தமிழ்நாட்டிலுள்ள ஆற்றல் வளம்

ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது ஆற்றல் வளங்களாகும். ஆற்றல் வளங்களை கீழ்க்கண்டவாறு இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை,

ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது ஆற்றல் வளங்களாகும்.

1. மரபு சார்ந்த ஆற்றல் வளங்கள் 
2. மரபு சாரா ஆற்றல் வளங்கள்

1. மரபு சார்ந்த ஆற்றல் வளங்கள் :

பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு மனிதனால் உபயோகப்படுத்தப்படும் தொல்லுயிர் சக்திகளான நிலக்கரி, இயற்கை வாயு, பெட்ரோலியம் மற்றும் அணு மின் சக்தி ஆகியவை மரபுச் சார்ந்த எரி சக்தி வளங்களாகும்.

முக்கிய மூன்று மரபுச் சார்ந்த எரிசக்தி வளங்களாவன :

1. அனல் மின் சக்தி வளங்கள்

2. புனல் (நீர்) மின் சக்தி வளங்கள்

3. அணுமின் சக்தி வளங்கள்

தமிழகத்தில் மின்சக்தியானது, நீர், காற்று, அணு மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தின் அனல்மின் நிலையங்கள் :

1. நெய்வேலி - அனல்மின் நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ளது.

2.மேட்டூர் - அனல்மின் நிலையம் சேலம் மாவட்டத்தில் உள்ளது.

3. எண்ணூர் - அனல்மின் நிலையம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது.

4. தூத்துக்குடி - அனல்மின் நிலையம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.

5. ஜெயங்கொண்டம் - அனல்மின் நிலையம் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது.

தமிழகத்தின் முதல் அனல்மின் திட்டம் நெய்வேலி அனல்மின் திட்டம்.

தமிழகத்தின் முதல் கூட்டுத்துறை திட்டம் ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டம். 

இந்திய அளவில் டீசல் அடிப்படையிலான அனல்மின் உற்பத்தியில் தமிழகம் (34%) முதலிடம் வகிக்கிறது.

தமிழகத்தின் நீர்மின் நிலையங்கள் :

1. பைகாரா - நீர்மின் நிலையம் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது.

2. குந்தா - நீர்மின் நிலையம் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது.

3. மோயார் - நீர்மின் நிலையம் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது.

4. ஆழியார் - நீர்மின் நிலையம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது.

5. பரம்பிக்குளம் - நீர்மின் நிலையம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது.

6. சோலையார் - நீர்மின் நிலையம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது.

7. மேட்டூர் - நீர்மின் நிலையம் சேலம் மாவட்டத்தில் உள்ளது.

8. பாபநாசம் - நீர்மின் நிலையம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது.

9. கோதையார் - நீர்மின் நிலையம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது.

10. பெரியார் - நீர்மின் நிலையம் மதுரை மாவட்டத்தில் உள்ளது.

11. சுருளியார் - நீர்மின் நிலையம் தேனி மாவட்டத்தில் உள்ளது.

தமிழகத்தின் முதல் நீர்மின் திட்டம் பைகாரா நீர்மின் திட்டமாகும்.

2010- ஆம் வருட புள்ளி விவர கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஆண்டிற்கு சராசரியாக 2,297 மில்லியன் வாட் நீர் மின் சக்தி உற்பத்திச் செய்யப்படுகிறது.

தமிழகத்தின் அணுமின் நிலையங்கள் :

1. கல்பாக்கம் - அணு மின்நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.

2. கூடங்குளம் - அணு மின்நிலையம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் முதல் அணு மின் நிலையம் சென்னைக்கு தெற்கே 80.கி.மீ. தொலைவில் உள்ள கல்பாக்கம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இந்தியாவில் முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் அணு மின் நிலையமாக இது விளங்குகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் என்னும் இடத்தில் மற்றொரு அணு மின் நிலையம் கட்டி முடிக்கும் நிலையில் உள்ளது. ஒவ்வொன்றும் 1000 மில்லியன் வாட் உற்பத்தி திறன் கொண்ட நான்கு உலைகள் இந்நிலையத்தில் அமைக்கப்பட உள்ளன.

2. மரபு சாராஆற்றல் வளங்கள்

1. சூரிய சக்தி

2. காற்றாடி சக்தி

3. ஓத அலை சக்தி

4. புவி வெப்ப சக்தி

5. உயிர் எரி சக்தி

6. கரும்பு 

கரும்பு சக்கையிலிருந்து பெறப்படும் சக்தி போன்றவை குறிப்பிடத்தக்க மரபு சாரா சக்தி வளங்களாகும்.

