பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர்  பற்றிய தகவல்கள்

2011-மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் பட்டியல் வகுப்பினர்(SC) - 19% சதவீதமும், பழங்குடியினர் (ST) - 1% சதவீதமும் உள்ளனர்.

2001-மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் பட்டியல் வகுப்பினர்(SC) - 19% சதவீதமும், பழங்குடியினர் (ST) - 1% சதவீதமும் உள்ளனர்.

தமிழகத்தில் பட்டியல் வகுப்பினர் அதிகம் வாழும் மாவட்டம் - விழுப்புரம். மிகக் குறைந்த எண்ணிக்கையில் பட்டியல் வகுப்பினர் வாழும் மாவட்டம் - கன்னியாகுமரி. அதிக எண்ணிக்கையில் பழங்குடியினர் வாழும் மாவட்டம் - சேலம்.

குறைந்த எண்ணிக்கையில் பழங்குடியினர் வாழும் மாவட்டம் - புதுக்கோட்டை தமிழகத்தில் பழங்குடியினர் அதிக சதவீதத்தில் வாழும் மாவட்டம் நீலகிரி மாவட்டமாகும். மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 - 40 சதவீதம் பேர் பழங்குடியினர் ஆவர். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலுள்ள பழங்குடி இனத்தவர் மலையாளிகள் ஆவர்.

தமிழகத்தில் பரவலாகவும், சமவெளிப் பகுதிகளிலும் காணப்படும் பழங்குடி இனத்தவர் இருளர் ஆவர். தோடர்கள் அதிகளவில் வாழும் மாவட்டம், நீலகிரி மாவட்டமாகும்.

தமிழக பழங்குடி மக்களின் வாழிடங்கள்

பழங்குடியினர்        வாழும் இடங்கள்

தோடர்கள் - நீலகிரி மலைப்பகுதிகளில்

கோட்டர்கள் - நீலகிரி மலைப்பகுதிகளில்

குரும்பர்கள் - நீலகரி மலைப்பகுதி மற்றும் சமவெளிகளில்

இருளர்கள் - தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றனர்.

மலையாளிகள் - ஜவ்வாது மலை, பச்சை மலை, ஏற்காடு மற்றும் கொல்லி மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

பனியர்கள் - நீலகிரி 

முதுவர்கள் - கோயம்புத்தூர், மதுரை

அரநாடன் - ஆனைமலைப் பகுதிகள் (கோவை)

எரவல்லவன் - கோவைப் பகுதிகள்

மலவேடன் - மதுரை, திண்டுக்கல் (கொடைக்கானல் மலை)

திருநங்கையர் (Transgender)

ஆண்-பெண் ஆகிய இருபாலராகவும் இல்லாதவர்களைக் குறிக்க டிரான்ஸ்ஜென்டர் என்ற சொல் 1970-களில் பரவலாக பயன்படுத்தப்பட்டது.

ஆண்-பெண் ஆகிய இருபாலராகவும் இல்லாதவர்களைக் குறிக்க டிரான்ஸ்ஜென்டர் என்ற சொல் 1970-களில் பரவலாக பயன்படுத்தப்பட்டது.

1980-இல் பிறவியிலேயே ஆண்-பெண் பாலினங்களில் வராத அனைத்து மனிதர்களின் குறியீட்டுப் பெயராக டிரான்ஸ்ஜென்டர் என்ற சொல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. இந்த பிரிவினரையே தமிழில் "திருநங்கையர்” என்று அழைக்கிறோம்.

திருநங்கையர் எனப்படுவோர் உடலால் முழுமையான பெண்களாக இல்லாவிட்டாலும் மனதாலும், உணர்வாலும் தங்களை பெண்களாகவே கருதிக் கொள்பவராவர்.

Read more : தமிழக அரசின் சில நலத்திட்டங்கள்!!!

திருநங்கையரை மூன்றாவது பாலினமாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்கிய முதல் மாநிலமாக தமிழ்நாடு சிறப்புப் பெற்றுள்ளது.

இப்போது கடவுச்சீட்டு (Passport) பெற விண்ணப்பிக்கும்போது ஆண் பெண் - திருநங்கையர் என்று மூன்று பாலினங்களில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிடும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் திருநங்கையர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு முன்மாதிரி கிராமங்களை அமைக்கிறது. திருநங்கையரின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு திருநங்கையர் நலவாரியத்தை அமைத்துள்ளது. 

நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கையருக்கு கல்லூரிகளில் இடமளிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Previous Post Next Post