மேற்குத் தொடர்ச்சி மலைகள் (Western Ghats)

மேற்குக் கடற்கரைக்கு இணையாகச் செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் கடற்கரையோரத்தில் படிகட்டுகளைப் போல் அமைந்திருப்பதால், இதனை ஆங்கிலேயர் 'மேலைப்படிகள்' (Western Ghats) என்று அழைத்தனர்.

மேற்குக் கடற்கரைக்கு இணையாகச் செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் கடற்கரையோரத்தில் படிகட்டுகளைப் போல் அமைந்திருப்பதால், இதனை ஆங்கிலேயர் 'மேலைப்படிகள்' (Western Ghats) என்று அழைத்தனர்.

தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது. இதன் சராசரி உயரம் 1000 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரை உள்ளது.

தொட்டபெட்டா (2637 மீ) மற்றும் முக்கூர்த்தி (2540 மீ) ஆகியவை தமிழ்நாட்டில் இம்மலைத் தொடரில் அமைந்துள்ள உயரமான சிகரங்கள் ஆகும்.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:

1.நீலகிரி மலை

2. ஆனை மலை

3.பழனி மலை

4. கொடைக்கானல் குன்று

5. குற்றால மலை

6. மகேந்திரகிரி மலை

7. அகத்தியர் மலை 

8. ஏலக்காய் மலை

9. சிவகிரி மலை

10. வருஷநாடு மலை

நீலகிரி மலை :

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 - 2400 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதன் உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா (2637 மீ). இதுவே தமிழகத்தின் உயர்ந்த மலைச்சிகரமாகும்.

உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி ஆகியவை இதிலுள்ள முக்கிய கோடை வாழிடங்களாகும்.

ஆனை மலை :

ஆனை மலையின் உயர்ந்த சிகரம் ஆனை முடி (2695மீ). இது தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரமாகும். இது பாலக்காட்டு கனவாயில் உள்ளது.

பழனி மலை :

நீலகிரியிலிருந்தும், கேரளாவின் ஆனைமுடி மலையிலிருந்தும் 1500 மீ முதல் 2000 மீ உயரத்தில் ஓர் கிளைத்தொடர் குன்று கிழக்கு நோக்கி செல்கின்றது. இதற்கு பழனிக் குன்றுகள் என்று பெயர்.

பழனிமலை ஒரு தாழ்ந்த குன்றாகும். பழனி மலைக்கு தெற்கில் ஏலக்காய் மலைகள் அமைந்துள்ளன. ஏலக்காய் மலையில் பெரியார் ஏரிக்கு அருகில் தேக்கடி சரணாலயம் உள்ளது.

கொடைக்கானல் மலை :

கொடைக்கானல் மலை பழனி மலையின் தொடர்ச்சியாகும். இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சிப்பூ பூக்கின்றது.

பழனிக் குன்றுகளுக்கு தெற்கே வருச நாடு, ஆண்டிப்பட்டி என்ற இரு மலைத் தொடர்கள் காணப்படுகின்றன.

குற்றாலம் மற்றும் மகேந்திரகிரி மலை :

குற்றாலம் மற்றும் மகேந்திரகிரி மலைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளன.

பாலக்காட்டு கணவாய்க்கு (25 கி.மீ.நீளம்) தெற்கே ஆண்டிப்பட்டி மலை, ஏலமலை, அகத்தியர் மலை ஆகிய மலைகள் காணப்படுகின்றன.

கம்பம் பள்ளத்தாக்கு :

ஏலமலைப் பகுதியில் செழிப்பான கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. ஆண்டிப்பட்டி குன்றுகளையும் வருச நாட்டையும் கம்பம் பள்ளத்தாக்கு பிரிக்கின்றது.

செங்கோட்டை கணவாய் :

வருஷநாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி செங்கோட்டை கணவாய் என்று அழைக்கப்படுகின்றது.

Previous Post Next Post