எ.பி.ஜே.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு (A. P. J. Abdul Kalam)

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும், சிறந்த விஞ்ஞானியுமான ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம், 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும், சிறந்த விஞ்ஞானியுமான ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம்,

இந்தியாவின் ஏவுகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் ஏவுதல் போன்றவற்றில் இவரின் பங்களிப்பு மகத்தானதாகும். எனவே தான் இவர் "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்று அழைக்கப்படுகிறார்.

1988-இல் நடைபெற்ற இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுதச் சோதனையான பொக்ரான் - II சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார்.

இவர் திருவனந்தபுரத்திலுள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் வேந்தராகவும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மைசூர் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராகவும் இருந்து வருகிறார்.

அக்னிச் சிறகுகள், எழுச்சித் தீபங்கள், இந்தியா 2020, அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை போன்றவை இவரது நூல்களாகும். இவருக்கு 1997-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

எம்.எஸ்.சுவாமிநாதன் வாழ்க்கை வரலாறு (Mankombu Sambasivan Swaminathan)

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், ஒரு வேளாண் விஞ்ஞானியாவார்.

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், ஒரு வேளாண் விஞ்ஞானியாவார்.

இவர் 1925-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் கும்பகோணத்தில் பிறந்தார். இந்தியாவின் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானியான இவர் 1988-இல் சென்னையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தை நிறுவினார்.

அங்கு வேளாண்மை, உயிரிதொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவர் இந்தியாவின் நிலைத்த மேம்பாட்டிற்கும். உணவுப் பாதுகாப்பிற்கும் நீடித்த வேளாண்மையே (Sustainable Agriculture) உகந்தது என்று அறிவுறுத்தி வருகிறார். இதனையே இவர் பசுமைமாறா புரட்சி (Evergreen Revolution) என்கிறார்.

இவரது முக்கிய நூல்கள் :

An Evergreen Revolution

Agrobiodiversity and Farmer's Rights

Sustainable Agriculture

Wheat Revolution: a Dialogue

இவர் தற்போது ராஜ்யசபாவின் உறுப்பினராகவும். தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் உறுப்பினராகவும் (NAC) உள்ளார்.

மயில்சாமி அண்ணாதுரை வாழ்க்கை வரலாறு (Mylswamy Annadurai)

தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை இந்திய விண்வளி ஆய்வு மையத்தில் (ISRO) பணியாற்றி வருகிறார். இவர் செயற்கைக்கோள் துறையில் முன்னணி தொழில்நுட்ப வல்லுநராவார்.

தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை இந்திய விண்வளி ஆய்வு மையத்தில் (ISRO) பணியாற்றி வருகிறார்.

இந்தியா முதன் முதலில் நிலவுக்கு அனுப்பிய ஆய்வுக்கலமான சந்திரயான் - 1 மற்றும் சந்திரயான் - 2 திட்டத்தின் திட்ட இயக்குனராவார். சந்திரயான் வடிவமைப்பில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

இவர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள கோதவாடி என்ற ஊரில் 1958, ஜூலை 2-இல் பிறந்தார். தமிழ் வழியில் படித்த இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1982-ஆம் ஆண்டு பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில், எலக்ட்ரானிக்ஸ் துறையில் (ME) முதுநிலைப் பட்டம் பெற்றார். அதே ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்தார். இவரது பேச்சுக்கள் இந்திய மாணவர்களிடையே இத்துறையில் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.

இவரது வாழ்க்கைக் குறிப்பு 10-ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் பாடமாக இடம்பெற்றுள்ளது.

இவர் தமது விடுமுறை நாட்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எனவே தான் இவர் "இளைய கலாம்"  என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இவரது வாழ்க்கைக் குறிப்பு 10-ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் பாடமாக இடம்பெற்றுள்ளது.

சந்திரயான்-1 (Chandrayaan-1)

இது நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதலாவது ஆளில்லா விண்கலமாகும். இது 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் நாள் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி11 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது.

இது நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதலாவது ஆளில்லா விண்கலமாகும்.

இது 2009, ஆகஸ்ட் 29 வரை மொத்தம் 312 நாட்கள் விண்வெளியில் செயல்பட்டது. அப்போது திட்டமிடப்பட்ட இலக்குகளில் 95 சதவீதத்தை அது நிறைவு செய்தது.

