தமிழக கனிம வளம்

இயற்கையிலுள்ள ஒரு மூலகம் அல்லது பல மூலகங்களின் கூட்டுப் பொருளானது, தாதுப் பொருள் அல்லது கனிமம் எனப்படும். இயற்கையாக கிடைக்கும் கனிமப் பொருட்கள் தாதுக்கள் எனவும், தாதுக்களை சுத்திகரித்தப் பிறகு கிடைக்கும் பொருட்கள் கனிமங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. கனிமங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை,

இயற்கையாக கிடைக்கும் கனிமப் பொருட்கள் தாதுக்கள் எனவும், தாதுக்களை சுத்திகரித்தப் பிறகு கிடைக்கும் பொருட்கள் கனிமங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. கனிமங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை,

1. உலோகக் கனிமங்கள்

2. அலோகக் கனிமங்கள் 

3. கனிம எரிப்பொருட்கள்

இரும்புத்தாது :

தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் மாக்னடைட் எனப்படும் இரும்புத்தாது அதிகளவில் கிடைக்கின்றது. கஞ்சமலை, கொல்லி மலை, தீர்த்த மலை, ஜவ்வாதுமலை போன்ற மலைப்பகுதிகளில் இரும்புத்தாது காணப்படுகிறது.

பாக்சைட் :

அலுமினியத்தின் தாதுவான பாக்சைட், சேலம், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் காணப்படுகிறது. தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் பாக்சைட் அதிக அளவில் கிடைக்கின்றது.

சேர்வராயன் மலை, கோத்திகிரி மலை, பழனி மலை, ஏற்காடு போன்ற மலைப்பகுதிகளில் பாக்சைட் காணப்படுகிறது.

சுண்ணாம்புக்கல் :

சுண்ணாம்புக்கல் பெரம்பலூர், அரியலூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, நாமக்கல், விழுப்புரம், இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது. இது சிமெண்ட் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருளாகும்.

ஜிப்சம் :

பெரம்பலூர்,கோயம்புத்தூர், திருநெல்வேலி, அரியலூர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜிப்சம் காணப்படுகிறது.

இது சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருளாகும்.

கிராஃபைட் :

தமிழகத்தில் சிவகங்கை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கிராஃபைட் காணப்படுகிறது.

உலகத் தரம் வாய்ந்த கிராஃபைட் சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கிறது.

கிரானைட் :

தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கிரானைட் (பளிங்குகல்) காணப்படுகிறது. தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில்தான் கிரானைட் அதிகளவில் கிடைக்கிறது.

மாக்னசைட் :

மாக்னசைட் தாது சேலம், வேலூர், நாமக்கல் மாவட்டங்களில் காணப்படுகிறது.

இது சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் கிடைக்கிறது. சேலம் பகுதியில் கிடைக்கும் மேக்னசைட் தாது அதன் கிரிப்டோ கிரிஸ்டலைன் (Cryptocrystaline Structure) அமைப்பிற்காக உலகப் புகழ் பெற்றதாகும். ஏனெனில் இதுவே ஒளிமுறிவு செங்கற்கள் (Refractory Bricks) தயாரிக்க மிகவும் உகந்ததாகும்.

மோனோசைட் :

அணு ஆற்றலுக்கு பயன்படும் மோனோசைட் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் காணப்படுகிறது.

மணவாளக்குறிச்சி மற்றும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகள் மோனோசைட் காணப்படும் முக்கிய இடங்களாகும்.

இல்மனைட் :

இது டைட்டானியம் என்ற தனிமத்தின் தாது ஆகும். இது தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்படுகிறது.

பெட்ரோலியம் :

தமிழகத்தில் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலியம் காணப்படுகிறது.

காவிரி டெல்டா பகுதிகளில் குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணம் என்ற இடத்தில் பெட்ரோலியம் கிடைக்கிறது.

லிக்னைட் :

லிக்னைட் எனப்படும் பழுப்பு நிலக்கரி கடலூர், அரியலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் காணப்படுகிறது.

