சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court)

சென்னை இராஜதானி நகரத்திற்கு விக்டோரியா பேரரசியின் அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி, சென்னை உயர்நீதிமன்றம் 1862-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் நாள் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பகுதிகள் இதன் நீதி எல்லைக்கு உட்பட்டவையாகும். இதன் கட்டுமானம் இந்தோ-சரசானிக் முறையில் 1892-இல் ஹென்றி இர்வின் என்பவரின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமாக சென்னை உயர்நீதி மன்றம் விளங்குகின்றது.

சென்னை இராஜதானி நகரத்திற்கு விக்டோரியா பேரரசியின் அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி, சென்னை உயர்நீதிமன்றம் 1862-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் நாள் நிறுவப்பட்டது.

முதல் உலகப்போரின் ஆரம்பத்தில், 1914-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி எஸ்.எம்.எஸ்.எம்டன் என்ற ஜெர்மானிய போர்க்கப்பலின் தாக்குதலினால், இந்நீதிமன்றத்தின் கட்டுமானம் சேதமடைந்தது.

இதன் தற்போதைய தலைமை நீதிபதி நீதியரசர் எம்.ஒய்.இக்பால் ஆவார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் 35-ஆவது தலைமை நீதிபதியாவார்.

சென்னை உயர்நீதிமன்றம் இந்தியாவில் முறையான சட்ட அறிக்கையின் பிறப்பிடமாக உள்ளது.

சட்ட நிகழ்வுகள் மற்றும் தகவல்களை வெளியிடும் சென்னை சட்ட இதழ் (Madras Law Journal) 1891-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டது. இதுவே இந்தியாவில் தோன்றிய முதல் உயர்நீதிமன்ற சட்ட இதழாகும்.

குறிப்பு :

தமிழ்நாட்டின் கண்பார்வையற்ற முதல் நீதிபதி டி.டி.சக்கரவர்த்தி ஆவார். இவர் கடந்த 2009, ஜூன் 1-இல், கோவை 3-ஆவது கூடுதல் முன்சீப் நீதிபதியாக பொறுப்பேற்றார்.

சென்னை உயர்நீதிமன்றம் தனது 150-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இதன் துவக்க விழா 2011, நவம்பர் 26-இல் நடைபெற்றது.

கொல்கத்தா, சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த மூன்று நீதிமன்றங்கள் தான் "சார்ட்டர்டு ஐகோர்ட்டுகள்" என்று அழைக்கப்படுகின்றன.

சென்னை உயர்நீதிமன்றம் 1862-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போது ஒரு தலைமை நீதிபதி மற்றும் ஐந்து நீதிபதிகள் இருந்தனர். 1911-ஆம் ஆண்டு ஐகோர்ட்டுகள் சட்டம் இயற்றப்பட்ட பின் நீதிபதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆகும். இவர்களில் 42 நிரந்தர நீதிபதிகள், 18 கூடுதல் நீதிபதிகள் இருக்க வேண்டும்.

தற்போது வரை மொத்தம் 313 நீதிபதிகள் பதவியில் இருந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகித்த 24 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பதஞ்சலி சாஸ்திரி, ஏ.எஸ்.ஆனந்த், கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக பதவி வகித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி டி.முத்துசாமி அய்யர் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டாக்டர் பி.வி.ராஜமன்னார், 13 ஆண்டுகள் (1948 முதல் 1961 வரை) இருந்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதி எல்லைக்குள் அடங்கும் சார்பு நீதிமன்றங்கள் மொத்தம் 17 ஆகும்.

1. சென்னை  2. கோயம்புத்தூர் 3. கடலூர் 4. ஈரோடு 5. தர்மபுரி 6. காஞ்சிபுரம் 7. கிருஷ்ணகிரி 8. நாகப்பட்டினம்(திருவாரூர்) 9. நாமக்கல் 10. நீலகிரி 11. பெரம்பலூர்(அரியலூர்) 12. சேலம் 13. திருவண்ணாமலை 14. திருவள்ளூர் 15. வேலூர் 16. விழுப்புரம் 17. புதுச்சேரி.

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை (Madurai bench of the Madras High Court)

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 2004-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் நாள் தொடங்கப்பட்டது. இது மதுரையில் உலகநேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லகோத்தி, மதுரை கிளையை துவக்கி வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 2004-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் நாள் தொடங்கப்பட்டது.

இதன் நீதி எல்லைக்குள் மொத்தம் 13 மாவட்டங்களின் சார்பு நீதி மன்றங்கள் வருகின்றன.

1. திண்டுக்கல் 2. கன்னியாகுமரி 3. கரூர்

4. மதுரை 5. புதுக்கோட்டை 6. ராமநாதபுரம்

7. சிவகங்கை 8. விருதுநகர் 9. தஞ்சாவூர்

10. தேனி 11. தூத்துக்குடி 12. திருநெல்வேலி 13. திருச்சிராப்பள்ளி.

 

Previous Post Next Post