இது நிலவின் மண்ணில் நீர் மூலக்கூறுகள் பரவியிருப்பதைக் கண்டறிந்துள்ளது. சந்திரயானின் கனிம வரைகருவி (Moon Minerology Mapper) நிலவு முற்காலத்தில் முற்றிலும் உருகிய நிலையிலிருந்ததை உறுதி செய்தது.

நிலவின் கனிம வளம் பற்றிய தகவல்கள் உயர்பகுதிறன் நிறமாலை மூலம் பெறப்பட்டது. லேசர் தொலைவறியும் கருவி, நிலவின் துருவங்கள் மற்றும் முக்கிய பகுதிகள் பற்றிய தகவல்களை அளித்துள்ளது. 

நிலவின் மேடுபள்ளங்களை நில வரைபட ஒளிப்படக்கருவி பதிவு செய்தது. இது புவியின் முழுவடித்தையும் முதன்முறையாக பதிவு செய்து அனுப்பியது.

குறிப்பு :

சந்திராயன் - II விண்கலமானது 2014-ஆம் ஆண்டில் செலுத்தப்படவுள்ளது.

இராமானுஜன் வாழ்க்கை வரலாறு (Srinivasa Ramanujan)

மாபெரும் கணித மேதையான சீனிவாச இராமனுஜன் 1887 டிசம்பர் 22-இல் ஈரோட்டில் பிறந்தார். இவர் 1914 முதல் 1918 வரையிலான காலத்தில் 3000-க்கும் மேற்பட்ட கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். 1918-ஆம் ஆண்டில் லண்டல் ராயல் சொசைட்டியின் உறுப்பினரானார். 

மாபெரும் கணித மேதையான சீனிவாச இராமனுஜன் 1887 டிசம்பர் 22-இல் ஈரோட்டில் பிறந்தார்.

ராமானுஜரின் ஆய்வுகளில் தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ், தியரி ஆஃப் நம்பர்ஸ், டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ், தியரி ஆஃப் பார்டிஷன்ஸ், எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்டு கன்டினியூடு ஃப்ராக்சன்ஸ் ஆகியவை மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன. இவருடைய மாக் தீட்டா ஃபங்சன்ஸ்' எனும் ஆராய்ச்சி முடிவுகள் மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

இவர் 1920 ஏப்ரல் 26-இல் தமது 33-ஆவது வயதில் காலமானார். இவரது மரணத்திற்கு பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு இவரது பிறந்தநாளை (டிசம்பர் 22 ஆம் தேதியை) மாநில தகவல் தொழில்நுட்ப தினமாக கொண்டாடுகிறது. 1962-ஆம் ஆண்டு இந்திய அரசு இவரது நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது.

2011-ஆம் ஆண்டு இவரது 125-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது இராமானுஜன் பிறந்த நாளான டிசம்பர் 22, இனி தேசிய கணித நாளாகக் கொண்டாடப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

சர்.சி.வி.இராமன் வாழ்க்கை வரலாறு (C. V. Raman)

சந்திரசேகர வெங்கட்ராமன், 1888-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இவர், ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் போது, சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தைக் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயரிடப்பட்டது.

சந்திரசேகர வெங்கட்ராமன், 1888-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இவர், ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் போது, சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தைக் கண்டுபிடித்தார்.

இந்த கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1930-ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. முழுமையாக இந்தியாவிலேயே படித்த அறிஞர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்தது இதுவே முதல் முறையாகும். மேலும் இவரே நோபல் பரிசு பெற்ற முதல் தமிழராவார்.

இவர் 1926-இல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை வெளியிட்டு அதன் தொகுப்பாசிரியராகவும் பணியாற்றினார். இந்திய அறிவியல் கழகத்தை (Indian Science Academy) ஆரம்பித்து அதன் தலைவராகவும் பணியாற்றினர். 

இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் இவர் நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Institute) இயக்குனராக கடைசிநாட்கள் வரை பணியாற்றினார். இவர் 1970, நவம்பர் 21-இல் மரணமடைந்தார்.

இவருடைய சகோதரரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 1924-இல் லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெலோசிப் வழங்கப்பட்டது.

1929-இல் பிரிட்டிஷ் அரசு, இவருக்கு 'நைட் ஹூட் ' பட்டம் வழங்கி. சிறப்பித்தது. 1929-இல் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் வழங்கப்பட்டது. 1954-ஆம் ஆண்டு இந்தியாவின் 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. 1957-இல் உலக லெனின் பரிசு வழங்கப்பட்டது.