தமிழகத்தில், கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் லிக்னைட் மிக அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுகிறது. நெய்வேலி மற்றும் ஜெயங்கொண்டம் ஆகியவை நிலக்கரி காணப்படும் முக்கியப் பகுதிகளாகும்.

இயற்கை எரிவாயு :

தமிழகத்தில் காவிரி டெல்டாப் பகுதிகளில் குறிப்பாக தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயற்கை எரிவாயு காணப்படுகிறது.

தமிழ்நாடு அரசு புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, தமிழகத்தின் உறுதிபடுத்தப்பட்ட முக்கிய தாதுவளங்கள் பற்றிய பட்டியல் 

தமிழகத்தில் தாதுக்கள் இருக்கும் அளவு மற்றும் அதன் தேசிய அளவில் வகிக்கும் பங்குகள் :

லிக்னைட் - 30,275,000 டன் தமிழ்நாட்டில் உள்ளன இதன் தேசிய அளவு பங்கு 87% சதவீதம் ஆகும்.

வெர்மிகுலைட் - 2,000,000 - டன் தமிழ்நாட்டில் உள்ளன இதன் தேசிய அளவு பங்கு 66% சதவீதம் ஆகும்.

கார்னெட் - 23,000,000 - டன் தமிழ்நாட்டில் உள்ளன இதன் தேசிய அளவு பங்கு 42% சதவீதம் ஆகும்.

சிர்கான் - 8,000,000 - டன் தமிழ்நாட்டில் உள்ளன இதன் தேசிய அளவு பங்கு 38% சதவீதம் ஆகும்.

கிராஃபைட் - 2,000,000 - டன் தமிழ்நாட்டில் உள்ளன இதன் தேசிய அளவு பங்கு 33% சதவீதம் ஆகும்.

இல்மனைட் - 98,000,000 - டன் தமிழ்நாட்டில் உள்ளன இதன் தேசிய அளவு பங்கு 28% சதவீதம் ஆகும்.

ருடைல் - 5,000,000 - டன் தமிழ்நாட்டில் உள்ளன இதன் தேசிய அளவு பங்கு 27% சதவீதம் ஆகும்.

மோனோசைட் - 2,000,000 - டன் தமிழ்நாட்டில் உள்ளன இதன் தேசிய அளவு பங்கு 25% சதவீதம் ஆகும்.

மாக்னசைட் - 73,000,000 - டன் தமிழ்நாட்டில் உள்ளன இதன் தேசிய அளவு பங்கு 17% சதவீதம் ஆகும்.

இந்தியாவின் 90% லிக்னைட் தமிழகத்திலிருந்துதான் கிடைக்கிறது.சேலத்தில் உள்ள மாங்கனீசு படிவம் இந்தியாவின் மிகப்பெரிய மாங்கனீசு படிவாகும். தூத்துக்குடியில் உப்பு மிக அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

கார்னெட், கிராஃபைட், லிக்னைட், மாக்னசைட் போன்றவற்றின் உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் முன்னிலை வகிக்கிறது.

தமிழ்நாட்டில் கனிமங்கள் உள்ள மாவட்டம் :

உலோகக் கனிமங்கள் :

இரும்பு தாது - சேலம், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.

செம்பு - சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் மாமண்டூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.

பாக்ஸைட் - சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, தருமபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.

தங்கம் - கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.

குரோமைட் - சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.

பைரைட் - விழுப்புரம் மாவட்டங்களில் காணப்படுகின்றன.

அலோகக் கனிமங்கள் :

சுண்ணாம்புக்கல் - விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.

மைக்கா - திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.

மாக்னசைட் - சேலம், நாமக்கல், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.

ஸ்டீயடைட் - வேலூர், கடலூர், கோயம்புத்தூர், சேலம் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.

உப்பு - சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.

கனிம எரி பொருட்கள் :

பெட்ரோலியம் - திருவாரூர் (பனங்குடி), நரிமணம் (காவிரி டெல்டா பகுதி) ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.

பழுப்பு நிலக்கரி - கடலூர் (நெய்வேலி) ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.

Previous Post Next Post