தமிழ்நாட்டின் தொழில் வளம்

இரண்டாம் நிலைத் தொழிலான உற்பத்தித் தொழில் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாகும், மகாராஷ்டிரா மாநிலத்திற் அடுத்தபடியாக தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது தொழில்மயமான (Most Industrialized) மாநிலமாகத் திகழ்கின்றது.

தமிழ்நாட்டின் முதல் தொழிற்பேட்டை 1957ஆம் ஆண்டு கிண்டியில் தொடங்கப்பட்டது, தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

மாநிலத்தின் மொத்த வருமானத்தில் 24 விழுக்காடு தொழில்துறையின் மூலம் கிடைக்கிறது, இந்தியாவின் முதல் தொழிற்பேட்டை 1947-ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் முதல் தொழிற்பேட்டை 1957ஆம் ஆண்டு கிண்டியில் தொடங்கப்பட்டது, தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

நெசவுத் தொழிற்சாலை

இந்திய நெசவுத் தொழில் துறையில் பருத்தி இழை உற்பத்தி, நெசவுத் துணி, உள்ளாடை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியில் தமிழ்நாடு பெரும்பங்கு வகிக்கின்றது.

பருத்தி நூல், இழை மற்றும் துணி உற்பத்தியில் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 25 விழுக்காடு தமிழகத்தின் பங்களிப்பாகும்.

கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர், காரமடை, ஈரோடு, பவானி, திண்டுக்கல், திருமங்கலம், மதுரை, பாளையங்கோட்டை, பாபநாசம் மற்றும் தேனி ஆகியவை நெசவுத் தொழிலின் மையப்பகுதிகளாகும்.

கோயம்புத்தூர் மண்டலம் மிகப்பெரிய அளவில் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளதால் இதனை "தென் இந்தியாவின் மான்செஸ்டர்” என்று அழைக்கின்றனர்.

திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் நெசவுத் தொழிலின் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பதால், இப்பகுதி தமிழ்நாட்டின் "நெசவுப் பள்ளத்தாக்கு" என்று அழைக்கப்படுகிறது.

திருப்பூர் தமிழ்நாட்டின் 70 சதவீத உள்ளாடையை ஏற்றுமதி செய்கிறது, ஆடை மற்றும் படுக்கைவிரிப்புகளின் உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் முன்னிலை வகிக்கிறது, தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் என்ற சிறப்பு பெயரை கரூர் நகரம் பெற்றுள்ளது.

ஆயத்த ஆடைகள் :

தமிழகத்தில் திருப்பூர், சென்னை, ஈரோடு, சேலம் போன்ற இடங்களில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

பட்டு நெசவுத் தொழில் :

நாட்டின் பட்டு நெசவுத் தொழில் உற்பத்தியில் தமிழ்நாடு நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.

ஆரணி மற்றும் காஞ்சிபுரம் நகரங்களின் பாரம்பரிய கைத்தறி பட்டு உலகப் புகழ்பெற்றதாகும். இராசிபுரம் மற்றும் திருபுவனம் ஆகியவை குறிப்பிடத்தக்க பட்டு நெசவு மையங்களாகும்.

ஓசூரில் உள்ள பட்டுப் புழு வளர்ப்பு பயிற்சி மையம் விவசாயிகளுக்கு, விவசாயத்துடன் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி அளித்து ஊரகத்தின் உற்பத்தி திறனை உயர்த்த வகை செய்கின்றது.

செயற்கை இழை ஆடை உற்பத்தியில் மேட்டூர், மதுரை மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகள் சிறப்புடன் விளங்குகின்றன.

இந்தியாவின் முதலாவது தானியங்கி பட்டு நூல் சுற்றும் தொழிற்சாலை (India's first automatic silk realing unit) கோபிச்செட்டி பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகள் :

இந்தியாவின் 10 சதவீத சர்க்கரை தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 42 சர்க்கரை ஆலைகள் உள்ளன. அவற்றில் 16 கூட்டுறவு சங்கங்களாலும், 3 அரசாலும், 23 தனியாராலும் நிர்வகிக்கப்படுகின்றன.

விழுப்புரம்,கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்டங்கள் சர்க்கரை ஆலைகள் அதிகமுள்ள மாவட்டங்களாகும்.