ஓத அலை சக்தி மற்றும் புவி வெப்ப சக்தியை தவிர்த்த மற்ற மரபு சாரா சக்தி வளங்கள் தமிழகத்தில் உபயோகிக்கப்படுகின்றன.

சூரிய சக்தி :

சூரிய சக்தியே மரபு சாரா எரி சக்தி வளங்களில் மிகப்பெரியச் சக்தி வளமாகும், போட்டான்கள் (Photons) மூலம் சக்தி பெறப்படுகிறது, இந்தியாவில் வருடத்திற்கு 250 முதல் 300 நாட்கள் வரை சூரிய ஒளி அபரிதமாகக் கிடைக்கின்றது.

சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற போட்டோவால்டிக் செல்கள் பயன்படுத்தப்படுகின்றன. சூரிய சக்தி நிலையங்கள் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது.

காற்றாடி சக்தி :

காற்று வீச்சினால் ஏற்படக்கூடிய ஆற்றலைப் பயனீட்டுச் சக்தியாக மாற்றி உபயோகிப்பதை காற்றாடி சக்தி என்கிறோம்.

தமிழ்நாட்டில் வருடத்திற்கு சராசரியாக 5,208 மில்லியன் வாட் காற்றாடி சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தியில் 55% தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது.

தமிழ்நாட்டில் முப்பந்தல், கயத்தாறு, ஆரல்வாய்மொழி, நாங்குநேரி, கல்தான் பேட்டை, பனங்குடி ஆகிய இடங்களில் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள காற்றாலை தளங்கள் மற்றும் உற்பத்தி அளவு :

1. ஆரல்வாய் மொழி கணவாய் (முப்பந்தல் பகுதி), கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது இதன் உற்பத்தி அளவு 1658 மெகாவட்டாகும்.

2. செங்கோட்டை கணவாய் (கயத்தாறு பகுதி) திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது இதன் உற்பத்தி அளவு 1105 மெகாவட்டாகும்.

3. பாலக்காட்டு கணவாய் (கீத்தனூர் பகுதி) கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது இதன் உற்பத்தி அளவு 1995 மெகாவட்டாகும்.

4. சென்னையின் கடலோரப் பகுதி, இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் மற்றும் பிறப் பகுதிகள் (தேனி, பழனி) மாவட்டத்தில் உள்ளது இதன் உற்பத்தி அளவு 450 மெகாவட்டாகும்.

ஓத அலைசக்தி :

ஓதங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சக்தி ஒத அலை சக்தி எனப்படும். கடலோரப் பகுதிகளில் ஒத அலைகளுக்குக் குறுக்காக குறுகியத் துளைகளை உடைய தடுப்பு அணைகளைக் கட்டுவதன் மூலம் ஓதச் சக்தியை உற்பத்திச் செய்ய முடிகிறது.

உயர் ஓத அலைகள் எழும் போது உண்டாகும் சக்தியானது, அணைகளிலுள்ள விசை சுற்றுக் கலன்களை சுழற்றுவதன் மூலம் மின்சக்தி உற்பத்திச் செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் என்ற இடத்தில் கடல் அலை மின்சக்தி நிலையம் அமைந்துள்ளது. உலகின் முதல் ஒதச் சக்தி நிலையம் பிரான்சில் கட்டப்பட்டது.

கரும்பு சக்கையிலிருந்து பெறப்படும் சக்தி :

கரும்பு ஆலைகளில் கரும்புச் சாற்றைப் பிழிந்தபின் கிடைக்கும் சக்கையிலிருந்து எரிப்பொருள் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 411 மில்லியன் வாட் மின்சாரம் 18 சர்க்கரை ஆலைகளில் உற்பத்திச் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள சர்க்கரை ஆலைகளின் இணை மின் உற்பத்தி நிலையங்கள் :

1. எம்.ஆர்.கே. கூட்டுறவு - சர்க்கரை ஆலை நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 7.50 மி.வா. ஆகும்.

2. செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 7.50 மி.வா. ஆகும்.

3. தரணி சர்க்கரை மற்றும் இரசாயன நிறுவனம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 15.00 மி.வா. ஆகும்.

4. இராஜஸ்ரீ சர்க்கரை மற்றும் இரசாயன நிறுவனம் தேனி மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 12.00 மி.வா. ஆகும்.

5. கோத்தாரி சர்க்கரை மற்றும் இரசாயன நிறுவனம் தேனி மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 12.00 மி.வா. ஆகும்.

6. டெரி எனர்ஜி நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 28.42 மி.வா. ஆகும்.

7. S.V.சர்க்கரை ஆலை நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 45.00 மி.வா. ஆகும்.

8. சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை நிறுவனம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 5.00 மி.வா. ஆகும்.

