தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு (Dheeran Chinnamalai)

தமிழக விடுதலைப் போரில் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதார்கள் ஆகியோரை ஆங்கிலேயர் அழித்தபின் கொங்கு நாட்டில் தீர்த்தகிரி என்ற வீரர் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார்.

தமிழக விடுதலைப் போரில் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதார்கள் ஆகியோரை ஆங்கிலேயர் அழித்தபின் கொங்கு நாட்டில் தீர்த்தகிரி என்ற வீரர் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார்.

1799 முதல் 1805 வரை ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற தீர்த்தகிரி ஈரோடு மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் என்ற சிற்றூரில் 1756-ஆம் ஆண்டு பிறந்தார். 1799ஆம் ஆண்டு திப்பு சுல்தான் மரணமடைந்தபோது, கோவைப் பகுதிகளைக் கைப்பற்ற வந்த கர்னல் மேக்ஸ்வெல் தலைமையிலான ஆங்கிலப்படையை காவிரிக் கரையில் எதிர்த்து சின்னமலை வெற்றிபெற்றார்.

பின்னர் கொங்கு நாட்டில் 'ஓடாநிலை' என்னும் ஊரில் ஒரு கோட்டையைக் கட்டி, படையைத் திரட்டி ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். ஓடாநிலைப் போரிலும் ஆங்கிலேயர் சின்னமலையிடம் தோல்வியுற்றனர். சின்னமலையை போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர் அவரை சூழ்ச்சியால் வெல்ல முயன்றனர்.

சின்னமலையின் சமையல்காரன் ஆங்கிலேயரின் சூழ்ச்சிக்கு உதவிட; சின்னமலை சாப்பிடும்போது அவரைக் காட்டிக் கொடுத்தான். பின்பு ஆங்கிலேயர் சின்னமலையை சங்ககிரியில் தூக்கிலிட்டனர்.

தமிழகத்தில் கடைசியாக ஆங்கிலேயரை எதிர்த்து நின்றவர் தீரன் சின்னமலை என்று புகழப்பட்ட தீர்த்தகிரியாவார்.

வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு (Valliyappan Olaganathan Chidambaram Pillai)

சிதம்பரனார் ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாதபிள்ளை- பார்வதி அம்மையார் தம்பதியரின் மகனாக, 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் பிறந்தார்.

சிதம்பரனார் ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாதபிள்ளை- பார்வதி அம்மையார் தம்பதியரின் மகனாக, 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் பிறந்தார்.

அடிப்படைக் கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக் கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895-இல் வழக்கறிஞரானார்.

இவர் பாலகங்காதர திலகரால் கவரப்பட்டு 1905-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். இவர் தூத்துக்குடியில் சுதேசிப் பண்டக சாலையையும், தருமசங்க நெசவு சாலையையும் நிறுவினார்.

வ.உ.சி.யின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்த ஆங்கிலேய அரசு 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் பிபின் சந்திரபாலரின் விடுதலைக் கொண்டாட்டத்தின்போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களை தூண்டியதாகவும் கூறி, இவர் மேல் வழக்கு பதிவு செய்து இரட்டை ஆயுள் தண்டனையை வழங்கியது.

அரச நிந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்பிரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள், ஆக மொத்தம் 40 ஆண்டுகள் அந்தமான் சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப். ஃபின்ஹே, அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

முறையீட்டின்போது அவரை அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்குதான் அவர் செக்கிழுக்க வைக்கப்பட்டார். இந்திய அரசு இவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் 5, 1972 - இல் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 2011-இல் இந்திய அரசு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என்று பெயர் வைத்து சிறப்பு செய்துள்ளது.

இவர் 1906-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் பாண்டித்துரைத் தேவரை தலைவராகக் கொண்டு தூத்துக்குடியில் "சுதேசி நாவாய்ச் சங்கம்” என்கிற கம்பெனியைத் தொடங்கினார். அதன் சட்ட ஆலோசகராக சேலம் சி.விஜயாராகவாச்சாரியாரும், அதன் செயலாளராக சிதம்பரனாரும் திகழ்ந்தனர்.

