பட்டன.

இறைவன், இறைவி மற்றும் துறவிகளுக்காக, உலோக சிற்பங்கள் வடிக்கப்பட்டு, அவை விழாக்காலங்களில் ஊர் முழுவதும் உலா எடுத்துச் செல்லப்பட்டன. வட்டார மொழிகளில் அழகிய பாடல்கள் இறைவன் மீது பாடப்பட்டன.

இராமலிங்க அடிகள் வாழ்க்கை வரலாறு (Ramalinga Swamigal) 1823-1874)

வள்ளலார் என்று அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகள் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சின்ன மருதூர் என்னும் கிராமத்தில் 1823-ஆம் ஆண்டு பிறந்தார்.

வள்ளலார் என்று அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகள் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சின்ன மருதூர் என்னும் கிராமத்தில் 1823-ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் 19-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய சமூக-சமய சீர்த்திருத்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். இளம் வயதிலேயே ஆன்மீக உணர்வு நிறைந்தவராக காணப்பட்டார்.

இவர் தனது 23 வயதில் துறவறத்தை மேற்கொண்டார். சென்னையில் தங்க சாலையில் சிறிதுகாலம் வசித்தார். தங்க சாலையே தற்போது வள்ளலார் நகர் என அழைக்கப்படுறிது.

துறவறத்தை மேற்கொண்ட பின்னர் வடலூர் சென்றார். அங்கு சாதிபேதமற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், தமது கருத்துக்களை பரப்புவதற்காக 1865-இல் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

இராமலிங்க அடிகள், தமிழ் மக்களிடையே சமய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தினார். கடவுள் வழிகாட்டுதலால் மட்டுமே சாதி வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று எடுத்துரைத்ததோடு, இறைவன் ஜோதி வடிவானவன்' என்றும் 'அருட்பெரும் ஜோதியாக' இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

பசி மற்றும் வறுமையே சமுதாயத்தின் அனைத்துத் தீமைகளுக்கும் காரணம் என வள்ளலார் நம்பினார். எனவே ஏழைகளின் பசியைப் போக்குவதற்காகவே 'சத்திய தருமசாலையை' வடலூரில் நிறுவினார்.

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' எனக் கூறிய அடிகளார் மனிதர்களிடத்து மட்டுமின்றி தாவரங்கள், புழு. பூச்சிகள் மற்றும் விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தினார். இதனையே 'ஜீவகாருண்யம்' (உயிர்களிடத்து அன்பு செலுத்துதல்) என்று அழைக்கிறோம்.

'மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி' என்பது வள்ளலாரின் போதனைகளில் மிக முக்கியமானதாகும். தியானம் செய்வதே சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார், வடலூருக்கு அருகில் மேட்டுக்குப்பம் என்ற இடத்தில் 1872-ஆம் ஆண்டு சத்திய ஞான சபையை நிறுவினார்.

இவரது பக்திப் பாடல்களின் தொகுப்பு திருவருட்பா என்றழைக்கப்படுகிறது. மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்யம் போன்றவை இவரது பிற இலக்கிய படைப்புகளாகும்.

ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள் வாழ்க்கை வரலாறு (Ayya Vaikundar)

1809-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமித்தோப்பு என்ற ஊரில் ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள் பிறந்தார். அவரது இயற்பெயர் முடிசூடும் பெருமாள் என்றாலும், அவரை முத்துக்குட்டி என்றே அனைவரும் அழைத்தனர். ஜாதிமுறை மற்றும் தீண்டாமைக்கு எதிராக அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். சமயச் சடங்குகளை அவர் சாடினார்.

1809-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமித்தோப்பு என்ற ஊரில் ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள் பிறந்தார்.

அவரது போதனைகள் காலப்போக்கில் 'அய்யாவழி' என்று பெயர் பெற்றது. 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில், அய்யாவழி ஒரு தனிப்பட்ட சமயமாக ஏற்றக்கொள்ளப்பட்டது. தென் திருவாங்கூர் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் அது வேகமாகப் பரவியது.

அவரது மறைவுக்குப் பிறகு, அவர் இயற்றிய சமய நூல்களான அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் மற்றும் அவரது போதனைகளை அடிப்படையாகக் கொண்டு அய்யாவழி சமயம் பரவியது. பல இடங்களில் 'நிழல் தங்கல்' என்ற வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டன.

