1. கோவளம்

இது சென்னைக்கு அருகில் கிழக்கு கடற்கரையில் மகாபலிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

2. எலியட்ஸ் கடற்கரை

இது சென்னையில் பெசன்ட் நகர் பகுதியில் அமைந்துள்ளது. மெரினா கடற்கரையின் தெற்கில் அமைந்துள்ள இக்கடற்கரையில் அஷ்டலட்சுமி கோயிலும், வேளாங்கன்னி தேவலாயமும் அமைந்துள்ளன.

இது சென்னைக்கு அருகில் கிழக்கு கடற்கரையில் மகாபலிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

முந்தைய சென்னை ஆளுநர் எட்வர்ட் எலியட்டின் நினைவாக இக்கடற்கரைக்கு எலியட்ஸ் கடற்கரை என்று பெயரிடப்பட்டது. இக்கடற்கரைக்கு ஓர் அடையாளமாக கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம் விளங்குகிறது. கடலில் மூழ்கிக்கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்ற தன்னுயிர் தந்த டச்சு மாலுமியின் நினைவாக இந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.

3. மெரினா கடற்கரை

இது உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாகும். இதன் நீளம் 13 கி.மீ. ஆகும். இதுவொரு மணற்பாங்கான கடற்கரையாகும். இது சென்னை நகரின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

4. தங்க கடற்கரை (Golden Beach)

இது வங்கக்கடலில் சென்னையில் அமைந்துள்ளது. இங்குள்ள வி.ஜி.பி. தங்கக் கடற்கரை சென்னையின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகிறது.

5. வெள்ளி கடற்கரை (Silver Beach)

இது கடலூர் மாவட்டத்தில் கடலூருக்கு அருகில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது சோழமண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள இரண்டாவது நீளமான கடற்கரையாகும். மேலும் இது ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது.

6. தனுஷ்கோடி

தனுஷ்கோடி பாம்பனுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து 29 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

1964-ஆம் ஆண்டுவரை சென்னை எழும்பூரிலிருந்து தனுஷ்கோடிக்கு போட்மெயில் என்ற இரயில் சேவை இயக்கப்பட்டது. 1964-ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் பாம்பன் இரயில் நிலையத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் ரயில் பாதையானது முற்றிலும் அழிக்கப்பட்டது.

சுவாமி விவேகானந்தர் 1893-ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக சமயங்கள் மாநாட்டில் பங்கேற்ற பிறகு கொழும்பு வழியாக தாயகம் திரும்பும்போது தனுஷ்கோடி வந்தடைந்தார்.

தமிழக நீர்வீழ்ச்சிகள்

Previous Post Next Post