தில்லையாடி வள்ளியம்மை வாழ்க்கை வரலாறு (Thillaiaadi Valliammai)

வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் 1898-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி பிறந்தார்.

இவரது தந்தை முனுசாமி முதலியார், தாய் ஜானகியம்மாள் ஆவர். இவரது பெற்றோர்களின் பூர்வீகம் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள தில்லையாடி என்ற கிராமம் ஆகும்.

வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் 1898-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி பிறந்தார்.

இந்தியாவிற்கு ஒரு முறை கூட சென்று பார்த்திராத நிலையில், வள்ளியம்மை இந்தியா மீது மிகுந்த நாட்டுப்பற்று உடையவராக இருந்தார்.

இவர் தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய அறப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் விடுதலையான வள்ளியம்மை தனது 16-ஆவது வயதில் 1914-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் இறந்தார்.

1971-ஆம் ஆண்டு இந்திய அரசு இவரது நினைவாக தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தில்லையாடி கிராமத்தில், பொதுநூலகத்துடன் கூடிய தில்லையாடி வள்ளியம்மை நினைவு அரங்கை அமைத்துள்ளது.

சிறையில் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் விடுதலையாகும் போது வெறும் எலும்பும் தோலுமாக இருந்தார். அப்போது ஒருவர். நீங்கள் இந்தியராக இருந்து கஷ்டப்படுவதை விட என் தென்ாப்பிரிக்கராக உங்களை பதிவு செய்யக்கூடாது? தேசியக் கொடி கூட இல்லாத இந்தியாவுக்காக போராடி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, வள்ளியம்மை, தனது காவி- வெள்ளை-பச்சை நிற சேலையை கிழித்து இதோ “எங்கள் கொடி! எங்கள் தாய்நாடு!" என்று முழங்கினார்.

வள்ளியம்மை வழங்கிய வடிவிலேயே காந்தியடிகள் தேசியக்கொடியை வடிவமைத்தார். 2008-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் நாள் இவரது நினைவாக, நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

கேப்டன் லட்சுமி வாழ்க்கை வரலாறு (Lakshmi Sahgal)

கேப்டன் லட்சமி, லட்சுமி சுவாமிநாதன் மற்றும் லட்சுமி ஷேகல் என்றெல்லாம் அழைக்கப்பட்ட லட்சுமி, 1914-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை டாக்டர் எஸ்.சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவரது தாயார் ஏ.வி.அம்முகுட்டி என்கிற அம்மு சுவாமிநாதன் ஒரு சமூக சேவகராவார். 

கேப்டன் லட்சமி, லட்சுமி சுவாமிநாதன் மற்றும் லட்சுமி ஷேகல் என்றெல்லாம் அழைக்கப்பட்ட லட்சுமி, 1914-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் சென்னையில் பிறந்தார்.

தாயார் சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று 1938-ஆம் ஆண்டு மருத்துவர் பட்டம் பெற்றார். 1940-இல் சிங்கப்பூர் சென்ற அவர் அங்குள்ள இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்தார்.

1942-ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவம் (INA) உருவாக்கப்பட்டது. அதன் ஒரு பிரிவான ஜான்சி ராணி பெண்கள் படைப் பிரிவு 1943-ஆம் ஆண்டு ஜூலையில் உருவாக்கப்பட்டது.

ஜான்சி ராணி பெண்கள் படைப் பிரிவில் சேர்ந்த லட்சுமி சுவாமிநாதன் பின்னர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் நேதாஜி உருவாக்கிய “ஆசாத் இந்த்" அரசாங்கம் எனப்படும் இந்திய சுதந்திரத்திற்கான தற்காலிக அரசாங்கத்தில் மகளிர் அமைப்புக்கான அமைச்சராக இருந்தார்.

இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கலோனல் பிரேம் குமார் ஷேகல் என்பவரை 1947 மார்ச்சில் மணந்த பின் கான்பூரில் வாழ்ந்து வருகிறார்.

1971-இல் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிய) சேர்ந்தார். 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில், அப்துல்கலாமை எதிர்த்து போட்டியிட்டார். 1998-ஆம் ஆண்டு கேப்டன் லட்சுமிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி வாழ்க்கை வரலாறு (Muthulakshmi Reddy)

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜூலை 30, 1886-ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்தார். இவரே இந்தியாவின் முதல் பெண் மருத்துவராவார்.

1923-ஆம் ஆண்டு இவரது தங்கை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அதனால் புற்று நோயை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சபதம் மேற்கொண்டார். எனவே 1949 -ஆம் ஆண்டு புற்றுநோய் மருத்துவ நிவாரண மருத்துவமனையை தொடங்கினார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜூலை 30, 1886-ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்தார். இவரே இந்தியாவின் முதல் பெண் மருத்துவராவார்.

இவரது சீறிய முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியப்பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார்.

டாக்டர் முத்துலட்சுமி மருத்துவம் மட்டுமின்றி, அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.

தமிழ்நாட்டில் காணப்பட்ட கொடிய பழக்கமான தேவதாசி முறையை ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.

தேவதாசி முறை ஒழிப்பில் இவர் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக, 1929-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

இவரது முயற்சியின் விளைவாக நீதிக்கட்சி அரசாங்கம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது. 1930-ஆம் ஆண்டு பூனாவில் அனைத்திந்தியப் பெண்கள் மாநாட்டை நடத்தினார்.

