தமிழக வேளாண்மை

தமிழ்நாட்டின் முதன்மையானதும், மிகப் பழமையானதுமான தொழில் வேளாண்மைத் தொழிலாகும். வேளாண்மை என்பது பயிர் வளர்ப்போடு, பிராணி வளர்ப்பு, பறவை, மீன் மற்றும் காடு வளர்ப்பு போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும்.

விவசாயிகள், காலநிலை மற்றும் மண்வளம் ஆகியவற்றைப் பொருத்து பயிர்களை தேர்வு செய்து மூன்று வெவ்வேறு பருவங்களில் சாகுபடி செய்கின்றனர்.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 56 சதவீத மக்கள் விவசாயத்தை தொழிலாகக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் சாகுபடி பருவங்கள்

விவசாயிகள், காலநிலை மற்றும் மண்வளம் ஆகியவற்றைப் பொருத்து பயிர்களை தேர்வு செய்து மூன்று வெவ்வேறு பருவங்களில் சாகுபடி செய்கின்றனர்.

1) சொர்ணவாரி - சித்திரைப் பட்டம்

2) சம்பா பருவம் - ஆடிப் பட்டம்

3) நவரைப் பருவம் - கார்த்திகைப் பட்டம்

1. சொர்ணவாரி - சித்திரைப் பட்டம்

சித்திரையில் நடவு நட்டு, புரட்டாசியில் அறுவடை செய்யும் பருவத்தை சித்திரைப் பட்டம் என்று அழைப்பர். இப்பருவத்திற்கு கரீப் என்ற மற்றொரு பெயரும் உண்டு. மே மாதத்தில் விதைக்கப்பட்டு, அக்டோபர் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. விதைப்பு காலமான மே மாதம் தமிழ் மாதமான சித்திரை மாதமாக இருப்பதால் இப்பருவம் சித்திரைப்பட்டம் என்றழைக்கப்படுகிறது.

2. சம்பா பருவம் - ஆடிப்பட்டம்

ஜூலை மாதத்தில் விதைத்து ஜனவரியில் அறுவடை செய்யும் பருவம் சம்பா பருவமாகும். விதைப்பு காலமான ஜூலை மாதம், தமிழ் மாதமான ஆடி மாதத்தில் இருப்பதால் இப்பட்டத்தை ஆடிப்பட்டம் என்று அழைக்கின்றனர். 

3. நவரைப் பருவம் - கார்த்திகைப் பட்டம்

இப்பருவத்திற்கு ராபி (Rabi) (குளிர் காலம்) என்று மற்றொரு பெயரும் உண்டு. நவம்பர் மாதத்தில் விதைத்து மார்ச்சு மாதத்தில் அறுவடை செய்யும் பருவமே நவரைப் பருவமாகும். விதைக்கும் காலம் தமிழ் மாதமான கார்த்திகை மாதம் என்பதால் இப்பட்டம் கார்த்திகைப் பட்டம் என்று அழைக்கப்படுகிறது.

நன்செய் விவசாயம்

ஆண்டு முழுவதும் மழையாலோ பாசன வசதியாலோ, நீர் கிடைக்கும் நிலங்களில் செய்யப்படும் விவசாயம் நன்செய் விவசாயமாகும்.

நெல், கரும்பு போன்றவை நன்செய் பயிர்களாகும்,

தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆற்றுப் படுகைகளில் இவ்விவசாயம் நடைபெறுகிறது.

புன்செய் விவசாயம்

பாசனமற்று பருவ மழையை மட்டுமே நம்பியிருக்கும் நிலங்களில் செய்யப்படும் விவசாயம் புன்செய் விவசாயமாகும்.

சிறு தானியங்கள் புன்செய் பயிர்களாகும், வறண்ட மாவட்டங்களான, வேலூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலியின் மழைமறைவு பிரதேசங்களிலும் இவ்விவசாய முறை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் பயிர்களின் பரவல்

ஒவ்வொரு பயிரின் வளர்ச்சிக்கும் ஓர் குறிப்பிட்ட சூழல் மற்றும் காலநிலை தேவைப்படுகிறது. தமிழ் நாடு அயண மண்டல பிரதேசத்தில் அமைந்திருப்பதால் அயண மண்டல பயிர்கள் அனைத்தும் பயிரிடப்படுகிறது.

