சத்திய விஜய நகரம் கோட்டை (Satya Vijaya Nagaram Castle)

மராத்திய மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்ட சத்திய விஜய நகரம் அரண்மனை பிற்காலத்தில் அவர்கள் வழிவந்தவர்களால் ஆளப்பட்டுவந்தது. சீனுவாசராவ் சாகேப் என்பவரால் இவ்வரண்மனை கட்டப்பட்டது.

மராத்திய மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்ட சத்திய விஜய நகரம் அரண்மனை பிற்காலத்தில் அவர்கள் வழிவந்தவர்களால் ஆளப்பட்டுவந்தது.

இதில் வாழ்ந்த ஜாகிர்தார்கள் அக்காலத்தில் இப்பகுதியின் தலைவராக பல கிராமங்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்தனர். இங்கு இவர்கள் கட்டிய அழகிய அரண்மனை தற்போது அரசின் பயிற்சி மையமாக திகழ்கிறது.

பூசிமலைக்குப்பம் கோட்டை (Pusimalaikuppam Fort)

ஆரணி திருமலா சாகிப் ஜாகிர் என்பவர் தனது மனைவிக்கு ஜெர்மனிய கலை நுட்பத்துடன் கட்டிய கண்ணாடி மாளிகை பூசிமலைக்குப்பம் என்ற இடத்தில் உள்ளது. இது ஆரணி கண்ணமங்கலம் சாலையில் அமைந்துள்ளது.

ஆரணி திருமலா சாகிப் ஜாகிர் என்பவர் தனது மனைவிக்கு ஜெர்மனிய கலை நுட்பத்துடன் கட்டிய கண்ணாடி மாளிகை பூசிமலைக்குப்பம் என்ற இடத்தில் உள்ளது. இது ஆரணி கண்ணமங்கலம் சாலையில் அமைந்துள்ளது.

வேட்டவலம் கோட்டை (Vettavalam fort)

இவ்வூரில் பண்டைய கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சுவடுகளும், பாறை ஓவியங்களும் கிடைத்துள்ளன. இவ்வூரில் அமைந்துள்ள அகத்திஸ்வரர் கோயிலின் கருவறை மேற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வூரில் பண்டைய கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சுவடுகளும், பாறை ஓவியங்களும் கிடைத்துள்ளன. இவ்வூரில் அமைந்துள்ள அகத்திஸ்வரர் கோயிலின் கருவறை மேற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வூரில் உள்ள ஜமீன் மாளிகை, குளம், ஜமீன் சிறப்பு மிக்க இடங்களாகும். இவ்வூருக்கு அருகில் செத்தவரை, கீழ்வாலை ஓவியங்களும் அமைந்துள்ளது. திருவண்ணாமலை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

வந்தவாசி கோட்டை (Vandavasi Fort)

இந்தியாவில் ஆட்சியைப் பிடிப்ப தற்கு ஆங்கிலேய பிரெஞ்ச் கம்பெனி களுக்குள் நடைபெற்ற போர் வரலாற்றுச் சிறப்பு மிக்க வந்தவாசி போர் ஆகும்.

இந்தியாவில் ஆட்சியைப் பிடிப்ப தற்கு ஆங்கிலேய பிரெஞ்ச் கம்பெனி களுக்குள் நடைபெற்ற போர் வரலாற்றுச் சிறப்பு மிக்க வந்தவாசி போர் ஆகும்.

1760 ஆம் ஆண்டு நடைபெற்ற இப்போரில் வந்தவாசி வீரர் என்று அழைக்கப்படுகின்ற சர் அயர்கூட் பிரஞ்ச் தளபதி கெளண்டி லாலியை வென்றதும், 1000-க்கும் மேற்பட்டார் போரில் இறந்த இடமும்தான், இன்று எந்த சுவடுகளும் இல்லாமல் சிதைந்து போயிருக்கின்ற வந்தவாசி கோட்டை.

சுமார் ஒரு கி.மீ. சதுர பரப்பில் அமைந்துள்ள இக்கோட்டையில் சில சிதிலங்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ளது.