சுப்பிரமணியன் சந்திரசேகர் வாழ்க்கை வரலாறு (Subrahmanyan Chandrasekhar)

வானியல் இயற்பியலாளரான சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910, அக்டோபர் 19-இல் பிரிட்டிஷ் இந்தியாவின் லாகூரில் பிறந்தார். பிறகு இவரது குடும்பம் சென்னையில் குடியேறியது.

இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருந்த போது தான், இவரது சித்தப்பா சர்.சி.வி.இராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக, இவருக்கும், வில்லியம் ஃபௌலருக்கும் 1983-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வானியல் இயற்பியலாளரான சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910, அக்டோபர் 19-இல் பிரிட்டிஷ் இந்தியாவின் லாகூரில் பிறந்தார்.

இவர் தமது வாழ்நாளின் பெரும் பகுதியை ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் கழித்தார். இவர் 1953-லிருந்து ஐக்கிய அமெரிக்க குடிமகனானார். இவருக்கு 1944-ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் ஃபெலோஷிப் வழங்கப்பட்டது. இவர் 1995-ஆகஸ்ட் 21-இல் இயற்கை எய்தினார்.

சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய-அமெரிக்கரும், கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக்கழகத்தின் உயிரியலாளரும் ஆவார். இவர் 1952-ஆம் ஆண்டு சிதம்பரத்தில் பிறந்தார்.

செல்களுக்குள் ரைபோசோம் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான பற்றி ஆய்வுக்காக, வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டைட்ஸ் மற்றும் அடா யோனட்ஸ் ஆகிய மூவருக்கும் 2009-ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவர் நோபல் பரிசைப் பெற்ற மூன்றாவது தமிழர் ஆவார். இவருக்கு முன்னர் சர்.சி.வி.ராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983) ஆகியோர் நோபல் பரிசைப் பெற்றிருந்தனர். இவருக்கு 2010-ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூசன் விருது வழங்கப்பட்டது. இவருக்கு 2011 டிசம்பர் 31-இல் பிரிட்டிஷ் அரசு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. 

ஆர்.சிதம்பரம் வாழ்க்கை வரலாறு

இந்திய அணு விஞ்ஞானியும், புகழ் பெற்ற உலோகவியல் நிபுனருமான இராஜகோபாலன் சிதம்பரம், 1936 டிசம்பர் 11-இல் சென்னையில் பிறந்தார். இவர் தற்போது இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். இவர் பாபா அணு ஆய்வு மையத்தின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் 1974-இல் பொக்ரானில் நடைபெற்ற அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்திய அமெரிக்க சிவில் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்னர், பன்னாட்டு அணுசக்தி முகமையின் (IAEA) இயக்குனர் குழு 'பாதுகாப்பு உடன்பாட்டை' ஏற்றுக் கொள்ள இவர் ஆற்றிய பங்கு முதன்மையானதாகும்.

இவர் பன்னாட்டு அணு சக்தி முகமையின் (IAEA) மாண்புடைய நபர்களின் குழு அங்கத்தினர்களில் (Commission of Eminent Persons) ஒருவராக உள்ளார். இவர் 1988-இல் பொக்ரானில் நடைபெற்ற (ஆபரேசன் சக்தி) அணுகுண்டு சோதனையிலும் முக்கிய பங்காற்றினார். இவர் இந்திய அணுசக்தி கமிஷனின் உறுப்பினராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரது சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ (1975), பத்மவிபூஷன் (1999) விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது. 

கே.எஸ்.கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு (டிசம்பர் 4, 1898 - ஜூன் 14, 1961)

கரியமாணிக்கம் சீனிவாச கிருஷ்ணன், ஒரு புகழ்பெற்ற இயற்பியலாளர் ஆவார். இவர் தனது குரு சர் சீ.வி. இராமனுடன் இணைத்து இராமன் விளைவைக் கண்டுபிடித்தார்.

இவர் படிசு காந்தவியல், காந்தம்சார் வேதியியல், காந்தப் பண்புடைய படிகங்களில் காந்தப்பண்பு சீர்மாறுகை (Magnetic Anisotropy) ஆகிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

இவர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு என்ற ஊரில் பிறந்தார். இவர் 1940-இல் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் ஃபெலோவாகத் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு 1946-இல் சர் பட்டம் வழங்கப்பட்டது. 1954-ஆம் ஆண்டு பத்மபூசன் விருது பெற்றார். 1961-இல் இவருக்கு பட்னாகர் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மகாதேவ சுப்பிரமணிய மணி வாழ்க்கை வரலாறு

இந்திய பூச்சியியல் நிபுனரான (Entomologist) பகாதேவ சுப்பிரமணிய மணி 1908, மார்ச் 2-இல் தஞ்சாவூரில் பிறந்தார். உயர் பகுதிகளில் (High Altitude) வாழும் பூச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் இவர் சிறந்து விளங்கினார். இவர் 250 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 34 புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.