ஒவ்வொரு பயிரின் வளர்ச்சிக்கும் ஓர் குறிப்பிட்ட சூழல் மற்றும் காலநிலை தேவைப்படுகிறது.

உணவுப் பயிர்

நெல், கம்பு, கேழ்வரகு, சோளம் மற்றும் பயறு வகைகள் போன்றவை தமிழ்நாட்டின் முக்கிய உணவுப் பயிர்களாகும்.

நெற்பயிர் தமிழ்நாட்டின் முதன்மையான உணவுப் பயிராகும். பொன்னி, கிச்சிலி சம்பா போன்ற இரகங்கள் தமிழ்நாட்டில் விளையும் பாரம்பரிய நெற்பயிர் வகைகளாகும்.

ஜெயா,ஜ.ஆர்.50 போன்ற புதிய அதி வீரிய விளைச்சல் தரும் இரகங்களும் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகியவை விளைப் பரப்பளவிலும், உற்பத்தியிலும் முதன்மையாக விளங்குகிறது. 

காவிரி டெல்டா பகுதி "தென் இந்தியாவின் நெற்களஞ்சியம்'' என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மூன்று பருவங்களில் நெல் பயிரிடப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் நெல் நான்கு பருவங்களில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் நெல் ஆராய்ச்சி நிறுவனம் தஞ்சாவூர் மாவட்டம்.

ஆடுதுறையில் அமைந்துள்ளது. தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் திருவாரூர் கிளை TNRH 174 என்ற புதிய நெல் இரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நெல்வகை ஏக்கருக்கு 4500 கிலோ நெல் உற்பத்தியை தரக்கூடியது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

தமிழ்நாட்டில் சிறுகடலை, துவரை, பச்சை பயறு, உளுந்து மற்றும் கொள்ளு போன்ற பயறு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

சிறுகடலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் துவரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றன.

திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பச்சை பயிர் உற்பத்தியில் முதன்மை வகிக்கின்றன. நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் உளுந்து உற்பத்தியில் முன் நிற்கின்றன. கொள்ளு உற்பத்தியில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் முதலிடம் வகிக்கின்றன.

குறு தானிய பயிர்கள் (Millets) உற்பத்தியாகும் முதன்மையான மாவட்டங்கள் :

1. சோளம் - கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சோளம் விளைச்சல் உற்பத்தி அதிகமாக உள்ளது.

2. கம்பு - விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கம்பு விளைச்சல் உற்பத்தி அதிகமாக உள்ளது.

3. கேழ்வரகு - கிருஷ்ணகிரி மற்றும் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கேழ்வரகு விளைச்சல் உற்பத்தி அதிகமாக உள்ளது.

4. மக்காச்சோளம் - பெரம்பலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மக்காச்சோளம் விளைச்சல் உற்பத்தி அதிகமாக உள்ளது.

5. திணை - சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் திணை விளைச்சல் உற்பத்தி அதிகமாக உள்ளது.

இழைப் பயிர்கள்

தமிழ்நாட்டின் மிக முக்கிய இழைப் பயிர் பருத்தியாகும். கோயம்புத்தூர், திருநெல்வேலி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பருத்தி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எம்.சி.யூ 4, எம்.சி.யூ 5, ஆர்.எ.5166 போன்ற பருத்தி இரகங்கள் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது.

பணப்பயிர்

தமிழ்நாட்டில் கரும்பு, புகையிலை, எண்ணெய் வித்துகள, மசாலா பொருட்களான மிளகாய், மஞ்சள், கொத்து மல்லி ஆகியவை பணப்பயிர்களாக சாகுபடி செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டின் முதன்மைப் பணப்பயிரான கரும்பு அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது. கோயம்புத்தூர், கரூர், விழுப்புரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கரும்பு மிகுதியாக சாகுபடி செய்யப்படுகிறது. 