கல்லியா மற்றும் லவோ என்ற இரு கப்பல்களை வாங்கி தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே இயக்கினார். இவர் மெய்யறிவு, மெய்யறம் ஆகிய நூல்களை எழுதியதுடன் விவேகபாணு, இத்துநேசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் விளங்கினார்.

தென்னாட்டுந் திலகர், கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்பல் என்நெல்லாம் புகழப்பட்ட சிதம்பரனார் 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் இயற்கை எய்தினார்.

வ.வே.சுப்பிரமணிய ஐயர் வாழ்க்கை வரலாறு (Varahaneri Venkatesa Subramaniam Aiyar)

வ.வே.சு ஐயர் என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் வரகனேரி வேங்கட சப்பிரமணி ஐயர், திருச்சி மாவட்டத்திலுள்ள வரகனேரி என்ற ஊரில் 1881-ஆம் ஆண்டு பிறந்தார். பல மொழிகளைக் கற்று புரட்சியாளரானார். இவரை கைது செய்ய ஆங்கிலேய அரசு முயன்றதால் பிரெஞ்சுப் பகுதியான புதுச்சேரியில் தலைமறைவாக இருந்தார்.

வ.வே.சு ஐயர் என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் வரகனேரி வேங்கட சப்பிரமணி ஐயர், திருச்சி மாவட்டத்திலுள்ள வரகனேரி என்ற ஊரில் 1881-ஆம் ஆண்டு பிறந்தார்.

வ.வே.சு.ஐயர் பின்பு ஆங்கில அரசு பொதுமன்னிப்பு வழங்கியதால் தமிழ்நாட்டுக்கு வந்த இவர். திரு.வி.க.-வைத் தொடர்ந்து 'தேசபக்தன்' என்ற நாளிதழை நடத்தினார்.

1921-இல் தேசபக்தனில் வவேசு எழுதிய ஆட்சேபகரமான தலையங்கத்தால் 9 மாத சிறைத் தண்டனை பெற்றார். சிறையில் இருந்தபோது "Story of Kambar" என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.

பின்னர் 1919 முதல் 1932 வரை “பாலபாரதி" என்ற மாத இதழை நடத்தினார். தீவிரவாத விடுதலைப் போராட்ட வீரரான வ.வே.சு ஐயர் நவீன தமிழ் சிறுகதைகளின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். வ.வே.சு.ஐயர் வீரசவார்க்கரின் "1857 முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டம்” என்ற நூலை மொழிபெயர்த்து, அரசாங்க தடையை மீறி உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பினார். இவர் 1910 இல் ரஷ்யாவுக்குச் சென்று வெடிகுண்டு தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொண்டு புதுவைக்கு வந்தார்.

புதுவையில் தஞ்சம் புகுந்த ஐயர் “தர்மாலயம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி பயங்கரவாதப் புரட்சியாளர்களுக்குக் குத்துச் சண்டை, மல்யுத்தம், கத்திச் சண்டை, துப்பாக்கிச் சுடல் ஆகியவற்றில் பயிற்சி அளித்தார்.

இவர் வீரவாஞ்சிநாதனின் குரு ஆவார். இவர்தான் வாஞ்சிநாதனுக்கு “பிரௌனிங்” கைத்துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சியளித்தார். இவர் சேரன்மாதேவியில் பாரத்துவாஜ ஆசிரமத்தை நிறுவினார்.

இவர் ஜூன் 3, 1925-இல் தமது 44-வது வயதில் பாபநாசம் அருவியில் விழுந்து இறந்தார்.

நீலகண்ட பிரம்மச்சாரி வாழ்க்கை வரலாறு (Neekakanda Brahmachary)

இவர் புதுவையில் தஞ்சம் புகுந்திருந்த போது 1910-ஆம் ஆண்டு “பாரதமாதா சங்கம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இவர் புதுவையில் 'சூர்யோதயம்' என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார்.

இவர் புதுவையில் தஞ்சம் புகுந்திருந்த போது 1910-ஆம் ஆண்டு “பாரதமாதா சங்கம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இவர் புதுவையில் 'சூர்யோதயம்' என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார்.

இவர் ஆஷ் கொலை வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு ஏழாண்டு கால சிறை தண்டனை பெற்றார். சிறை மீண்ட நீலகண்ட பிரம்மச்சாரி கம்யூனிஸ்டாக மாறினார். வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு 1922-இல் பத்தாண்டு கால சிறை தண்டனை பெற்றார்.