சாறு பிழிந்தவுடன் கிடைக்கும் கரும்புச் சக்கை (Bagasse) காகித தொழிற்சாலைக்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

தமிழக அரசின் முயற்சியால் ஒருங்கிணைந்த சர்க்கரை வளாகங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் எரிசக்தி உற்பத்தி, எத்தனால் உற்பத்தி, திசு வளர்ப்பு ஆய்வகம், எரிசாராயம் உற்பத்தி, மண் பரிசோதனைக் கூடம் மற்றும் கூட்டு உரம் தயாரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒருங்கிணைந்த சர்க்கரை ஆலைகள்

1. கோத்தாரி - சதமங்கலம் - அரியலூர் மாவட்டம்

2. ராஜஸ்ரீ - செம்மேடு - விழுப்புரம் மாவட்டம்

3. தரணி - கலையநல்லூர் - விழுப்புரம் மாவட்டம்

4. சக்தி - மொடக்குறிச்சி - ஈரோடு மாவட்டம்

5. எம்.ஈ.சுகர்-இடைக்கல் - திருநெல்வேலி மாவட்டம்

6. ஸ்ரீ அம்பிகா-மன்ஜினி - சேலம் மாவட்டம்

7. தனலெட்சுமி ஸ்ரீநிவாசன் - உடும்பியம் - பெரம்பலூர் மாவட்டம்

8. பன்னாரி அம்மன் - கொலுந்தன்பட்டு - திருவண்ணாமலை மாவட்டம்

காகித தொழிற்சாலை

இந்தியாவின் காகித உற்பத்தியில் ஆந்திராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாம் நிலையில் உள்ளது, நாட்டின் 12 சதவீத காகிதம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.

தமிழ்நாட்டில் புக்காத்துறை (காஞ்சிபுரம்), பவானிசாகர், பள்ளிபாளையம், புகளூர், பரமத்தி வேலூர், கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, தொப்பம்பட்டி, நிலக்கோட்டை மற்றும் சேரன்மாதேவி ஆகிய இடங்களில் காகித தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் உலகவங்கியின் உதவியுடன் 1979-ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் புகளூருக்கு அருகாமையில் நிறுவப்பட்டது.

கரும்புச் சக்கையை மூலப்பொருளாகக் கொண்டு காகிதம் தயாரிப்பதில், உலகிலேயே மிகப்பெரிய ஆலையாக இவ்வாலை திகழ்கிறது, 

தோல் பதனிடும் தொழிற்சாலை

விலங்குகளின் தோலை "டானின்" என்ற அமிலப் பொருள் கொண்டு பதப்படுத்துதலை 'டானிங்' என்று கூறுவர்.

இந்தியாவின் 70 சதவீத தோல் பதனிடும் ஆலைகள் தமிழ்நாட்டில் உள்ளன, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 60 விழுக்காடு தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதியாகிறது.

சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பரவிக் காணப்படுகின்றன.

பெரிய விலங்குகள் மற்றும் மாடுகளின் தோலினை 'ஹைடு' (Hide) என்றும், சிறிய விலங்குகளின் தோலினை 'ஸ்கின்' (Skin) என்றும் கூறுவர்.

சென்னை, வேலூர், ஆம்பூர், இராணிப்பேட்டை, வாணியம்பாடி, திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் குறிப்பிடத்தக்க அளவில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இந்தியாவின் மொத்த தோல் காலணிகள் மற்றும் தோல்பொருட்கள் தயாரிப்பில் தமிழகத்தின் பங்கு 38 சதவீதமாகும், இந்தியாவின் மொத்த தோல்பொருட்கள் ஏற்றுமதியில் 42% தமிழகத்திலிருந்து ஏற்றுமதியாகிறது.

இந்தியாவில் தோல் பொருட்கள் (Finished Leather goods) ஏற்றுமதியில் வேலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் தோல்பொருட்களில் 37% வேலூரிலிருந்து தான் ஏற்றுமதியாகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள இராணிப்பேட்டை, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், தோல்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் மிகுதியாக உள்ளன.

சிமெண்ட்டு தொழிற்சாலை

தேசிய அளவில் சிமெண்ட் உற்பத்தியில் நான்காம் இடத்தினைப் பெற்றுள்ள தமிழ்நாடு, சுமார் 10 விழுக்காடு சிமெண்டினை உற்பத்தி செய்கிறது.

சங்ககிரி, மதுக்கரை, புலியூர், குன்னம், செந்துறை, அரியலூர், தால்மியாபுரம், மானாமதுரை, துலுக்கப்பட்டி, ஆலங்குளம், சங்கர் நகர், தாழையூத்து போன்றவை தமிழ்நாட்டின் சிமெண்ட்டு உற்பத்தி செய்யும் மையங்களாகும்.