9. டெரி எனர்ஜி நிறுவனம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 18.68 மி.வா. ஆகும்.

10. EID பாரி இந்தியா நிறுவனம் கடலூர் மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 30.00 மி.வா. ஆகும்.

11. சக்தி சர்க்கரை ஆலை கடலூர் மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 7.50 மி.வா. ஆகும்.

12. அருணாச்சலம் சர்க்கரை ஆலை நிறுவனம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 5.50 மி.வா. ஆகும்.

13. பன்னாரி அம்மன் சர்க்கரை நிறுவனம் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 20.00 மி.வா. ஆகும்.

14. ஆரோ சக்தி நிறுவனம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 16.00 மி.வா. ஆகும்.

15. ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை கடலூர் மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 40.00 மி.வா. ஆகும்.

16. சக்தி சர்க்கரை ஆலை தனியார் நிறுவனம் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 32.00 மி.வா. ஆகும்.

17. இராஜஸ்ரீ சர்க்கரை இரசாயன நிறுவனம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 22.00 மி.வா. ஆகும்.

18. இ.ஐ.டி. பாரி இந்தியா நிறுவனம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 18.00 மி.வா. ஆகும்.

19. கோத்தாரி சர்க்கரை மற்றும் இரசாயன நிறுவனம் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது இதன் மின் உற்பத்தி அளவு 22.00 மி.வா. ஆகும்.

உயிர் எரி சக்தி

உயிர் எரி சக்திகள் பல்வேறு வகைகளில் பெறப்படுகிறது. உயிர் பொருட்களான திரவ எரி பொருள் மற்றும் உயிர் வாயுக்கள் போன்ற-வற்றிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நடப்பு நிலவரப்படி தமிழ்நாட்டில் 130 மில்லியன் வாட் மின்சார உற்பத்தி செய்யும் 13 நிலையங்கள் உள்ளன.

விருதுநகர் (சிவகாசி) - 2 உயிர் எரி சக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் உள்ளன

புதுக்கோட்டை மாவட்டத்தில் - 2 உயிர் எரி சக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் உள்ளன

திருவண்ணாமலை மாவட்டத்தில் - 1 உயிர் எரி சக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் உள்ளன

திண்டுக்கல் மாவட்டத்தில் - 1 உயிர் எரி சக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் உள்ளன

தேனி மாவட்டத்தில் - 1 உயிர் எரி சக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் உள்ளன

தஞ்சாவூர் மாவட்டத்தில் - 1 உயிர் எரி சக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் உள்ளன

மதுரை மாவட்டத்தில் - 1 உயிர் எரி சக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் உள்ளன

விருதுநகர் மாவட்டத்தில் - 1 உயிர் எரி சக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் உள்ளன

திருவள்ளூர் மாவட்டத்தில் - 1 உயிர் எரி சக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் உள்ளன

காஞ்சிபுரம் மாவட்டத்தில் - 1 உயிர் எரி சக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் உள்ளன

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - 1 உயிர் எரி சக்தி மின்சார உற்பத்தி நிலையங்கள் உள்ளன

தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB)

1948-ஆம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி, 1957-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி "தமிழ்நாடு மின்சார வாரியம்" தொடங்கப்பட்டது.

இந்திய மின்சாரச் சட்டம் - 2003 இன்படி நிர்வாக சீர்த்திருத்தம் மற்றும் மின் வினியோக சீரமைப்பு வசதிக்காக தமிழ்நாடு மின்சார வாரியம் 2010-ஆம் ஆண்டு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவை, 

1. தமிழ்நாடு மின்சாரவாரிய நிறுவனம்

2. தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம்

3. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 8249 மெகாவாட் ஆகும். இதில் 5288 மெகாவாட் மின்சாரம் மாநில அரசுத்துறை மூலமும், 1058 மெகாவாட் மின்சாரம் தனியார் துறை மூலமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் 1903 மெகாவாட் தமிழகத்தின் பங்காக மத்திய அரசிடமிருந்து பெறப்படுகிறது.

இந்தியாவில் ஜட்ரோபா தாவரத்தை பயன்படுத்தி பயோ-டீசல் தயாரிப்பதற்கான, பயோ-டீசல் கொள்கையை வகுத்துள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழகத்தில் அனல்மின் நிலையங்கள் மூலமே அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

தமிழ்நாடு மொத்த மின் உற்பத்தியின் அளவு :

1. அனல் மின்சாரம் - 29%

2. நீர்மின்சாரம் - 21%

3. தனியார் மின் உற்பத்தி - 12 %

4. எரிவாயு மின்உற்பத்தி - 5%

5. மற்றவை - 5%

6. மத்திய தொகுப்பிலிருந்து - 28%

Previous Post Next Post