தமிழக பொருளாதாரம் 2023 :

தமிழகத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் சேவைத் துறையின் பங்கு 45 சதவீதமாகவும், உற்பத்தித் துறையின் பங்கு 34 சதவீதமாகவும், வேளாண் துறையின் பங்கு 21 சதவீதமாகவும் உள்ளது. 2001-மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு இந்தியாவின் மிக அதிக நகரமயமாக்கப்பட்ட (43.86%) மாநிலமாக திகழ்கின்றது.

தமிழகத்தின் பொருளாதார நடவடிக்கைகளில் சேவைத் துறையின் பங்கு 45 சதவீதமாகவும், உற்பத்தித் துறையின் பங்கு 34 சதவீதமாகவும், வேளாண் துறையின் பங்கு 21 சதவீதமாகவும் உள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 56 விழுக்காடு ஊரகப் பகுதியிலும் 44 விழுக்காடு நகரத்திலும் வசிக்கின்றனர். 2001 மக்கள் தொகை கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 44.6 விழுக்காடு மக்கள் வேலைப் பார்க்கின்றனர்.

அவர்களுள் 55.3 விழுக்காடு மக்கள் முதன்மைத் தொழிலும், 27.7 விழுக்காடு மக்கள் இரண்டாம் நிலைத் தொழிலும், 30.8 விழுக்காடு மக்கள் மூன்றாம் நிலைத் தொழிலையும் புரிகின்றனர். இந்தியாவின் நான்காவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

2007-08 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியானது (Gross State Domestic Product) நடப்பு விலையில் 2,75,000 கோடியாகக் (70 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி வீதமானது 12.1% என்ற அளவில் உள்ளது.

அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் மகாராஷ்டிரம் மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 9.12 சதவீதத்தை தமிழகம் பெற்றுள்ளது.

2007-08 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தலா வருமானம் 43,000 ஆகும். தமிழக அரசு வெளியிட்ட தகவலின்படி 2008 - 09 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியானது (GSD) ₹339,212 கோடியாகும். இது 1999 - 2000 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு நடப்பு விலையில் (Current Prices) கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் 2008 - 09 இல் தமிழ்நாட்டின் தலா வருமானம் நடப்பு விலையில் = 51,097 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. 2010-11-இல் தமிழ்நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) $1622 ஆகும். இதில் தமிழகம் தேசிய அளவில் ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிறு மற்றும் நடுத்தர தொழிலகங்கள் (Small and Medium Enterprises) அதிக எண்ணிக்கையில் உள்ளன. தற்பொழுது தேசிய அளவில் மாநில வரி வருவாயில் தமிழகம் 2-ஆவது இடத்தில் உள்ளது.

தேசிய அளவில் மனித வளர்ச்சி குறியீட்டில் தமிழகம் 0.675 புள்ளிகளுடன் 16-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் முதலாவது மனித வளர்ச்சி அறிக்கை (H.D.R.) கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

Previous Post Next Post