இரண்டாவது தமிழ்நாட்டின் முக்கிய பணப்பயிர் புகையிலையாகும், இது திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் பரவலாக பயிரிடப்படுகிறது.

வேர்கடலை, சூரியகாந்தி, குசும்பு அவரை (Saffola), ஆமணக்கு, தேங்காய் மற்றும் பருத்தி விதை ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர்களாகும்.

தோட்டப்பயிர்

தேயிலை, காபி, இரப்பர், மிளகு மற்றும் முந்திரி ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய தோட்டப் பயிர்களாகும்.

தேசிய அளவில் அஸ்ஸாம் மற்றும் மேற்குவங்கத்தை தொடர்ந்து தேயிலை பயிரிடும் பரப்பிலும், உற்பத்தியிலும் தமிழ்நாடு மூன்றாம் நிலை வகிக்கிறது.

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைச்சரிவில் தேயிலை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

காபி சாகுபடியிலும் கர்நாடகம் மற்றும் கேரளாவை அடுத்து தமிழ்நாடு தேசிய அளவில் மூன்றாம் நிலையில் உள்ளது. மேற்கு மலைத் தொடர்ச்சியிலும், கிழக்கு மலைத் தொடர்ச்சியிலும் காபி பயிரிடப்படுகிறது.

நீலகிரி, மதுரை, தேனி மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள மலைச் சரிவுகளில் காபி பயிரிடப்படுகின்றது, ஆண்டிப்பட்டி, சிறுமலை, சேர்வராயன் மலைப்பகுதியிலும் காபி சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் இரப்பர் கன்னியாகுமரி மாவட்டத்திலும், மிளகு கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைச்சரிவுகளிலும், முந்திரி கடலூர் மாவட்டத்திலும் பயிரிடப்படுகிறது.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில்தான் தேயிலையும், காப்பியும் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

தமிழகத்தில் நீலகிரி, ஆனை மலை, பழனி மலை, ஏற்காடு ஆகிய மலைச்சரிவுகளில் தேயிலை மற்றும் காபி ஆகிய இரண்டும் பயிரிடப்படுகிறது.

தோட்டக்கலை பயிர்கள் (Horticulture)

தோட்டக்கலைப் பயிர்களான காய், கனி மற்றும் பூக்கள் மிக அதிக பரப்பளவில் வளர்க்கப்படுகின்றன, தமிழக வேளாண்மையில் தோட்டக்கலை வேகமாக வளரும் துறையாகும்.

தமிழகத்தில் மொத்தம் 10.96 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மொத்த தோட்டக்கலை உற்பத்தியானது 192.28 லட்சம் மெட்ரிக் டன்களாகும்.

இந்தியாவின் மொத்த பழங்கள் உற்பத்தியில் 10 சதவீதமும், காய்கறிகள் உற்பத்தியில் 6 சதவீதமும் தமிழகத்தில் உற்பத்தியாகின்றன.

மா மற்றும் வாழை தமிழகத்தின் முக்கியப் பழப்பயிர்களாகும். மல்லி, முல்லை, ரோஜா, கிரிசாந்திமம் மற்றும் மாரிகோல்டு போன்றவை தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய மலர்களாகும்.

கிருஷ்ணகிரி மாங்காய் மற்றும் மாம்பழம் சாகுபடிக்கும், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு வாழை சாகுபடிக்கும், தேனி திராட்சை சாகுபடிக்கும் பெயர் பெற்றவையாகும்.

ஏனைய மாவட்டங்களை விட தருமபுரி மாவட்டம் காய்கனி மற்றும் பூ சாகுபடியில் முதன்மை நிலையில் உள்ளது.