இவர் கர்நாடகத்திலுள்ள நந்திமலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்து அமைதியாக வாழ்ந்து தனது 88-ஆவது வயதில் உயிர் நீத்தார்.

பாரதியார் வாழ்க்கை வரலாறு (Subramania Bharati)

'கப்பையா' என்று அழைக்கப்பட்ட பாரதியார் தூத்துக்குடி (அப்போதைய திருநெல்வேலி) மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி அய்யர் லக்குமி அம்மையார் தம்பதியரின் மகனாக டிசம்பர் 11, 1882-இல் பிறந்தார்.

'கப்பையா' என்று அழைக்கப்பட்ட பாரதியார் தூத்துக்குடி (அப்போதைய திருநெல்வேலி) மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி அய்யர் லக்குமி அம்மையார் தம்பதியரின் மகனாக டிசம்பர் 11, 1882-இல் பிறந்தார்.

இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். மகாகவி, தேசிய கவி, சீட்டுக்கவி என்றெல்லாம் புகழப்படும் சுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திக்கையாசிரியர், விடுதலைப்போராட்ட வீரர், சமூக சீர்த்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர்.

இவர் தனது 11-ஆம் வயதில் பள்ளியில் படித்து வரும் பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். இவருடைய கவித்திறனை பாராட்டி "பாரதி" என்ற பட்டம் எட்டயபுரம் அரசவையால் வழங்கப்பட்டது. 1904-ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல், "விவேகபானு' இதழில் வெளியானது.

மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட்டு 1906 வரை பணியாற்றினார். பின்னர் தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகஸ்ட் 1920 முதல் செப்டம்பர் 1920 வரை சுதேசமித்திரனின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார்.

“சக்கரவர்த்தினி" என்ற மகளிர் மாத இதழிலும் (ஆகஸ்ட் 1903 முதல் ஆகஸ்ட் 1906 வரை) ஆசிரியராகப் பணியாற்றினார். 1907-ஆம் ஆண்டு ஏப்ரலில் 'இந்தியா' என்ற தமிழ் வார இதழையும் 'பாலபாரதம்' என்ற ஆங்கில இதழையும் வெளியிட்டார்.

1907-இல் பிபின் சந்திரபாலை சென்னைக்கு அழைத்து கூட்டங்கள் நடத்தி, அதுபற்றி 'இந்தியா' இதழில் கட்டுரை எழுதினார். எனவே ஆங்கிலேய அரசு பாரதியை கைது செய்ய பிடி ஆணை பிரப்பித்தது. இதனால் 1908 - இல் பாரதியார் புதுச்சேரிக்கு தப்பிச்சென்று 1918 வரை அங்கேயே தங்கியிருந்து, தமது தமிழ்ப் பணியைச் செய்தார்.

புதுச்சேரியில் இருந்தபடியே இந்தியா வார இதழையும், விஜயா என்ற தமிழ் நாளிதழையும், பாலபாரதம் என்ற ஆங்கில மாத இதழையும், சூர்யோதயம் (1910) என்ற புதுச்சேரியின் வார இதழையும் வெளியிட்டார்.

கர்மயோகி (டிசம்பர் 1909 - 1910), தர்மம் (1910) ஆகிய இதழ்களிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1909-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் விஜயா ஆகிய இதழ்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் தடைசெய்யப்பட்டன.

சுதேசி கீதங்கள், ஜென்ம பூமி, பாஞ்சாலி சபதம், மாதா மணிவாசகம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகிய பாடல் தொகுதிகளின் மூலம் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வையும் சுதந்திர உணர்வையும் ஏற்படுத்தினார்.

1918-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு பாரதியாரை கைது செய்து கடலூரில் உள்ள சிறையில் அடைத்தது. 1920-ஆம் ஆண்டு விடுதலையான பாரதியார் சென்னையிலுள்ள திருவல்லிகேனி பகுதியில் வசித்து வந்தார்.

அங்குள்ள பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு, நோய்வாய்ப்பட்டிருந்த பாரதியார், 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் இயற்கை எய்தினார்.

Previous Post Next Post