ஆரணி கோட்டை (Arani Fort)

பட்டுக்கும் அரிசிக்கும் புகழ்பெற்ற ஆரணி வரலாற்றிலும் புகழ் பெற்றுள்ளது. இவ்வூரில் மராட்டியர், ஹைதர்அலி, நவாபுகள், ஆங்கிலேயர்கள் எனப்பலரால் போர் நடைபெற்ற இடமாமகும்.

பட்டுக்கும் அரிசிக்கும் புகழ்பெற்ற ஆரணி வரலாற்றிலும் புகழ் பெற்றுள்ளது. இவ்வூரில் மராட்டியர், ஹைதர்அலி, நவாபுகள், ஆங்கிலேயர்கள் எனப்பலரால் போர் நடைபெற்ற இடமாமகும்.

ஆரணி கோட்டை கைலாசநாதர்கோயிலும், கோட்டை மைதானத்தில் ஆங்கிலேயப் போர் படைத்தளபதி ராபர்ட் கெல்லீஸ் என்பவரின் நினைவாக அமைக்கப் பெற்ற பெரிய ஸ்தூபி வரலாற்றுச்சிறப்பு மிக்கதாகும்.

துர்க்கம் கோட்டை (Durgam Fort)

செஞ்சி நாயக்கர்களால் கட்டப்பட்ட கோட்டை, தானியக் களஞ்சியமும், கோட்டை சுவர்களும் உள்ளன.

செஞ்சி நாயக்கர்களால் கட்டப்பட்ட கோட்டை, தானியக் களஞ்சியமும், கோட்டை சுவர்களும் உள்ளன.

மோட்டூர் (MOTTUR)

தமிழகத்தின் தொன்மையான வழிபாட்டில் உள்ள மனித உருவொத்த சிலை (Anthropo- morphic Figure) இங்கு அமைந்துள்ள பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் அருகே அமைந்துள்ளது.

தமிழகத்தின் தொன்மையான வழிபாட்டில் உள்ள மனித உருவொத்த சிலை (Anthropo- morphic Figure) இங்கு அமைந்துள்ள பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் அருகே அமைந்துள்ளது.

சுமார் 10 அடி உயரம் 8 அடி அகலம் உள்ள இச்சிலையை அப்பகுதி மக்கள் கூத்தாண்டவர் என்றும் தாய் தெய்வம் என்றும் அழைக்கின்றனர்.

செங்கம் நடுகற்கள்

தமிழகத்தில் தனிப்பெறும் சிறப்பு பெற்றவை செங்கம் நடுகற்கள், இவை தற்போதைய செங்கம், தண்டராம்பட்டு வட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகின்றன.

தமிழகத்தில் தனிப்பெறும் சிறப்பு பெற்றவை செங்கம் நடுகற்கள், இவை தற்போதைய செங்கம், தண்டராம்பட்டு வட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகின்றன.

ஆறாம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்த நடுகற்கள் காணப்படுகின்றன. இந்நடு கற்கள் வட்டெழுத்துத்தமிழ், தொல் குடிமக்கள், வேளிர்கள், கால்நடைகள், சமூக அமைப்பு போன்றவற்றைப் பற்றியறிய மிக முக்கியச் சான்றுகளாக அமைந்துள்ளன.

பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள்

ஜவ்வாதுமலை மேல்சேப்பிளி என்ற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பெருங்கற் கால சினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளன. இதை வாலியர் குகைகள் என்று அழைக்கின்றனர்.

ஜவ்வாதுமலை மேல்சேப்பிளி என்ற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பெருங்கற் கால சினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளன. இதை வாலியர் குகைகள் என்று அழைக்கின்றனர்.

இதன் காலம் சுமார் 3000 ஆண்டுகள் ஆகும். இம்மலையில் உள்ள பாதிரி என்ற கிராமத்தில் சுமார் 5000 ஆண்டு பழமையான புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த சுவடுகளும் கற்கருவிகளும் கிடைத்துள்ளன. இவை தவிர தொன்மையான நடுகற்களும், கோயில்களும் இம்மலையில் காணப்படுகின்றன.

வீரணம், தொண்டமானூர், சம்பந்தனூர், தொரப்பாடி, தான கவுண்டன்புதூர் உள்ளிட்ட பல இடங்களில் பெருங்கற்கால நினைவுச்சின்னங்களான கல் வட்டங்கள், கல்பதுக்கைகள் காணப்படுகின்றன.

Previous Post Next Post