உயிர்கோள காப்பகங்கள் (Biosphere Reserve)

இந்தியாவில் மொத்தம் 17 உயிர்கோள காப்பகங்கள் உள்ளன.. அவற்றுள் மூன்று தமிழகத்தில் அமைந்துள்ளன. அவை,

1. நீலகிரி உயிர்கோள காப்பகம்

2. மன்னார் வளைகுடா கடல் உயிர்கோள காப்பகம் 

3. அகஸ்தியர் மலை உயிர்கோள காப்பகம்

1. நீலகிரி உயிர்கோள காப்பகம்

நீலகிரி உயிர்கோள காப்பகம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதலாவது உயிர்கோள காப்பகமாகும்.

இது 1986-இல் உருவாக்கப்பட்டது, இது 5520 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. இதன் மொத்தப் பரப்பளவில் 2537.6 ச.கி.மீ. தமிழ்நாட்டிலும், 1527.4 ச.கி.மீ. கர்நாடகாவிலும், 1455.4 ச.கி.மீ. கேரளாவிலும் அமைந்துள்ளது.

நீலகிரி உயிர்கோள காப்பகம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதலாவது உயிர்கோள காப்பகமாகும்.

2. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம்

இது 1989-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 10,500 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இது தென்கிழக்கு ஆசியாவின் முதலாவது கடல் உயிர்கோள காப்பகமாகும்.

பரப்பளவில் இது தமிழ்நாட்டின் மிகப்பெரிய உயிர்கோள காப்பகமாகவும் இந்தியாவின் இரண்டாவது பெரிய உயிர்கோள காப்பகமாகவும் விளங்குகிறது. முதலாவது குஜராத்திலுள்ள கட்ச் உயிர்கோள காப்பகம் (Rann of Kutch) ஆகும்.

அகஸ்தியர்மலை உயிர்கோள காப்பகம்

இது 2001-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மொத்தப் பரப்பளவு 3,500.36 ச.கி.மீ ஆகும், அதில் 1828 ச.கி.மீ. பகுதி கேரளாவிலும், 1672.36 ச.கி.மீ. பகுதி தமிழகத்திலும் உள்ளன.

தமிழகத்திலுள்ள மூன்று உயிர்கோள காப்பகங்களுள் நீலகிரி மற்றும் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகங்கள் யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட உலக உயிர்கோள காப்பக பட்டியலில் அடங்கும்.

இந்தியாவிலுள்ள 17 உயிர்கோள காப்பகங்களுள் 7 மட்டும் யுனெஸ்கோவின் உலக உயிர்கோள காப்பக பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அவை,

1. நீலகிரி உயிர்கோள காப்பகம் - 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

2. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் - 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

3. சுந்தரவனம் உயிர்கோள காப்பகம் - 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

4. நந்தா தேவி உயிர்கோள காப்பகம் - 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

5. நாக்ரெக் உயிர்கோள காப்பகம் - 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

6. பச்மரி உயிர்கோள காப்பகம் - 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

7. சிம்லிபால் உயிர்கோள காப்பகம் - 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

2009-ஆண்டு இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள குளிர் பாலைவனம் (Cold Desert) இந்தியாவின் 16-ஆவது உயிர்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

2010-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலுள்ள சேஷாச்சலம் மலைப்பகுதி இந்தியாவின் 17-ஆவது உயிர்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள திப்ரு - சாய்கோவா உயிர்கோள காப்பகம், பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய உயிர்கோள காப்பகமாகும். இதன் பரப்பளவு 765 ச.கி.மீ ஆகும்.

Previous Post Next Post