ம.பொ.சிவஞானம் வாழ்க்கை வரலாறு (M. P. Sivagnanam)

ம.பொ.சிவஞானம் (ஜூன் 26, 1906 அக்டோபர் 3, 1995) தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போரட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அழைக்கப்படார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம.பொ.சி. என்று ஆயிற்று.

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 1906, ஜூன் 26-இல் பிறந்தார். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார்.

ம.பொ.சிவஞானம் (ஜூன் 26, 1906 அக்டோபர் 3, 1995) தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போரட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அழைக்கப்படார். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம.பொ.சி. என்று ஆயிற்று.

சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்து ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். இவருக்கு சிலம்புச் செல்வர் என்ற விருது, சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பட்டது.

1946-ஆம் ஆண்டில் தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார். 1954-ஆம் ஆண்டு ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகினார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் போராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது வடக்கு எல்லை போராட்டத்தை நடத்தி திருத்தணியை தமிழகத்துடன் இணைத்தார்.

இவர் கட்டபொம்மன் மற்றும் வ.உ.சிதம்பரம் ஆகியோரின் வரலாற்றை நூல்களாக எழுதியுள்ளார். இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்ற நூலுக்காக 1966- ஆம் அண்டு சாகித்திய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இவர் 'எனது போராட்டம்' என்ற பெயரில் தன் வரலாற்றை எழுதியுள்ளார். இவர் 'செங்கோல்' என்ற ஒரு வார இதழையும் 'தமிழ் முரசு' என்ற இதழையும் நடத்தினார்.

தமிழக மேலவையின் தலைவராக பணியாற்றினார். 2006-ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கியும், இவரது உருவம் பொறித்த நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டும் சிறப்பு செய்துள்ளது.

ப.ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு (P. Jeevanandham)

வீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம். நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பட்டப்பிள்ளை.

உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சொரிமுத்து. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது “சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார்.

வீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம். நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பட்டப்பிள்ளை.

வ.வே.சு ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வளதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார்.

1933-இல் ஜீவா எழுதிய "பெண்ணுரிமை கீதாஞ்சலி” என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூலாகும்.

தமது கொள்கையைப் பரப்ப 1937-இல் “ஜனசக்தி” நாளிதழைத் தொடங்கிய ஜீவா, “தாமரை” என்ற இலக்கிய இதழை 1959-இல் தொடங்கினார்.

வைக்கம் சத்தியாகிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் பங்கேற்றார்.

தொழிலாளர் பாதுகாப்புக் கழகம் எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். 1948-இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார்.

ஜீவா எழுதிய "சோசலிசச் சரித்திரம்" மற்றும் "சோசலிசத் தத்துவம்” எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து, அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக் கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஜீவாவிற்கு உருவானது. 'சமதர்மம், 'அறிவு', 'ஜனசக்தி' ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் இக்காலங்களில் ஏற்றிருந்தார். ஈ.வெ.ராவோடு கருத்து முரண் ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ.ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து 'சுயமரியாதை சமதர்மக் கட்சி' யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே 'சமதர்மம்' மற்றும் 'அறிவு' ஆகியவை செயல்பட்டன.

அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது(1936). டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். 1963 - ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி ஜீவா மரணமடைந்தார்.

ஏ.நேசமணி வாழ்க்கை வரலாறு (A. Nesamony)

நேசமணி விளவங்கோடு வட்டத்தை சார்ந்த பள்ளியாடி என்னும் இடத்தில் 12, ஜூலை 1895-ஆம் ஆண்டு அப்பாவு-ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பி.ஏ.பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர், பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல்.பட்டம் பெற்றார். பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் 1921-ஆம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து பணியாற்றினார்.

நேசமணி விளவங்கோடு வட்டத்தை சார்ந்த பள்ளியாடி என்னும் இடத்தில் 12, ஜூலை 1895-ஆம் ஆண்டு அப்பாவு-ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

நேசமணி இளம் வளதிலேயே சமூக விடுதலைக்காக போராடியவர். நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர்சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும், கீழ்சாதி வழக்கறிஞர் உட்கார குந்துமனையும் (Stool) இடப்பட்டிருந்தது. முதல் நாளன்றே குந்து மனையை காலால் உதைத்து தள்ளிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதிக் கொடுமையை ஒழித்தார்.

இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கப் பல போராட்டங்களை இவர் தலைமையேற்று நடத்தினார். அதன் விளைவாக 1956 நவம்பர் 1-இல் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் மக்கள் இவரை 'குமரித் தந்தை' என்றும் 'மார்ஷல் நேசமணி' என்றும் சிறப்பிக்கின்றனர்.

பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்ற தலைவராகவும் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகி சட்டசபைக்கும் சென்றார். தொடர்ந்து நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக தான் இறக்கும் வரை பணியாற்றினார்.

 திருப்பூர் குமரன் வாழ்க்கை வரலாறு (Tiruppur Kumaran)

திருப்பூர் குமரன் இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் 1904-ஆம் ஆண்டு அக்டோபர் 4 - ஆம் தேதி பிறந்தார்.

1932-ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்தின் போது திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்றம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில், இவர் கையில் தேசியக் கொடியை ஏந்தி தொண்டர் படைக்குத் தலைமை ஏற்றுச் சென்றார்.

திருப்பூர் குமரன் இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் 1904-ஆம் ஆண்டு அக்டோபர் 4 - ஆம் தேதி பிறந்தார்.

அப்போது போலிஸ் நடத்திய தடியடியில் மண்டை பிளந்து மயங்கி விழுந்த நிலையிலும், கையில் ஏந்திய தேசியக் கொடியை மண்ணில் விழாமல் காத்தார். இதனால் இவர் “கொடிகாத்த குமரன்” என்று அழைக்கப்படுகிறார்.

பின்னர் ஜனவரி 11, 1932 அன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். தமிழக அரசு இவரது தியாகத்தை போற்றும் வகையில் திருப்பூரில், நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.

2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நினைவு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

Previous Post Next Post