கிழக்குத் தொடர்ச்சி மலைகள் (Eastern Ghats)

மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும் போது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும் போது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகளாகக் காணப்படுகின்றன.

வடகிழக்கிலிருந்து தென்மேற்காக வேலூர், தருமபுரி ஈரோடு மாவட்டங்களில் விரவிக் காணப்படுகின்றன. மற்றும் இவற்றின் சராசரி உயரம் 1100 மீட்டர் முதல் 1600 மீட்டர் வரை உள்ளது.

தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:

1. ஜவ்வாது மலை

2. கல்வராயன் மலை

3. சேர்வராயன் மலை

4. பச்சை மலை

5.கொல்லி மலை

6. ஏலகிரி மலை

7. செஞ்சி மலை

8. செயின்ட்தாமஸ் குன்றுகள்.

9.பல்லாவரம்

10.வண்டலூர்

ஜவ்வாது மலை :

ஜவ்வாது மலை வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இங்குள்ள ஏலகிரி ஒரு கோடை வாழிடமாகும்.

கல்வராயன் மலை :

இது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது இதில் வெள்ளாற்றின் துணை ஆறுகள் உற்பத்தியாகின்றன.

சேர்வராயன் மலை :

இம்மலை சேலம் மாவட்டத்தில் உள்ளது. இதன் உயர்ந்த சிகரம் சோலைக்காடு (1640மீ). இங்கு பாக்சைட் தாதுக்கள் கிடைக்கின்றன. இம்மலையில் அமைந்துள்ள ஏற்காடு ஒரு கோடை வாழிடமாகும்.

பச்சை மலை :

இது பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இங்கு உலகிலேயே முதல் தரமான கருப்பு கருங்கல் (Black) Granite) கிடைக்கின்றது.

கொல்லி மலை :

இம்மலை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது, இங்கு பாக்சைட் தாது கிடைக்கின்றது.

பாலமலைக் குன்றுகள் :

பச்சை மலை மற்றும் கொல்லி மலைக்குக் கிழக்கில் பாலமலைக் குன்றுகள் காணப்படுகின்றன.

இங்கும் கருங்கள் (Granite) மற்றும் கல்தூள்கள் கிடைக்கின்றன. கஞ்ச மலை மற்றும் சாக்குக் குன்றுகள் (Chalk Hills) ஆகியவை சேலம் பகுதியில் அமைந்துள்ளன.

இவற்றிலிருந்து இரும்புத்தாது மற்றும் மேக்னசைட் தாதுக்கள் அதிகம் கிடைக்கின்றன.

சித்தேரி மலை :

தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, சென்னிமலை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்

1. தால்காட் கணவாய்

2. போர்காட் கணவாய்

3. பாலக்காட்டுக் கணவாய்

4. செங்கோட்டைக் கணவாய் 

5. ஆரல்வாய்க் கணவாய்

தமிழ்நாட்டின் முக்கிய மலைவாழிடங்கள்

1. ஊட்டி

2. கொடைக்கானல்

3. குன்னூர்

4. கோத்தகிரி

5. ஏற்காடு

6. ஏலகிரி

7. வால்பாறை

Previous Post Next Post