மோட்டார் வாகன தொழிற்சாலைகள் 

இந்தியாவின் 21 சதவித பயனிகள் கார் மற்றும் 33 சதவித வணிக வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் 30 சதவித தொழில்களுக்கும் 35 சதவித ஆட்டோ உபரி பாகங்கள் உற்பத்திக்கும் சென்னையில் தொழிற்கூடங்கள் அமைந்துள்ளன. 

இதன் காரணமாக சென்னை "தெற்காசியாவின் டெட்ராய்ட்" (Detroit of South Asia) என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 8 சதவீதம் மோட்டார் வாகனத் தொழிலின் மூலம் கிடைக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள் :

1. ஹூண்டாய் கார் தொழிற்சாலை - இருங்காட்டுக்கோட்டை , காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

2. ஃபோர்டு மோட்டார்ஸ் - மறைமலைநகர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

3. லேண்ஸர் மிட்சுபுஷி - திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

4. ஸ்டேண்டர்டு மோட்டர்ஸ் - திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

5. என்ஃபீல்டு மோட்டார்ஸ் - இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

6. அசோக்லேலண்ட் - எண்ணூர் மற்றும் ஒசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

7. டி.வி.எஸ் மோட்டார்ஸ் - ஒசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

8. ரெனால்ட் நிஸான் - ஒரகடம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

9. டெய்ம்லர் - ஒரகடம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள் மிகுதியாக அமைந்துள்ளன.

முக்கிய டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்

1. அபொல்லோ டயர்ஸ் - ஒரகடம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

2. பிரிட்ஜ்ஸ்டோன் - ஒரகடம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

3. டன்லப் - அம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

4. ஜே.கே. டயர்ஸ் - ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

5. எம்.ஆர்.எஃப். டயர்ஸ் - திருவெற்றியூர், அரக்கோணம், வேலூர் மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

6. மைக்கலின் - திருவெற்றியூர், தெருவைக் கண்டிகை (கும்மிடிபூண்டி அருகில்), திருவள்ளுவர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது

இரசாயன தொழிற்சாலைகள்

இரசாயனம், மருந்து, உரம், பெட்ரோலியப் பொருட்கள், சோப்பு, அழகுப்பொருட்கள், செயற்கை இரப்பர், பிளாஸ்டிக் உற்பத்தி ஆகியவை இரசாயன தொழில்களில் உள்ளடங்கியதாகும்.

மணலி,கடலூர், பனங்குடி (நாகப்பட்டினம்) மற்றும் தூத்துக்குடியில் இரசாயன தொழிற்சாலைகள் பரவலாக அமைந்துள்ளன.

உரத்தொழிற்சாலை :

தமிழகத்தில் மணலி, தூத்துக்குடி, நெய்வேலி, மேட்டூர், எண்ணூர் ஆகிய இடங்களில் உரத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

ஸ்பிக் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவிலேயே மிக அதிக அளவில் உரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகும்.

பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் : 

தமிழகத்தில் மணலி (சென்னை), பனங்குடி(நாகப்பட்டினம்) ஆகிய இடங்களில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன.

தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில்கள் :

தமிழகத்தில் சிவகாசி, விருதுநகர், மதுரை ஆகிய இடங்களில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

திண்டுக்கல்லில் பூட்டுத் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழகத்தின் ''குட்டி ஜப்பான்" என்று நேரு அவர்களால் வர்ணிக்கப்பட்ட சிவகாசி விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தீப்பெட்டி தயாரிப்பு, பட்டாசு தயாரிப்பு மற்றும் ஆப்செட் பிரிண்டிங் தொழில் ஆகியவற்றில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது.

இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதமும், மொத்த தீப்பெட்டி உற்பத்தியில் 80 சதவீதமும், மொத்த ஆப்செட் பிரிண்டிங்கில் 60 சதவீதமும் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சிவகாசி இந்தியாவின் அதிக வரி செலுத்தும் நகரங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. சிவகாசி 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுள்ள நகரமாகும்.

மின்சார மற்றும் மின்னணு உபகரணத் தொழிற்சாலைகள் :

மின்னணு தொழில் தமிழ்நாட்டின் ஓர் வளர்ந்து வரும் தொழிலாகும். உலகளாவிய தொலைதொடர்பு சாதன நிறுவனங்களான நோக்கியா, பிளக்ஸ்ட்ரானிக்ஸ், மோட்டோரலா, சோனி-எரிக்ஸன், பக்ஸ்கான், சாம்சங், சிஸ்கோ, மோஸர் பேயர் மற்றும் டெல் ஆகிய நிறுவனங்கள் சென்னையை தனது உற்பத்தித் தலமாக கொண்டுள்ளன.