இந்திய அளவில் வேளாண்மை உற்பத்தியில் தமிழகம் பெற்றுள்ள இடங்கள் :

வாழை, மரவள்ளி, மற்றும் மலர்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

மா, இயற்கை இரப்பர், தேங்காய் மற்றும் நிலக்கடலை உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

காபி, தேயிலை, சப்போட்டா மற்றும் கரும்பு உற்பத்தியில் தமிழகம் மூன்றாம் இடம் வகிக்கிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் கரும்பு மகசூல் ஒரு ஹெக்டேருக்கு (Yield Per hectare) அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் 17,000 ஹெக்டே பரப்பளவில் எண்ணெய் பனை பயிரிடப்படுகிறது. எண்ணெய்ப்பனை சாகுபடியில் தமிழகம் இரண்டவாது இடத்தில் உள்ளது.

தமிழகம் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், பால் உற்பட்தியில் 9 -ஆவது இடத்திலும் உள்ளது. கடல் மீன் பிடித்தலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழகத்தின் முக்கிய பயிர்களும் அவை விளையும் மாவட்டங்களும்

I. உணவுப் பயிர்கள் :

1. நெல் - தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

2. கம்பு - இராமாநாதபுரம், திருநெல்வேலி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

3. சோளம் - கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

4. கேழ்வரகு - தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், கடலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

5. பயறு வகைகள் - தஞ்சாவூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூர்,நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

II. பணப்பயிர்கள்

6. பருத்தி - கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

7. கரும்பு - கடலூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, வேலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

8. வாழை - திருச்சி, தூத்துக்குடி, சேலம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

III. எண்ணெய் வித்துக்கள்

9. நிலக்கடலை - வேலூர், திருவண்ணமாலை, விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

10. எள் - தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

11. ஆமணக்கு - தர்மபுரி, சேலம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

12. தேங்காய் - தஞ்சாவூர், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

IV. தோட்டப்பயிர்கள்

13. தேயிலை - நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

14. காபி - நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

15. இரப்பர் - கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

இந்திய அளவில் வேளாண் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலங்கள் :

1. நெல் - உற்பத்தியில் மேற்கு வங்காளம் முதலிடம் வகிக்கிறது.

2. கோதுமை - உற்பத்தியில் உத்திரபிரதேசம் முதலிடம் வகிக்கிறது.

3. சோளம் - உற்பத்தியில் ஆந்திர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.

4. பருப்பு வகைகள் - மத்திய பிரதேசம் பருப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

5. நிலக்கடலை - குஜராத் மாநிலம் நிலக்கடலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

6. கடுகு - ராஜஸ்தான் மாநிலம் கடுகு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

7. சோயாபீன்ஸ் - மத்திய பிரதேசம் மாநிலம் சோயா பீன்ஸ் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

8. சூரியகாந்தி - கர்நாடக மாநிலம் சூரியகாந்தி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

9. கரும்பு - உத்தர பிரதேச மாநிலம் கரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

10. பருத்தி - குஜராத் மாநிலம் பருத்தி உற்பத்தியில் முதலிடம் வருகிறது.

11. சணல் - மேற்குவங்க மாநிலம் சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

12. உருளைக்கிழங்கு - உத்திரபிரதேச மாநிலம் உருளைக்கிழங்கு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

13. வெங்காயம் - மகாராஷ்டிரா மாநிலம் வெங்காயம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

14. வாழை - தமிழ்நாடு மாநிலம் வாழை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

15. மலர்கள் - தமிழ்நாடு மாநிலம் மலர்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

16. மரவள்ளி - தமிழ்நாடு மாநிலம் மரவள்ளி கிழங்கு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

உயிரி வளர்ப்பு பெயர்கள் :

1. வெர்மிகல்சர் - மண்புழு வளர்ப்பு

2. மோரிகல்சர் - மல்பெரிசெடி வளர்ப்பு

3. செரி கல்சர் - பட்டுப்புழு வளர்ப்பு

4. பிஸ்சி கல்சர் - மீன் வளர்ப்பு

5. ஆஸ்டெர் கல்சர் - சிப்பி வளர்ப்பு

6. எபிகல்சர் - தேனீ வளர்ப்பு

7. சில்வி கல்சர் - திட்டமிட்ட மரம் வளர்ப்பு

Previous Post Next Post