மாநில நிதி ஆணையம் (State Finance Commission)

தமிழ்நாட்டில் மாநில நிதி ஆணையமானது 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் நாள் அமைக்கப்பட்டது. இந்த நிதி ஆணையமானது அரசியல் சாசன விதி 243 (1) -இன் படி அமைக்கப்பட்டது.

இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 4 நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை ஆய்வு செய்து அவற்றின் வருவாயைப் பெருக்க வழிவகைகளைக் காண்பது மற்றும் வரிவசூலை சீர்செய்வது போன்றவை இந்த நிதி ஆணையத்தின் முக்கிய பணிகளாகும்.

தமிழ்நாட்டில் மாநில நிதி ஆணையமானது 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் நாள் அமைக்கப்பட்டது. இந்த நிதி ஆணையமானது அரசியல் சாசன விதி 243 (1) -இன் படி அமைக்கப்பட்டது.

3-வது ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் திரு.எம்.ஏ.கௌரிசங்கர் ஆவார். தற்போது 4-ஆவது நிதி ஆணையம் திரு.கே.பணிந்திரரெட்டி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வரி வருவாயிலிருந்து 8 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க, முதல் மற்றும் இரண்டாம் நிதி ஆணையங்கள் பரிந்துரை செய்தன.

மூன்றாவது ஆணையம் 10 சதவீதத்தை பரிந்துரை செய்தது. ஆனால் 2007-08 இல் 8 சதவீதமும், 2008-09 இல் 9.5 சதவீதமும், 2010-12 இல் 10 சதவீதமும் ஒதுக்கப்பட்டது. மாநில மனித உரிமைகள் ஆணையம்

தமிழ்நாட்டில் 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் நாள் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. இது தேசிய மனித உரிமைச்சட்டம் 1993-இன் உட்பிரிவு 21-இன் படி அமைக்கப்பட்டது. இது சென்னையில் அமைந்துள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது. 

இது டெல்லியில் அமைந்துள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்தவர் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆவார்.

மாநில திட்டக்குழு

ஒவ்வொரு மாநிலத்திலும், அம்மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டவும், செயல்வடிவம் கொடுக்கவும், மாநில திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழுவானது 1971-ஆம் ஆண்டு மே 25-ஆம் நாள் அமைக்கப்பட்டது.

மாநில திட்டக்குழுவானது அரசியலமைப்பு சாராத, ஆலோசனை வழங்கும் குழுவாகும். மாநில முதலமைச்சரே, மாநில திட்டக் குழுவின் தலைவராக பதவி வகிப்பார்.

இதன் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மாநில முதல்வரே நியமிப்பார். மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாநில அமைச்சர் அந்தஸ்த்து பெற்று இருப்பார்.

முன்னாள் மாநில திட்டக்குழுவின் தலைவர் செல்வி ஜெ.ஜெயலலிதா மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் - திருமதி சாந்தா ஷீலா நாயர் (ஓய்வுப் பெற்ற IAS அதிகாரி)

மாநில தேர்வாணையம்

தமிழ்நாட்டில் மாநிலத் தேர்வாணையமானது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்று அழைக்கப்படுகிறது. இது அரசுப் பணிக்கு தேவையான பணியாளர்களை குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்கின்றது.

இது அரசியலமைப்பு சட்டப்படி அமைக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். 1924-ஆம் ஆண்டு சுப்பராயலு ரெட்டியார் அமைச்சரவை, அரசுப் பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய பணியாளர் தேர்வுக்குழுவை அமைந்தது.

இதுவே 1929-ஆம் ஆண்டு அரசுப் பணியாளர் நேர்வுக்குழுவாக மாற்றியமைக்கப்பட்டது. 1957-ல் இது "மெட்ராஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்” என்று பெயர் மாற்றப்பட்டது.

பின்னர் 1970-இல் "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” (TNPSC) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டின் நீதித்துறை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் மிக உயர்ந்த நீதி அதிகாரம் பெற்ற அமைப்பாக உயர்நீதிமன்றம் விளங்குகிறது. தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றம் சென்னையில் அமைந்துள்ளது.

இதன் கிளை மதுரையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இதுவே மாவட்டத்தின் உயர்ந்த நீதி அதிகாரம் பெற்ற அமைப்பாகும். மாவட்ட நீதிபதிகளை ஆளுநர் நியமனம் செய்கிறார்.

Previous Post Next Post