அழிந்து வரும் குறிப்பிட்ட விலங்குகளை இயற்கைச் சூழலில் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே வனவிலங்கு சரணாலயங்களாகும். தமிழகத்தில் 9 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.

தமிழகத்தில் முதலில் உருவாக்கப்பட்ட சரணாலயம், முதுமலை வனவிலங்கு சரணாலயமாகும், சத்தியமங்கலம் வளவிலங்கு சரணாலயத்தின்

தமிழகத்தில் முதலில் உருவாக்கப்பட்ட சரணாலயம், முதுமலை வனவிலங்கு சரணாலயமாகும், சத்தியமங்கலம் வளவிலங்கு சரணாலயத்தின் முக்கியத்துவம் யாதெனில், அது கிழக்குத் தொடர்ச்சி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் வளவிலங்குகளை இணைக்கும் வழித்தடமாக (Wild life Corridor) விளங்குகிறது.

தமிழக மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயம்

1. முதுமலை சரணாலயம் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1940 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

2. முண்டந்துரை சரணாலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது, இந்த சரணாலயம் 1962 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

3. கோடியக்கரை சரணாலயம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1967 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

4. இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1974 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

5. களக்காடு சரணாலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1976 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

6. வளநாடு சரணாலயம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1987 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

7. சாம்பல்நிற அணில்கள் சரணாலயம் ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1989 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

8. கன்னியாகுமரி வனவிலங்கு சரணலாயம் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் பிப்ரவரி 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

9. சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் நவம்பர் 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

தமிழகத்திலுள்ள தேசிய பூங்காக்கள் :

இயற்கைச் சூழலையும் அதிலுள்ள வன விலங்குகளையும் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டவையே தேசிய பூங்காக்களாகும் தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து தேசிய பூங்காக்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள 5 தேசிய பூங்காவின் பெயர்கள் மற்றும் மாவட்டங்கள், அமைக்கப்பட்ட ஆண்டு :

1. முதுமலை தேசிய பூங்கா நீலகிரி மாவட்டத்தில் உள்ளது, இந்த பூங்கா 1940 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

2. கிண்டி தேசிய பூங்கா சென்னை மாவட்டத்தில் உள்ளது, இந்த பூங்கா 1976 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

3. மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது, இந்த பூங்கா 1980 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

4. இந்திராகாந்தி தேசிய பூங்கா கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது, இந்த பூங்கா 1989 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

5. முக்குருத்தி தேசிய பூங்கா நீலகிரி மாவட்டத்தில் உள்ளது, இந்த பூங்கா 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு திட்டங்கள் :

யானைகள் பாதுகாப்புத் திட்டம் :

யானைகள் பாதுகாப்பு திட்டம் 1992 - ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

மத்திய அரசு 2010-ஆம் ஆண்டு யானையை இந்தியாவின் தேசியப் பாரம்பரிய விலங்காக அறிவித்துள்ளது.

குறிப்பு :

தமிழகத்தில் உள்ள யானைகள் சரணாலயம்

1. நீலகிரி யானைகள் சரணாலயம் - 2003

2. ஆனைமலை யானைகள் சரணாலயம் - 2003

3. கோயம்புத்தூர் யானைகள் சரணாலயம் - 2003

4. ஸ்ரீவில்லிபுத்தூர் யானைகள் சரணாலயம் - 2002

5.தெப்பக்காடு யானைகள் முகாம், முதுமலை - 1910

புலிகள் பாதுகாப்புத் திட்டம்

புலிகளைப் பாதுகாக்க மத்திய அரசால் 1973- ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட திட்டமே புலிகள் பாதுகாப்பு திட்டம் ஆகும்.

1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் நாள், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரால், உத்ராஞ்சலில் உள்ள கார்பெட் தேசிய பூங்காவில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 

1969-ஆம் ஆண்டு பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 

அதில் இந்தியாவில் புலிகள் உட்பட பல உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன என்று அறிவிக்கப்பட்டது.

இந்திய வனவிலங்கு வாரியத்தின் ஆலோசனையின்படி 1970-இல் வனவிலங்கு வேட்டை தடை செய்யப்பட்டது. 1972 - இல் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

புலிகள் சரணாலயம்

புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3 புலிகள் சரணாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1. களக்காடு முண்டந்துரை புலிகள் சரணாலயம் : 

1962-இல் உருவாக்கப்பட்ட இந்த சரணாலயம், 1988-ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் 17-ஆவது புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

2. முதுமலை வனவிலங்கு சரணாலயம் :

இது 2007-ஆம் ஆண்டு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

3. ஆனைமலை - பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் :

இது இந்திராகாந்தி வனவிலங்க சரணாலயம் மற்றும் தேசியப் பூங்காவையும் உள்ளடக்கிய 2744 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.