நாகூர் ஆண்டவர் வாழ்க்கை வரலாறு (Nagoor Andavar)

நாகூர் ஆண்டவர் கி.பி.16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர், மீரான் சாகிப் என்றும் குவாதிர் வாலி என்றும் மக்களால் புகழப்பட்டார். தமிழகத்தில், நாகூரில் இவரின் கல்லறை உள்ளது. இக்கட்டட அமைப்பிலும், இங்கு இடம்பெறும் வழிபாட்டு முறைகளிலும், இந்துக்களின் தாக்கம் காணப்படுகின்றது.

நாகூர் ஆண்டவர் கி.பி.16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர், மீரான் சாகிப் என்றும் குவாதிர் வாலி என்றும் மக்களால் புகழப்பட்டார்.

மேலும் இந்துக்களின் சடங்குகளான, சந்தனம் பூசுதல், பிரசாதம் வழங்குதல், மொட்டையடித்தல் ஆகியனவும் நடைபெறுகின்றன. இங்கு நடைபெறும் கந்தூரி உருஸ் என்னும் விழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

பக்தி இயக்கத்தை பரப்பியோர்

பக்தி இயக்கம் முதலில் தென்னிந்தியாவிலேயே தொடங்கியது. பின்னர் இராமானந்தர் அதனை வட இந்தியாவில் கொண்டுபோய் சேர்த்தார். கபீர் அதனை மக்களிடையே பிரபலமடையச் செய்தார். பழங்காலத்தில் தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர் சங்கராச்சாரியார் ஆவார். இவர் கேரளாவில், காலடி என்ற இடத்தில் பிறந்தார். ஒரே கடவுள் என்னும் அத்வைத கொள்கையை இவர் பரப்பினார்.

பிரம்மம் என்ற தலையாய சக்தியே உண்மை என உரைத்தார். சங்கராச்சாரியார் தமது சீடர்களுக்கு, அன்பு, உண்மை, மதிப்பளித்தல் போன்ற வாழ்க்கையின் அவசிய கோட்பாடுகளை உணரச் செய்தார்.

பக்தி இயக்கத்தை பரப்பியவர்களில் குறிப்பிடத்தக்கவர் இராமனுஜர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். இவர் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியார் ஆவார். பக்தியின் மூலம் முக்தியைப் பெறலாம் என்பது இவரது கொள்கை. வைணவமார்க்கத்தை கீழ்க்குடிகள் பின்பற்றுவதை இவர் வரவேற்றார்.

இராமானந்தர் இராமனுஜரின் சீடர் ஆவார். இவர் கடவுள் நம்பிக்கையை பெரிதும் போற்றினார். மக்கள் அனைவரையும் ஒரே குடும்பமாகக் கருதியதோடு அவர்கள் அனைவரையும் சகோதர, சகோதரிகளாக எண்ணினார். 

எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும், எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் இவரது சீடர்களாயினர். மக்கள் பேசும் மொழியிலேயே இவர் போதனை செய்தார். வல்லபாச்சாரியார் (கி.பி.1479-1531) கிருஷ்ணரை வழிபட்டார். மக்கள் ஒவ்வொருவரும் பக்தியின் மூலம் இறைவனை அடையலாம் என்று போதித்தார்.

பசவர், வீரசைவம் என்ற பிரிவைத் தொடங்கினார். சிவனை வழிப்பட்ட இவரைப் பின்பற்றியோர் வீரசைவர் அல்லது லிங்காயத்துகள் எனப்பட்டனர். சாதிமுறை, மறுபிறப்பு ஆகியவற்றை இவர் எதிர்த்தார்.

சைதன்யர், கி.பி.1485-இல் வங்காளத்தில் பிறந்தார். கிருஷ்ண வழிபாட்டை பிரபலப்படுத்தினார். அன்பும், பக்தியுமே இறைவனை அடையும் நல்வழி என்று போதித்தார். கபீர், (கி.பி.1425-1581) இராமானந்தரின் சீடராவார்.

இந்து - முஸ்லீம் ஒற்றுமையை முதன் முதலாக வலியுறுத்தியவர் இவரே. இவரைப் பன்பற்றியோர் கபீர்பந்த் எனப்பட்டனர். இவரது போதனைகளின் தொகுப்பு பிஜகா எனப்படுகிறது.

இவரது பாடல்கள் குறிப்பாக தோகா வகைப்பாடல்கள் மக்களிடையே தாக்கத்தையும் ஈர்ப்பினையும் ஏற்படுத்தின. மக்களின் வழிபாட்டுப் பாடல்களாகவும் அவை அமைந்தன. இவர் இராமனும், இரகீமும் ஒருவரே என்றார். சிலை வழிபாட்டையும் சாதிமுறைகளையும் இவர் கண்டித்தார்.

Previous Post Next Post