தமிழ்நாட்டிலுள்ள கணவாய்கள்:

கோவைக்கு அருகிலுள்ள பாலக்காட்டுக் சுணவாய், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழிக் கணவாய், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்கோட்டைக் கணவாய் ஆகியவை தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்களாகும்.

கோவைக்கு அருகிலுள்ள பாலக்காட்டுக் சுணவாய், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழிக் கணவாய், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்கோட்டைக் கணவாய் ஆகியவை

நீலகிரிக்கு தெற்கே ஏறத்தாழ 24 கி.மீ தூரமுள்ள இடைவெளியே பாலக்காட்டு கணவாயாகும். அகத்திய மலையில் ஆரியன்காவுக் கணவாய் மற்றும் ஆரல்வாய்மொழிக் கணவாய் ஆகிய இரு கணவாய்கள் உள்ளன.

தமிழகத்திலிருந்து கேரளம் செல்வதற்கு ஆரியன்காவுக் கணவாய் வழியாக இரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொல்லூர், நிலம்பூர், போடிநாயக்கனூர், அச்சன்கோவில் போன்ற கணவாய்களும் இம்மலைத் தொடரில் உள்ளன. இம்மலைத்தொடரில் உள்ள ஆனைமுடி தென்னிந்தியாவிலேயே மிக உயர்ந்த சிகரமாகும்.

தமிழக மலைகள் அமைந்துள்ள மாவட்டங்கள்

மலையின் பெயர் :

ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, இரத்தினகிரி மலை, வள்ளி மலை : வேலூர் மாவட்டம்

சென்னிமலை, சிவன் மலை : ஈரோடு மாவட்டம்

சேர்வராயன் மலை, கஞ்ச மலை, சாக்குக் குன்றுகள் : சேலம் மாவட்டம்

கொல்லி மலை : நாமக்கல் மாவட்டம்

பச்சை மலை : பெரம்பலூர் மாவட்டம்

தீர்த்த மலை : தர்மபுரி மாவட்டம்

கல்வராயன் மலை, செஞ்சி மலை : விழுப்புரம்  மாவட்டம்

பழனி மலை, கொடைக்கானல் மலை : திண்டுக்கல் மாவட்டம் 

குற்றால மலை, மகேந்திரகிரி மலை, அகத்தியர் மலை : திருநெல்வேலி மாவட்டம் 

சித்தேரி மலை : தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டம் 

கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை - சேர்வராயன் மலை (1500-1600 மீட்டர்). மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை - ஆனை மலை (2700 மீட்டர்).

Previous Post Next Post