பெண்கள் நலத்திட்டங்கள்

1947-ஆம் ஆண்டு மகளிர் நலத்திட்டங்களை செயல்படுத்த மகளிர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1952-ஆம் ஆண்டு சமூக நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்த மத்திய சமூக நல வாரியம் ஏற்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் தமிழக அரசு 1954-ஆம் ஆண்டு மாநில சமூக நல வாரியத்தை அமைத்தது.

1947-ஆம் ஆண்டு மகளிர் நலத்திட்டங்களை செயல்படுத்த மகளிர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1952-ஆம் ஆண்டு சமூக நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்த மத்திய சமூக நல வாரியம் ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாரியம் பெண்கள், குழந்தைகள், ஆதி திராவிடர், பழங்குடி மக்கள், அனாதைகள் போன்றோர்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பெண்களின் உரிமைகளை பாதுகாக்க 1990-ஆம் ஆண்டு தமிழக மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டது.

குறிப்பு :

குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் உள்ளது. 1956-ஆம் ஆண்டு பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த குடும்ப நல அறுவை சிகிச்சைத்திட்டம் துவக்கப்பட்டது.

1986 ஆம் ஆண்டு டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக கருவுற்ற ஏழை தாய்மார்களுக்கு பேறுகாலத்திற்கு முன் இரண்டு மாதமும், பேறு காலத்திற்கு பின் இரண்டு மாதமும் பண உதவி அளிக்கப்படுகிறது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் இது ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் ஆகும்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம் இத்திட்டம் விதவைப் பெண்களின் மறுமணத்திற்கு நிதியுதவி வழங்கும் திட்டமாகும்.

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் வறுமையில் வாழும் விதவைத் தாய்மார்களின் மகள்களுக்கு திருமணம் செய்ய நிதியுதவி வழங்கும் திட்டமாகும்.

அன்னை தெரசா நினைவு திருமண உதவித்திட்டம் இது ஆதரவற்ற பெண்களின் திருமணத்திற்காக நிதியுதவி வழங்கும் திட்டமாகும்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித்திட்டம் இது ஜாதி, மத பேதங்களை ஒழிக்கும் வகையில் நடைபெறும் கலப்பு திருமணங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டமாகும். சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் இத்திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.

பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை மகளிர் இலவச படிப்பு திட்டம் இத்திட்டம் 1989-90-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவியர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது.

முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களுக்கு இத்திட்டம் 2007-08-ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.

முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசுக் கொலையை ஒழிக்கவும்,1992-இல் “பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்” அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

1997-ஆம் ஆண்டு இத்திட்டம் “பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்” என பெயரிடப்பட்டது. பின்னர் 2000 - இல் "சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” என பெயரிடப்பட்டது.

தற்போது இத்திட்டத்திற்கு "முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இனிமேல் இத்திட்டத்தின் கீழ் பயன்பெருவோருக்கு, ஒரு பெண் குழந்தைக்கு 50,000 ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகளுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தொட்டில் குழந்தை திட்டம்

1992-ஆம் ஆண்டு தமிழக அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் பெண் குழந்தைகளை பெண்சிசுக் கொலையிலிருந்து பாதுகாத்துள்ளது.

தமிழ்நாட்டில் மகளிர் மேட்பாட்டு சட்டங்கள் 1829-ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு கொண்டுவந்த சட்டம் சதி என்னும் பழக்கத்தை ஒழித்தது. விதவைகள் மறுமணச் சட்டம் 1856-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டியின் முயற்சியால் 1929-ஆம் ஆண்டு வெளிவந்த சாரதாச்சட்டம் குழந்தை திருமணத்தை தடை செய்தது.

1956-ஆம் ஆண்டு இந்து வாரிசுச் சட்டம் மூதாதையார் சொத்தில் சம பங்கு உரிமையை பெண்களுக்கு அளித்தது.

1961-ஆம் ஆண்டு வரதட்சணை தடுப்புச் சட்டம், வரதட்சணை வாங்குவதை தண்டனைக்குரியக் குற்றமாக மாற்றியது.

1978-இல் உருவாக்கப்பட்ட குழந்தைத் திருமணத்தடைச் சட்ட திருத்தம், பெண்களின் திருமண வயதை 15-லிருந்து 18-ஆகவும், ஆண்களின் திருமண வயதை 18-லிருந்து 21-ஆகவும் உயர்த்தியுள்ளது.

1986-இல் கொண்டுவரப்பட்ட வரதட்சணை தடைச் சட்டத் திருத்தம் வரதட்சணை வாங்குபவர் மற்றும் வரதட்சணை தொடர்பாக பெண்களை கொடுமைபடுத்துபவர் மீது கடுமையான தண்டனை வழங்க வழி வகுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு 1997-இல் பெண்களை இகழ்தல் (ஈவ்டீசிங்) தடைச் சட்டம் இயற்றியுள்ளது. 2002-இல் உருவாக்கப்பட்ட இதன் திருத்தச் சட்டம் பெண்களுக்குத் தொல்லை கொடுப்பதைத் தடை செய்துள்ளது.