1933 முதல் 1947 வரை, இடையில் இரு வருடங்கள் தவிர தொடர்ந்து இந்திய மாதர் சங்கத்தலைவியாக இருந்தார்.

ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு தரும் பொருட்டு அவ்வை இல்லம் என்ற அடைக்கல நிலையத்தை சாந்தோமில் தொடங்கினார். இவர் 1968-ஆம் ஆண்டு தனது 82-வது வயதில் இந்த உலக வாழ்வைத் துறந்தார்.

டாக்டர் எஸ்.தருமாம்பாள் வாழ்க்கை வரலாறு (Saminathan Dharmambal (1890–1959))

தஞ்சாவூருக்கு அருகில் கருன்தட்டான்குடி என்ற இடத்தில் பிறந்த தர்மாம்பாள், சித்த மருத்துவம் பயின்று சென்னையில் மருத்துவமனை ஒன்றை தொடங்கினார். பின்னர் பொதுச்சேவையில் ஈடுபட்டார்.

தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவர் விதவைகள் மறுமணம், கலப்பு மணம் மற்றும் பெண் கல்வி போன்றவற்றில் ஆர்வம் காட்டினார்.

தஞ்சாவூருக்கு அருகில் கருன்தட்டான்குடி என்ற இடத்தில் பிறந்த தர்மாம்பாள், சித்த மருத்துவம் பயின்று சென்னையில் மருத்துவமனை ஒன்றை தொடங்கினார். பின்னர் பொதுச்சேவையில் ஈடுபட்டார்.

தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், தமிழ் இசை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பல முறை சிறை தண்டனை பெற்றார்.

1940-ஆம் ஆண்டுவரை சமுதாயத்தில் தமிழாசிரியர்களுக்கு மதிப்பு இல்லை. ஊதியமும் உயர்த்தப்படவில்லை.

எனவே இழவு வாரம் என்ற போராட்டத்தை தொடங்கினார். இதன் விளைவாக கல்வி அமைச்சராக இருந்த திரு.அவிநாசிலிங்கம் செட்டியார் பிற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைத் தமிழ் ஆசிரியர்களுக்கும் வழங்க உத்தரவிட்டார். இவர் சென்னை மாணவர் மன்றத் தலைவராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.

இவர் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி இவருக்கு 'வீரத்தமிழன்னை' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இப்பட்டம் பெற்ற தருமாம்பாள் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு 'பெரியார்' என்ற பட்டத்தையும், எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு 'ஏழிசை மன்னர்' என்ற பட்டத்தையும் வழங்கினார். தருமாம்பாள் அம்மையார் தனது 69-ஆவது வயதில் 1959-ஆம் ஆண்டு காலமானார்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்க்கை வரலாறு (Moovalur Ramamirtham Ammaiyar 1883 – 1962)

1883- ஆம் ஆண்டு திருவாரூரில் பிறந்த இராமாமிர்தம் அம்மையார், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூர் என்ற கிராமத்தில் வளர்ந்தார். எனவே மூவலூர் இராமாமிர்தம் என்றழைக்கப்பட்டார்.

இவர் இசை வேளாளர் குலத்தைச் சார்ந்தவர். பழங்காலத்தில் இக்குலத்தில் பிறந்த பெண்கள் இறைப்பணி மற்றும் கலைப்பணிக்காக அர்பணிக்கப்பட்டனர். இச்சமூகம் காலமாற்றத்தில் சிக்கிச் சீரழிந்தது. பிரபுக்கள் மற்றும் ஜமீன்தார்களால் அவமானப்படுத்தப்பட்டனர்.

1883- ஆம் ஆண்டு திருவாரூரில் பிறந்த இராமாமிர்தம் அம்மையார், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூர் என்ற கிராமத்தில் வளர்ந்தார். எனவே மூவலூர் இராமாமிர்தம் என்றழைக்கப்பட்டார்.

தம் குலத்துப் பெண்கள் தாழ்ந்த நிலையில் இருப்பதையும், பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவதையும் உணர்ந்த இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்க முடிவு செய்தார். நாடு முழுவதும் தங்கள் இனப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துச் சொல்லி, அவர்களது விடுதலைக்கு ஆதரவு திரட்டினார்.

காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர் 1925-ஆம் ஆண்டு மயிலாடுதுரையில் இசை வேளாளர் மாநாட்டைக் கூட்டினார்.

இவரது கயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை (அல்லது) மதி பெற்ற மைனர், தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

தேவதாசி முறைக்கு எதரான இவரது போராட்டம், தமிழகப் பெண்களை மட்டுமல்லாது தேசிய அளவிலும் பெண்களை விழிப்படையச் செய்வதற்கு உறுதுணையாக அமைந்தது.

சமூகப்பணிகளில் மட்டுமல்லாமல் தேசிய இயக்கத்திலும் தன்னை இணைத்துக்கொண்ட அம்மையார், பெண்கள் பெருமளவில் தேசிய இயக்கத்தில் ஈடுபட ஊக்குவித்தார். 1962-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார்.

குறிப்பு :

இவரது அரிய உழைப்பையும், தியாகத்தையும் போற்றும் வகையில் தமிழக அரசு, ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியளிக்கும் ஒரு சமூகத் திட்டத்தை ஏற்படுத்தி அதற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் என்று பெயரிட்டு இவரைக் கௌரவித்தது.

Previous Post Next Post