1. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

இது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது. பஞ்சுநதி என்ற நீரோடையானது கொல்லிமலை உச்சியில் உள்ள அரபளீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியாக வீழ்கின்றது.

இது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையில் அமைந்துள்ளது. பஞ்சுநதி என்ற நீரோடையானது கொல்லிமலை உச்சியில் உள்ள அரபளீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியாக வீழ்கின்றது.

2. அய்யனார் நீர்வீழ்ச்சி

இது விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்திற்கு 10 கி.மீ. மேற்காக பேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

3. கேத்தரின் நீர்வீழ்ச்சி

இது கோத்தகிரியில் அமைந்துள்ளது. கோத்தகிரியில் காப்பி பயிரை அறிமுகப்படுத்திய எம்.டி.காக்பர்ன் என்பவரின் மனைவி கேத்தரின் நினைவாக இந்த நீர்வீழ்ச்சிக்கு கேத்தரின் நீர்வீழ்ச்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.

4. குற்றால அருவி

இது மேற்குந்தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும்.

குற்றால அருவிக்கரையில் குற்றாலநாதர் சன்னதி உள்ளது. குற்றாலத்தில் பல நீர்வீழ்ச்சிகள் அமைந்திருப்பதால் அது "தென்னிந்திய ஸ்பா" என்று சிறப்பிக்கப் படுகிறது.

5. ஒகேனக்கல் அருவி

தர்மபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது "இந்தியாவின் நயாகரா'" என்று அழைக்கப்படுகிறது.

6. கிள்ளியூர் நீர்வீழ்ச்சி

இது சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. 300 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி ஏற்காடு ஏரியிலிருந்து 3.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

7. கும்பக்கரை அருவி

தேனி மாவட்டத்தில் பெரியகுளத்திற்கு அருகில் பழனிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 8. குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி இது மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டிக்கு அருகில் குட்லாடம்பட்டி என்ற கிராமந்தில், சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

9. குரங்கு அருவி (Monkey falls)

இது கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறைக்கு அருகில் உள்ள ஆனைமலைத் தொடரில் அமைந்துள்ளது.

10. பைக்காரா நீர்வீழ்ச்சி

ஊட்டியிலிருந்து 19 கி.மீ தூரத்தில் பைக்காரா நதியில் அமைந்துள்ளது. பைக்காரா நதியே நீலகிரி மாவட்டத்தின் மிகப்பெரிய நதியாகும். 11. செங்குபதி அருவி இது கோயம்புத்தூர் நகரிலிருந்து 35 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

12. சிறுவாணி நீர்வீழ்ச்சி

இது கோயம்புத்தூருக்கு மேற்கில் 37 கி.மீ. தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது கோவை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது கோவைக்குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

13. சுருளி நீர்வீழ்ச்சி

இது தேனி மாவட்டத்தில் உத்தமபாளையத்திலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், கம்பம் நகரிலிருந்து 8 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இங்கு கீழ்ச் சுருளி, மேல்சுருளி என இரு இடங்கள் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சியை உருவாக்கும் சுருளி ஆறு மேகமலைத் தொடரில் உற்பத்தியாகின்றது.

14. திற்பரப்பு நீர்வீழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தி உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் கோதையாறு திற்பரப்பு நீர்வீழ்ச்சியை தோற்றுவிக்கின்றது. இது குமரிக்குற்றாலம் என்றும் அழைக்கப்படுகின்றது. கோதையாற்றின் குறுக்கே பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டுள்ளது.

15. உலக்கை அருவி

இது கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகியபாண்டிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. அருவித் தண்ணீர் வரும் இடம் பார்ப்பதற்கு ஓர் உலக்கை போல் இருப்பதால் இதற்கு உலக்கை அருவி எனப் பெயர் வந்தது.

16. வைதேகி நீர்வீழ்ச்சி

இது கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கோவை நகரிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 17. வட்டப்பாறை நீழ் வீழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் கீறிப்பாறை ரிசர்வ் காட்டுப் பகுதியில் உள்ள பழையாறு நதியில் வட்டப்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

18. காளிகேசம் அருவி

இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டியிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தமிழக ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள்

Previous Post Next Post