1999-ஆம் ஆண்டு தமிழக அரசு பெண்களை அநாகரிகமாக சித்தரித்து சுவரொட்டிகள் வெளியிடுவதை தடை செய்துள்ளது.

குறிப்பு :

*இந்திய அரசியலமைப்புச் சட்டம், சரத்து 23 மற்றும் 24 பெண்களின் விடுதலையைப் பற்றி கூறுகிறது. * சரத்து 23, பெண்களை வியாபாரப் பொருளாகச் செயல்படுவதைத் தடை செய்கிறது.

தமிழக அரசு 1967-ஆம் ஆண்டு இந்து திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வ திருமணங்களாக அங்கீகரித்துள்ளது.

தமிழகத்தில் இந்துத் திருமணங்கள் கட்டாயப் பதிவு 2007-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்களின் நலன் காக்க இயற்றப்பட்ட சட்டங்கள் 

தொழிற்கூட சட்டம் - 1948,

தோட்ட தொழிலாளர் சட்டம் - 1951,

சுரங்கச் சட்டம் - 1952,

ஆகியவை ஆண், பெண் வேறுபாடின்றி சமஊதியம் வழங்க வழிவகை செய்துள்ளன.

1961-ஆம் ஆண்டு பெண்களின் உடல் நலம் காக்க பேறுகால பயன் சட்டம் இயற்றப்பட்டு, பேறு காலத்தில் பெண்களுக்கு முறையான ஊதியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

1976-ஆம் ஆண்டின் சம ஊதிய சட்டத்தில் சம பணிக்கு சம ஊதியம் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உலக மகளிர் மாநாடு

முதலாவது உலக பெண்கள் மாநாடு 1975-ஆம் ஆண்டு மெக்சிகோ நகரில் நடைபெற்றது. இரண்டாவது உலக மகளிர் மாநாடு 1980-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டிலுள்ள கோபென்ஹேகன் நகரில் நடைபெற்றது. மூன்றாவது உலக மகளிர் மாநாடு 1985-ஆம் ஆண்டு கென்யாவிலுள்ள நைரோபியில் நடைபெற்றது.

1995-ஆம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நான்காவது உலக மகளிர் மாநாடு நடைபெற்றது. ஐந்தாவது உலக மகளிர் மாநாடு 2015-இல் நடைபெறவுள்ளது. மார்ச் 8 - சர்வதேச பெண்கள் தினம். 1978-சர்வதேச பெண்கள் ஆண்டு (ஐ.நா.சபை).

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டம் தமிழக அரசு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிமக்களின் சமுதாய மேன்மைக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

1974-ஆம் ஆண்டிலிருந்து தாட்கோ எனப்படும் ஆதிதிராவிடர்கள் வீட்டு வசதிக் கழகம் செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்விஅளிக்கப்படுகிறது.

பழங்குடியினர் நலத்திற்காக தனி இயக்குனரகம் 2000-ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றது. 2007-ஆம் ஆண்டு, ஏப்ரல் 20-ஆம் நாள் தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரியம் அமைக்கப்பட்டது.

தீண்டாமையை ஒழிக்கவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகளை அகற்றவும் 1955-ஆம் ஆண்டு உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1989-ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடைச்சட்டம் ஆகியவை தமிழகத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டம்

1992-ஆம் ஆண்டு உடல் ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு இயக்குனரகத்தை தமிழக அரசு அமைத்தது. உடல் ஊனமுற்ற குழந்தைகள் கல்வி பெற 25 சிறப்பு பள்ளிகள் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இலவச கல்வி, உணவு, உறைவிடம், உதவித்தொகை போன்றவை வழங்கப்படுகிறது.

கல்வி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் அரசு ஊனமுற்றவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு செய்துள்ளது. 

ஆதரவற்றோர் நலத்திட்டம்

தமிழக அரசு ஏழை விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அதாவது 18 வயது முதல் 40 வயது வரையிலானவர்களுக்கு தாம்பரம், கடலூர், சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், காரைக்குடி போன்ற 6 இடங்களில் சேவை இல்லங்கள் ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்தம் என்கின்ற திட்டம் 1000க்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகள் வசிக்கும் அனாதை இல்லங்களில் நூலகங்களை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஓய்வூதிய திட்டம்

1. முதியோர் ஓய்வூதியம் (பொதுத் திட்டம்) திட்டம் - 1962 

2. உடல் ஊனமுற்றோருக்கான ஓய்வூதியத் திட்டம் -1974

3.ஆதரவற்ற விதவைகளுக்கான ஓய்வூதியத் திட்டம் -1975

4. ஆதவரற்ற விவசாய தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டம் - 1981

5. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம் - 1986

Previous Post Next Post