மின்சுற்று பலகை தயாரிப்பும், கைப்பேசி தயாரிப்பும் இந்நிறுவனங்களின் உற்பத்தியில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. பாரத மிகுமின் நிறுவனம் (BHEL) திருச்சி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. 

இது மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையன கொதிகலன்கள், ஜெனரேட்டர்கள், டர்பைன்கள் போன்றவற்றை தயாரிக்கிறது.

மென்பொருள் தொழிலகம் :

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட அஸன்டாஸ் நிறுவனமும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகமும் இணைந்து தமிழகத்தின் முதலாவது தகவல் தொழில் நுட்ப வளாகத்தை சென்னை தரமணியில் அமைத்துள்ளன.

மென்பொருள் (Software) ஏற்றுமதியில் தமிழகம், கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்கா (IT Park) சென்னை சிறுசேரியில் உள்ள சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க பிற தொழிற்சாலைகள் :

நெய்வேலி, அனல் மின் உற்பத்தி மட்டும் அல்லாது, உரம் மற்றும் பீங்கான் பொருட்கள் உற்பத்தியையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

வெண்கலச் சிலை மற்றும் இசைக்கருவிகள் தயாரிப்பில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் சிறந்து விளங்குகிறது.

சிறந்த வரையறை செய்யப்பட்ட உயிர் தொழில்நுட்ப கோட்பாட்டை நிலைநிறுத்த அனைத்து மகளிர் உயிர் தொழில்நுட்ப பூங்காவை அமைத்த முதல் மாநிலம் தமிழ்நாடேயாகும். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை தயாரிப்பிலும் சென்னை, மும்பைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

கரூர், தமிழகத்தின் பேருந்து கட்டுமானத் தொழில் மையமாக விளங்குகிறது. உலகின் 6-ஆவது பெரிய வாட்ச் தயாரிக்கும் நிறுவனமான டைட்டன் ஒசூரில் அமைந்துள்ளது. இது தமிழக அரசின் TIDCO மற்றும் டாடா நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுத்துறை நிறுவனமாகும்.

சுற்றுலாத் துறை :

16 சதவீத வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ள தமிழக சுற்றுலாத்துறை, தேசிய அளவில் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது.

சுற்றுலா தொழிலின் ஓர் அங்கமான மருத்துவச் சுற்றுலா தமிழ்நாட்டின் முக்கிய மருத்துவ சேவை மையங்களால் பெரிதும் வளர்ச்சியுற்றுள்ளது.

தமிழகத்தின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பின்வருமாறு : 

1. ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பூங்கா

2. இருங்காட்டுக் கோட்டை காலணி பூங்கா

3. ஓரகடம் தொழில் வளர்ச்சி மையம் (காஞ்சிபுரம்)

4. இராணிப்பேட்டை தோல்துறை சிறப்பு மண்டலம்

5. பெருந்துறை பொறியியல் பொருட்கள் உற்பத்தி சிறப்பு மண்டலம்

6. செய்யார் மோட்டார் வாகன உபகரணங்கள் உற்பத்தி சிறப்பு மண்டலம்

7. கங்கைகொண்டான் போக்குவரத்து பொறியியல் உபகரணங்கள் சிறப்பு மண்டலம்

தமிழக அரசு தொழில் நிறுவனங்கள் :

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) - 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு செராமிக்ஸ் நிறுவனம் (TACEL) - 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) - 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSI) - 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம்(SIDCO) - 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு தொழில் அபிவிருத்திக் கழகம்(SIPCOT) - 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு உப்பு நிறுவனம் (TASCL) - 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேசன் (TANCEM) - 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு கனிம நிறுவனம் (TAMIN) - 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் (TANMAG) - 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு தொழில் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம் (TACID) - 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு தொழிற்சாலைகள் :

இரயில்பெட்டி தொழிற்சாலை (ICF) - பெரம்பூர் (சென்னை) - 1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நெய்வேலி லிக்னைட் கழகம் (NLC) - நெய்வேலி - 1956 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் - சென்னை 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் - உதகமண்டலம் 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) - திருச்சி 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

துப்பாக்கி தொழிற்சாலை - திருச்சி 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கனரக வாகன தொழிற்சாலை (HVF) - ஆவடி (சென்னை) 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (MRL) - மணலி (சென்னை) 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சென்னை உரத் தொழிற்சாலை - சென்னையில் 1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சேலம் உருக்காலை (SAIL) - சேலத்தில் 1977 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Previous Post Next Post