1. பாம்பன் தீவு

பாம்பன் தீவு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் ஜலசந்தியில் அமைந்துள்ளது. இது ராமேஸ்வரம் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. இது இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இராமேஸ்வரம் இத்தீவின் முக்கிய நகரமாகும்.

பாம்பன் தீவு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் ஜலசந்தியில் அமைந்துள்ளது. இது ராமேஸ்வரம் தீவு எனவும் அழைக்கப்படுகிறது.

2. குவியில் தீவு

குவிபில் தீவு ஒரு ஆற்றுத் தீவாகும். இது சென்னையிலுள்ள அடையாறு மற்றும் மயிலாப்பூர் பகுதிகளுக்கிடையில் அமைந்துள்ளது. இது அடையாறு நதியினால் உருவாக்கப்பட்டுள்ளது.

3. ஸ்ரீரங்கம் தீவு

இது காவிரி மற்றும் அதன் உபததியான கொள்ளிடம் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ள ஒரு ஆற்றுத் தீவாகும். இது திருச்சி நகருக்குள் அமைந்துள்ளது. இந்தத் தீவின் மையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

4. ஹரே தீவு

தூத்துக்குடி துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள இத்தீவு உள்ளூர் மக்களின் சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.

5. நல்ல தண்ணி தீவு

இது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள மக்கள் வசிக்கும் மூன்று தீவுகளில் ஒன்றாகும். குருசடை மற்றும் முசல் தீவு மற்ற இரு தீவுகளாகும்.

இது ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுக்காவின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இது தமிழக கடற்கரையிலிருந்து 4 கி.மீ. தென்கிழக்கில் மன்னார்வளைகுடாவில் அமைந்துள்ளது.

6. குருசடை தீவு

மன்னார் வளைகுடாவில் மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ள இத்தீவு "சுற்றுச்சூழல் சொர்க்கம்" (Ecological Paradisc) என்று அழைக்கப்படுகிறது.

இங்கு பவழப் பாறைகளும், டால்பின்கள் உள்ளிட்ட பல்வேறு அரியவகை கடல் உயிரினங்கள் வாழ்கின்றன. இது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தது.

ஆதாம் பாலம் (Adam's Bridge) இராமேஸ்வரத்திற்கும் இலங்கையிலுள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ளத் கண்ணாம்பு கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளே ஆதாம் பாலம் என்று அழைக்கப்படுகின்றது.

இது இராமர் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. 30 கி.மீ நீளம் கொண்ட இந்தப் பாலம் மன்னார் வளைகுடாவையும் பாக்ஜலசந்தியையும் பிரிக்கின்றது.

தமிழக கடற்கரை மாவட்டங்கள் (வடக்கிலிருந்து தெற்காக)

1. திருவள்ளூர்

2. தஞ்சாவூர்

3. சென்னை 

4. புதுக்கோட்டை

5. காஞ்சிபுரம்

6. இராமநாதபுரம்

7. விழுப்புரம் 

8. தூத்துக்குடி

9. கடலூர்

10. திருநெல்வேலி 

11. நாகப்பட்டினம் 

12. கன்னியாகுமரி

13. திருவாரூர்

தமிழக நீர்வீழ்ச்சிகள் 

Previous Post Next Post