உழவர் சந்தை திட்டம்

விளைகின்ற காய்கறிகளை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடமிருந்து மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. முதல் உழவர் சந்தை 1999-ஆம் ஆண்டு மதுரையில் துவக்கப்பட்டது.

விளைகின்ற காய்கறிகளை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடமிருந்து மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. முதல் உழவர் சந்தை 1999-ஆம் ஆண்டு மதுரையில் துவக்கப்பட்டது.

பெரியார் சமத்துவபுரம்

சமுக நீதியை மேம்படுத்தவும், சாதி சமயமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும், மக்கள் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழவேண்டும் என்ற தந்தை பெரியாரின் செய்தியை பரப்பவும், "பெரியார் சமத்துவபுரம்" திட்டம் 1997-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

முதல் சமத்துவபுரம் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்டு 17-ஆம் நாள் மதுரையில் உள்ள மேலக்கோட்டை என்ற கிராமத்தில் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 145 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வரும்முன் காப்போம் திட்டம்

இத்திட்டம் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் 1996-ஆம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்டது. நோய்கள் வருவதற்கு முன்பே அதனைக் கண்டறிந்து, தடுக்க வேண்டும் என்பதற்காக இது ஏற்படுத்தப்பட்டது. 

கோயில்களில் அன்னாதான திட்டம்

2002ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது.

கோயில்களுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் மதிய உணவு அளிப்பதற்காக இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

இலவச சைக்கிள் திட்டம்

2004-05 -இல் மாணவிகளுக்கு மட்டும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. பின்னர் 2005-06-லிருந்து 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் (BC/MBC/DNC) மாணவ மாணவியர் அனைவருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.

புதுவாழ்வு திட்டம்

இது உலக வங்கியின் நிதியுதவியோடு தமிழக அரசு செயல்படுத்தும் வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற மேம்பாட்டு திட்டமாகும். நவம்பர் 2005-இல் "புதுவாழ்வு" என்ற பெயரில் துவக்கப்பட்ட இத்திட்டம், ஆகஸ்டு 2006 முதல் செயல்படுத்தப்படுகிறது. பின்னர் "வாழ்ந்து காட்டுவோம் திட்டம்'' எனப் பெயர்மாற்றப்பட்ட இத்திட்டம் மீண்டும் "புது வாழ்வு திட்டம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் 70 வட்டங்களில் மொத்தம் 2509 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது.

இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம்

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம் 15.06.2009 அன்று தொடங்கப்பட்டது.

மதிய உணவுத்திட்டம் & சத்துணவுத் திட்டம்

கல்வி பயிலும் மாணவர்களுக்கு பசி இருக்கக்கூடாது என்ற நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. மதிய உணவுடன் சேர்த்து இப்பொழுது முட்டை, உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழம் போன்றவை வழங்கப்படுகிறது.

அன்னபூர்ணா திட்டம்

ஆதரவற்ற மற்றும் எவ்வித வருமானமின்றி வாழும் மூத்த குடிமக்களுக்கு அரிசி வழங்கும் திட்டம் ஆகும்.

தன்னிறைவுத் திட்டம்

இத்திட்டம் 1997-98 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாநில அரசு திட்டமாகும். குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பங்களிப்பாகவும், இரண்டு பங்கு தொகையை அரசு மானியமாகவும் கொண்டு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் அவசியமான பணிகளை பொதுமக்களே தேர்வு செய்து திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தலாம். இத்திட்டம் 2001-2006 வரை “தன்னிறைவுத் திட்டம்" என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டது.

பின்னர் “நமக்கு நாமே திட்டம்” என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இத்திட்டம் மீண்டும் "தன்னிறைவுத் திட்டம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் போதுமான அளவில் நிதி ஆதாரங்களை ஒருமுகப்படுத்தும் நோக்கில் “அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்” துவக்கப்பட்டது.

இத்திட்டம் 2007-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள், வேலூர் மாவட்டத்திலுள்ள திருமாதலம்பாக்கம் ஊராட்சியில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

கலைஞர் வீட்டுவசதித் திட்டம்

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள குடிசைகள் அனைத்தையும் நிலையான கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கு “கலைஞர் வீட்டு வசதித் திட்டம்" 6.01.2010 அன்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம் 2010-11 முதல் 2015-16 வரையிலான 6 ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள அனைத்து குடிசை வீடுகளையும் காங்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகும். 

இதன் மூலம் 2016 -இல் இந்தியாவிலேயே குடிசைகள் இல்லாத முதல் மாநிலம் என்னும் பெருமையை தமிழ்நாடு பெறும்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம்

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் “சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம்" ஆகும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தற்போது 1.75 கோடியிலிருந்து 2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பசுமை வீடுகள் திட்டம்

ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு பதிலாக பசுமை வீடுகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்படி ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் நாட்டிலேயே முதல்முறையாக 300 சதுரடி அளவில், 1.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 5 ஆண்டுகளில் 3 லட்சம் பசுமை வீடுகள் ரூ.5,400 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

முதல்கட்டமாக 2011-12 ஆம் ஆண்டில் 60,000 வீடுகள் 1,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 12,620 கிராம ஊராட்சிகளில் 96 கிராம ஊராட்சிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டதால், மீதமுள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் 79,394 குக்கிராமங்கள் உள்ளன. 

தமிழ்நாட்டில் அனைத்து குக்கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு தற்போது "தாய்” திட்டம் என்கிற (Tamil Nadu Village Habitation Improvement - THAI Scheme) தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்காக 5 ஆண்டுகளில் 3400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குக்கிராமங்களும் இதன் மூலம் பயன்பெறும்.

ஒருங்கிணைந்த பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்

ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் கூடுதல் கட்டிடம், சமையல் அறை, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்யவும், அவற்றைச் சீரமைத்திடவும் "ஒருங்கிணைந்த பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டம் இந்த ஆண்டு (2011) முதல் செயல்படுத்தப்படும்.

Previous Post Next Post