இது 2008-ஆம் ஆண்டு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மேற்கண்ட இடங்களைத் தவிர முக்குருத்தி தேசியப் பூங்கா மற்றும் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம் ஆகிய இடங்களிலும் புலிகள் கனிசமான எண்ணிக்கையில்

காணப்படுகின்றன.

தமிழகத்திலுள்ள பறவைகள் சரணாலயம்

1. வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

2. வேட்டங்குடி பறவைகள் சரணலாயம் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

3. புலிக்காட் பறவைகள் சரணலாயம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1980 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

4. கரிகிலி பறவைகள் சரணலாயம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

5. காஞ்சிரங்குளம் பறவைகள் சரணலாயம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

6. சித்திரங்குடி பறவைகள் சரணலாயம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

7. கூத்தன்குளம் பறவைகள் சரணலாயம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

8. கரைவெட்டி பறவைகள் சரணலாயம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

9. வெல்லோடு பறவைகள் சரணலாயம் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

10. மேல் செல்வனூர் கீழ் செல்வனூர் பறவைகள் சரணலாயம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1998 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

11. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணலாயம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

12. வடுவூர் பறவைகள் சரணலாயம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது, இந்த சரணாலயம் 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

தமிழகத்தின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயம் மேல் செல்வனூர் - கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயமாகும்.

கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம், தென்னிந்தியாவில் நீர்ப்பறவைகளின் இனப்பெருக்கத்திற்கான மிகப்பெரிய மையமாக விளங்குகிறது.

புலிகாட் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள புலிகாட் ஏரி இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்கரை காயல் (Brackish water lagoon) ஆகும்.

வேடந்தாங்கல் சரணாலயம் இந்தியாவிலுள்ள சிறிய மற்றும் பழமையான சரணாலயங்களுள் ஒன்றாகும்.

விராலிமலை மயில்கள் சரணாலயம் :

இது புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் கோயிலைச் சுற்றி மிக அதிக அளவில் மயில்கள் (Wild Peacocks) காணப்படுகின்றன.

விராலிமலை நகரம், முருகன் கோயில் மற்றும் மயில்கள் சரணாலயம் ஆகியவை தமிழக அரசின் உத்தரவின்படி புராதான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா :

இது 1855-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது சென்னைக்கு 31 கி.மீ தெற்கில் வண்டலூர் என்ற இடத்தில் 1490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இது இந்தியாவின் முதலாவது உயிரியல் பூங்காவாகும். மேலும் இது தெற்காசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

தமிழகத்தின் சிறிய வனவிலங்கு பூங்காக்கள் :

1. அமிர்தி வனவிலங்குப் பூங்கா வேலூர் மாவட்டத்தில் உள்ளது.

2. குரும்பம்பட்டி வன விலங்குப் பூங்கா சேலம் மாவட்டத்தில் உள்ளது.

3. ஏற்காடு மான் பூங்கா சேலம் மாவட்டத்தில் உள்ளது.

4. முக்கொம்பு மான் பூங்கா திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ளது.

5. ஊட்டி மான் பூங்கா நீலகிரி மாவட்டத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள முதலை பண்ணைகள் :

1. அமராவதி முதலைப் பண்ணை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது.

2. ஒகேனக்கல் முதலைப் பண்ணை தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது.

3. குரும்பம்பட்டி முதலைப் பண்ணை சேலம் மாவட்டத்தில் உள்ளது.

4. சாத்தனூர் முதலைப் பண்ணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது.

5. மெட்ராஸ் முதலை வங்கி இது தனியார் முதலைப் பண்ணை ஆகும், இந்த பண்ணை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது, இந்த முதலைப் பண்ணை 1976 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

திருவிடைமருதூர் பாதுகாப்பு பகுதி (Conservation Reserve) :

இது இந்தியாவில் பொதுமக்கள் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட முதலாவது பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

இது தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கசாமி சிவன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது, இதன் பரப்பளவு 0.284 ச.கி.மீ ஆகும்.

இது 2005-ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

சரணாலயங்கள் பெயர்கள் மற்றும் முக்கிய விலங்குகள் :

1. முதுமலை யானைகள் சரணாலயம்

2. முண்டந்துறை புலிகள் சரணாலயம்

3. கிண்டி மான்கள் சரணாலயம்

4. முக்குறுதி புலிகள் சரணாலயம்

5. களக்காடு புலிகள் சரணாலயம்

6. ஸ்ரீவில்லிபுத்தூர் அனில்கள் சரணாலயம்

7. விராலிமலை மயில்கள் சரணாலயம்

8. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

9. ஆனைமலை முள்ளம்பன்றி சரணாலயம்

Previous Post Next Post