1. அமராவதி நீர்த்தேக்கம்

இது திருப்பூர் மாவட்டம் அமராவதி நகர் என்ற இடத்தில் உள்ள இந்திராகாந்தி வனவிலங்கு காப்பகம் மற்றும் தேசியப்பூங்காவில் அமைந்துள்ளது. காமராஜர் ஆட்சியின்போது 1957-ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது.

இங்கு தென்னிந்தியாவின் இயற்கைச் சூழலில் வளர்க்கப்படும் மிகப்பெரிய முதலைப்பண்ணை அமைந்துள்ளது. அதில் சேற்று முதலைகள் அல்லது பாரசீக முதலைகள் என அழைக்கப்படும் முக்கர் முதலைகள் Mugger Crocodiles) வளர்க்கப்படுகின்றன.

இது திருப்பூர் மாவட்டம் அமராவதி நகர் என்ற இடத்தில் உள்ள இந்திராகாந்தி வனவிலங்கு காப்பகம் மற்றும் தேசியப்பூங்காவில் அமைந்துள்ளது.

2. அம்பத்தூர் ஏரி

இது சென்னையின் அம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள மழைநீர் ஏரியாகும். இது சென்னை மாநகரின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்யும் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகின்றது.

3. பேரிஜம் ஏரி

இது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலமாகும்.

4. செம்பரம்பாக்கம் ஏரி

இது சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னை நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரியிலிருந்துதான் “அடையாறு நதி” தோன்றுகிறது.

5. கழிவேலி ஏரி

இது பாண்டிச்சேரியிலிருந்து 16 கி.மீ தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இடம்பெயரும் பறவைகளுக்கான முக்கிய இனப்பெருக்க இடமாக விளங்குகிறது.

6. காமராஜ சாகர் நீர்த்தேக்கம் / ஏரி

இது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

7. கொடைக்கானல் ஏரி

இது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் அமைந்துள்ளது. 1863-ஆம் ஆண்டு இந்த ஏரி உருவாக்கப்பட்டது. அப்போதைய மதுரை கலெக்டராக இருந்த சர் வேர் ஹென்றி லீவிங் என்பவரே இந்த ஏரியை உருவாக்குவதற்கு முக்கிய காரணமானவர் ஆவார்.

8. ஊட்டி ஏரி

ஊட்டியின் முதல் கலெக்ட்டரான ஜான் சுல்லிவன் என்பவர் இந்த ஏரியை 1824-ஆம் ஆண்டு உருவாக்கினார். இங்கு 1973 முதல் படகுப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

9. போரூர் ஏரி

உள்ளூர் மக்களால் 'ரெட்டேரி' என்று அழைக்கப்படும் இந்த ஏரி சென்னை நகரின் தென்மேற்குப் பகுதியில் போரூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதுவும் சென்னையின் நீர் ஆதாரமாக விளங்குகிறது.

10. பழவேற்காடு ஏரி

இது ஆங்கிலத்தில் புலிக்காட் ஏரி (Pulicat lake) என்று அழைக்கப்படுகிறது. இது தமிழக ஆந்திர எல்லையில் சோழமண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள உவர்நீர் காயல் (Lagoon) ஆகும்.

இது இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்புநீர் ஏரியாகும். ஸ்ரீஹரிகோட்டா தீவானது இந்த ஏரியை வங்காள விரிகுடாவிலிருந்து பிரிக்கின்றது. இங்கு ஒரு பறவைகள் காப்பகமும் அமைந்துள்ளது.

11. புழல் ஏரி

புழல் ஏரி அல்லது செங்குன்றம் ஏரி என்றழைக்கப்படும் இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மழைநீர்பிடிப்பு நீர்த்தேக்கமாகும். இது சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும்.

12. சோழவரம் ஏரி

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் இந்த ஏரி திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

13.சிங்காநல்லூர் ஏரி

கோயம்புத்தூர் நகரில் அமைந்துள்ள பெரிய ஏரிகளுல் இதுவும் ஒன்றாகும்.

14.வாலாங்குளம் ஏரி

இது கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஏரிகளில் ஒன்றாகும். நொய்யல் ஆறு இதன் நீர் ஆதாரமாக விளங்குகின்றது.

15. வீரானம் ஏரி

இது கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஓர் ஏரியாகும். வீராணம் ஏரியிலிருந்து சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதற்கான 'வீராணம் திட்டம்" 1967-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் சி.என்.அண்ணாதுரையால் வகுக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து வந்த முதல்வர் கருணாநிதியால் இது செயல்படுத்தப்பட்டது.

16. வேளச்சேரி ஏரி

சென்னை நகருக்குள் அமைந்திருக்கும் ஏரிகளில் இதுவும் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் மிகப் பழமையான அணை - கல்லணை

தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணை - மேட்டூர் அணை

தமிழ்நாட்டின் மிக ஆழமான அணை - சோலையாறு அணை

தமிழ்நாட்டின் நீளமான ஆறு - காவிரி

தமிழகத்தில் உள்ள முக்கிய ஆறுகள் 

Previous Post Next Post