High Altitude Entomology, Ecology and Biogeography of India போன்றவை இவரது முக்கிய நூல்களாகும். இவர் நார்வே நாட்டிலுள்ள ஒஸ்லோ நகரில் நடைபெற்ற யுனெஸ்கோவின் மனிதனும் உயிர்கோளமும் நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்றார்.

சிவதானு பிள்ளை வாழ்க்கை வரலாறு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) சிறந்த விஞ்ஞானியாக விளங்கும் சிவதானுப்பிள்ளை, 1947-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி நாகர்கோயிலில் பிறந்தார்.

இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பின்னர் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் மேலாண்மை கல்வி பயின்றார். பின்னர் 1996இல் புனே பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

இவர் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் முதன்மை செயல் அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குனராக உள்ளார். இவர் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள், இதழ்கள் மற்றும் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

Nanoscience and Nanotechnology in Engineering 

Ocean Warfare: The technology waves

Revolution in Leadership - Building technology Competence. Nanotechnology Engineering in Nano and Biomedicine: Devices and applications போன்றவை இவரது சில நூல்களாகும்.

இராமானுஜம் வரதராஜப் பெருமாள் வாழ்க்கை வரலாறு

இவர் இந்தியாவின் புகழ்பெற்ற வானூர்தி விஞ்ஞானி மற்றும் விண்வெளி பொறியாளர் ஆவார். இவர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றினார். 

செயற்கைக்கோள் ஏவும் வாகனமான பி.எஸ்.எல்.வி.யின் முதல் மூன்று பயணங்களில், அதன் பயணத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் செலுத்துதலில் இவர் முக்கிய பங்காற்றினார். 1996 முதல் 2001 வரை ஜி.எஸ்.எல்.வி. திட்டத்தின் இயக்குனராக பணியாற்றினார்.

2001-முதல் திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் திட்ட துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். 2002-இல் இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

எஸ்.ஆர்.ரங்கநாதன் வாழ்க்கை வரலாறு

இந்திய நூலகவியலின் தந்தை என்றழைக்கப்படும் சீர்காழி இராமாமிருதம் ரங்கநாதன், 1892-இல் சீர்காழியில் பிறந்தார். இவர் மங்களூர், கோயம்புத்தூர், சென்னைப் பல்கலைக்கழகங்களில் கணித பேராசிரியராகப் பணியாற்றினார். 

நூலகவியலாளரான இவர், நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகப்படுத்தினார். இவரே கொலோன் நூற்பாக்க முறையை உருவாக்கியவராவார்.

நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது. 

வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு (மே 18, 1929 -மார்ச் 3, 2011)

சர்வதேச புகழ்பெற்ற வானவியல் அறிஞரான வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் 1929-ஆம் ஆண்டு சென்னை புறநகர் பகுதியான தண்டையார்பேட்டையில் பிறந்தார். வானவியல் (Astronomy) அறிவியல் வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

இவர் 1988 முதல் - 1994 வரை சர்வதேச வானவியல் யூனியனின் (International Astronomical Union) துணை தலைவராக பணியாற்றினார். இவர் உலகின் மிகச்சிறந்த ரேடியோ வானவியல் அறிஞர்களில் ஒருவராக விளங்கினார்.

இவரது ஆய்வுகள் Pulsars, Interstellar Clouds, Galaxy Structures & Other Celestial Bodies பற்றிய பல தகவல்களை அளித்துள்ளது.

டாக்டர் வைத்தியநாதசுவாமி சந்தானம் வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் சிறந்த பருத்தி விஞ்ஞானியான வைத்திய நாதசுவாமி சந்தானம், ஜூலை 31, 1925-இல் திருவாரூரில் பிறந்தார்.

இவர் 1975 முதல் 1983 வரை ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் கழகத்தின் (FAO) நீண்டகால பருத்தி நிபுனர் மற்றும் திட்ட தலைவராக மியான்மரில் பணியாற்றினார்.

1984 முதல் 1987 வரை மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் பருத்தி ஆலோசகராகப் பணியாற்றினார்.

Previous Post Next Post