சாத்தனூர் அணை

சாத்தனூர் அணை 1957 ஆம் ஆண்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இவ்வணையின் மொத்த நீர் கொள்ளளவு உயரம் 119 அடியாகும்.

சாத்தனூர் அணை 1957 ஆம் ஆண்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இவ்வணையின் மொத்த நீர் கொள்ளளவு உயரம் 119 அடியாகும்.

தமிழகத்தில் பெரிய அணைகளில் முக்கியமானதாகும். பூங்கா மற்றும் முதலைப் பண்ணை காணத்தகுந்த இடங்களாகும். திருவண்ணாமலையில் இருந்து 30 கி.மீ. தூரத்திலும் செங்கத்திலிருந்து 24 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

பர்வத மலை

சங்க காலத்தில் நன்னன் சேய் நன்னன் ஆண்ட பகுதியான நவிர மலை என்பதே தற்போதைய பர்வதமலை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

சங்க காலத்தில் நன்னன் சேய் நன்னன் ஆண்ட பகுதியான நவிர மலை என்பதே தற்போதைய பர்வதமலை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ள இம்மலையின் மீது அபிதகுஜாம்பாள் உடனமர் மல்லிகார் சுனர் கோயில் அமைந்துள்ளது. போளூரிலிருந்து 25 கி.மீ தூரமும் திருவண்ணாமலையில் இருந்து 30 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

ஜவ்வாது மலை

கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமான ஜவ்வாதுமலை சுமார் 260 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மலையில் பாதிரி என்ற ஊரில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்களும் கீழ்செப்பிளி, மண்டபாறை ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஈமச் சின்னங்களும் உள்ளன.

கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமான ஜவ்வாதுமலை சுமார் 260 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.

பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான காலத்து பல்வேறு நடு கற்கள் இம்மலையில் உள்ளன. சோழர் காலத்தில் கட்டப்பெற்ற கோவிலூர் சிவன் கோயில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்குள்ள மக்கள் தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் பயிரிடுகின்றனர். தேன், மிளகு, பழவகைகளும் இம்மலை வாழ்மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன.

பீமன் அருவி, படகு குழாம், பூங்கா, கோவிலூர் சிவன் கோயில், வைனுபாப்பு தொலைநோக்கி மையம், அமிர்தி வன விலங்கு சரணாலயம் ஆகியன முக்கிய சுற்றுலா இடங்கள் ஆகும். போளூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

ஏரிக்குப்பம் சனீஸ்வரர் கோயில்

ஆரணி படவேடு சாலையில் ஏரிக்குப்பம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது எந்திர சனீஸ்வரர் ஆலயம். சனிபகவானுக்கு அமைக்கப்பட்ட நவக்கிரக தலங்களுள் ஒன்றாகும்.

ஆரணி படவேடு சாலையில் ஏரிக்குப்பம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது எந்திர சனீஸ்வரர் ஆலயம்.

தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில்

வட இந்திய பாணியில் நாகர அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில் தென்னாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் வந்தவாசி - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வந்தவாசியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வட இந்திய பாணியில் நாகர அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில் தென்னாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

கணிகிலுப்பை புத்தர்

வெம்பாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள கணிகிலுப்பை கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோயிலில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை காணப்படுகிறது.

வெம்பாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள கணிகிலுப்பை கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோயிலில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை காணப்படுகிறது.

இச்சிலை அமைந்துள்ள கோயிலுக்கு எதிரே கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த புத்தஸ்ரீ என்று பொறிக்கப்பட்டுள்ள புத்த ஸ்தூபி ஒன்றும் அமைந்துள்ளது. இவ்வூரில் புத்த மதம் வழிபாட்டில் இருந்தமைக்கான சான்றாக இவை திகழ்கின்றன. வந்தவாசி - காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, தூசி கிராமத்திலிருந்து 5 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.

குரங்கணில் முட்டம் அருள்மிகு வாலிஸ்வரர் திருக்கோயில்

தொண்டைநாட்டு பாடல் பெற்ற தலங்களில் 6வதாக வளையம்மை உடனமர் கொய்யாமலர் நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமன் முட்டம் (காகம்) வடிவிலும் இறை வனை வழிபட்ட தலம் என்பதால் இவ்வுருக்கு குரங்கணில்முட்டம் என்று பெயர் வழங்கலாயிற்று என்பர்.

இக்கோயில் அருகே பல்லவர் குடைவரை ஒன்றும் உள்ளது. வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் தூசி கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஆவூர் சிவாலயம்

வேட்டவலம் - திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள ஆவூரில் புகழ்பெற்ற சிவாலயமும், குடைவரைக்கோயிலாக பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. குடைவரைக் கோயிலின் திருச்சுற்றுகள் மிகநேர்த்தியாக அழகாக கண்ணைக்கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

மிகச்சிறிய குடைவரையானாலும், பிற்காலத்தில் இக்கோயில் விரிவுபடுத்தப்பட்டு, பின் படையெடுப்பால் சிதைக்கப்பட்டுள்ளது. இவ்வூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலும் சிற்ப வேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்றது. சிதிலமடைந்த இக்கோயில் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

Previous Post Next Post