கால்நடை வளர்ப்பு

பால், மாமிசம் மற்றும் தோலிற்காக ஆடு மாடுகளை வளர்ப்பதை கால்நடை வளர்ப்பு கால்நடை வளர்த்தல் என்கிறோம். தமிழ்நாடு பால் உற்பத்தி செய்வோர் கூட்டமைப்பு (ஆவின்) மாநிலத்திற்கு தேவையான பால் மற்றும் பால் பொருட்களைத் தயாரிக்கிறது.

பால், மாமிசம் மற்றும் தோலிற்காக ஆடு மாடுகளை வளர்ப்பதை கால்நடை வளர்ப்பு கால்நடை வளர்த்தல் என்கிறோம்.

ஆவின் அமைப்பு ஒரு நாளில் சுமார் 26.10 இலட்சம் லிட்டர் பாலை பதனம் செய்கின்றது. அவ்வாறு பதப்படுத்திய பாலினை 7662 மையங்கள் மூலம் மொத்தத் தமிழ்நாட்டிற்கும் விநியோகம் செய்கிறது.

இந்தியாவின் மொத்த கோழி எண்ணிக்கையில் 17.7 சதவீதம் தமிழகத்தில் உள்ளது. கோழிகளின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டவாது இடத்தில் உள்ளது.

2008-09 ஆம் ஆண்டில் தனிநபர் பால் நுகர்வு ஒரு நாளைக்கு 235 கிராம்களாகவும், தனிநபர் முட்டை நுகர்வு ஆண்டுக்கு 133 முட்டைகளாகவும் உள்ளன.

இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 5.23 சதவீதமாகவும், மொத்த முட்டை உற்பத்தியில் 15.83 சதவீதமாகவும் உள்ளது.

தமிழகத்திலுள்ள மொத்த மேய்ச்சல் நிலத்தின் பரப்பு 1.10 லட்சம் ஹெக்டேர்களாகும், தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கோழிப்பண்ணைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இந்தியாவின் மொத்த கோழிப்பண்ணை ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்கு 16.5 சதவிதமாகும்.

மீன் வளர்ப்பு

தமிழ்நாடு 1076 கி.மீ. தூரத்திற்கு நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. தமிழகத்தில் 13 மாவட்டங்கள் கடற்கரையோரம் அமைந்துள்ளன. அவற்றில் 591 மீன்பிடி கிராமங்கள் அமைந்துள்ளன.

தேசிய அளவில் தமிழ்நாடு மீன் வளர்ப்பில் நான்காவது மாநிலமாகத் திகழ்கிறது, கடலில் மூழ்கி முத்தெடுத்தல் மன்னார் வளைகுடாவின் சிறப்பு அம்சமாகும்.

தூத்துக்குடி தமிழ்நாட்டின் முதன்மை மீன்பிடி துறைமுகமாகும், பழையாறை, வாலி நோக்கம், கொளச்சல் மற்றும் நாகப்பட்டினம் போன்றவை சிறு மீன்பிடி துறைமுகங்களாகச் செயல்படுகின்றன.

கடல்சார் மீன்பிடி உற்பத்தியில் 40 சதவீதம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து பெறப்படுகிறது.

தமிழ்நாட்டில் 370 ஹெக்டேர் பரப்பில் உள்நாட்டு நீர் நிலைகள், 63,000 ஹெக்டேர் பரப்பளவில் நதி முகத்துவாரம், காயல்கள், சதுப்பு நிலங்கள் உள்ளன.

எண்ணூர் மற்றும் புலிகாட் ஏரிகளில் இறால் மீன் செயற்கை முறையில் வளர்க்கப்படுகிறது.

2007-08 ஆண்டிற்கான மீன் உற்பத்தி சுமார் 64,504 டன் ஆகும். மாகாணத்திலேயே 10 சதம் மீன் பிடிப்புடன் வேலூர் மாவட்டம் உள்நாட்டு மீன் பிடித்தலில் முதல் நிலையில் உள்ளது.

கடலூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் 9 சதவித மீன்பிடிப்புடன் இரண்டாம் நிலையில் உள்ளன.

Previous Post Next Post