அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றம் (1972)

புரட்சித் தலைவர் என்றும் மக்கள் தலைவர் என்றும் போற்றப்படும் எம்.ஜி.ஆர் (மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்)1972-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் நாள் "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற கட்சியைத் தோற்றுவித்தார். 

புரட்சித் தலைவர் என்றும் மக்கள் தலைவர் என்றும் போற்றப்படும் எம்.ஜி.ஆர் (மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன்)1972-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் நாள் "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற கட்சியைத் தோற்றுவித்தார்.

பின்னர் அக்கட்சியின் பெயரை "அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என மாற்றம் செய்தார். - 1973-இல் இக்கட்சி முதன் முதலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

குறிப்பு
திரு.எம்.ஜி.ராமச்சந்திரன்
1962-இல் மேலவை உறுப்பினர்
1967 - இல் பரங்கிமலைத் தொகுதியில் வெற்றிபெற்று
சட்டமன்ற உறுப்பினரானார். 1972 அக்டோபர் 13 - இல் தி.மு.க.விலிருந்து வெளியேற்றம்
1972 அக்டோபர் 18 - இல் அ.தி.மு.க. உதயம். 1977 முதல் 1987 வரை தமிழக முதல்வராக ஆட்சிபுரிந்தார்.
1974-இல் நடைபெற்ற பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது.

1977-இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 131 இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்தது. 1977 ஜூன் 30-இல் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். அது முதல் 1987 வரை தமிழக முதல்வராக ஆட்சிப்புரிந்தார்.

1978 - இல் தமிழகத்தில் 10 + 2 + 3 எனும் கல்வி முறை அமலுக்கு வந்தது சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.

1980- இல் பரம்பரையாக இருந்த கிராம ஊழிய முறை ஒழிக்கப்பட்டது. கர்ணம், கிராம முன்சீப் போன்ற பதவிகளும் ஒழிக்கப்பட்டு அதற்கு பதிலாக “கிராம நிர்வாக அதிகாரிகள்” நியமிக்கப்பட்டனர்.

எம்.ஜி.ஆர் 1980-இல் இவரது ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 1980-இல் நடைபெற்ற 7 - ஆவது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1981-இல் மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. 1981 செப்டம்பர் 15-இல் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

1982இல் கோவையில் பாரதியார் பல்கலைக்கழகமும். கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டது. 1982இல் எம்.ஜி.ஆர் இலவச சத்துணவு திட்டத்தை துவக்கினார்.

1983இல் கிருஷ்ணா நதியிலிருந்து குடிநீர் கொண்டு வருதற்காக ஆந்திர அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

1983 இல் கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் முதல் பிரிவு திறக்கப்பட்டது. 1983 - இல் சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1984இல் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கும்போது தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் அவர் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வரானார்.

1987 டிசம்பர் 24-ஆம் தேதி எம்.ஜி.ஆர் உயிர் நீத்தார். இவருக்குப் பிறகு இவரது மனைவி ஜானகி அம்மையார் 1988 ஜனவரி 7 முதல் 30 வரை தமிழக முதல்வராக பதவி வகித்தார். இவரே தமிழகத்தின் முதலாவது பெண் முதலமைச்சரவார்.

அ.இ.அ.தி.மு.க.வில் 1988-இல் பிளவு ஏற்பட்டு மீண்டும் 1989-இல் ஒன்றாக இணைந்தது. 1991 ஜூன் மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

1991 ஜூன் 24 அன்று செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

இவரே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதலாவது பெண் முதலமைச்சராவார்.பதவியேற்ற அன்று முதன் முதலாக தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.

1992 - இல் அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடக்கம். 1992 - இல் பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான "தொட்டில் குழந்தை திட்டம்” துவங்கப்பட்டது. 1994 - இல் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலுக்கு வந்தன. 1995- இல் எட்டாவது உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடைபெற்றது.

1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தார். தற்போது 2011-இல் நான்காவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார்.

1991 முதல் 1996 வரை ஆட்சி புரிந்த ஜெயலலிதாவின் அரசு, 1996 சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது. மே. 2001இல் நடைபெற்ற 12 - ஆவது சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, மே 14 அன்று ஜெயலலிதா இரண்டாவது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்.

டான்சி நில வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதால் அவர் முதல்வராக பதவியேற்றது செல்லாது என உச்சநீதிமன்றம் செப்டம்பர் 21, 2001 -இல் தீர்ப்பளித்தது. இதனால் ஜெயலலிதா பதவி விலக ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார்.

இதற்கிடையில் டான்சி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 4, 2001-இல் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

அதன் பிறகு ஜெயலலிதா 2002 பிப்ரவரி 21-இல் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2002 மார்ச் 2 - இல் ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார். 2002, மார்ச் 23-இல் "கோயில்களில் அன்னதானத் திட்டம்” தொடங்கப்பட்டது. 2002 - இல் "அனைவருக்கும் கல்வித் திட்டம்” தொடங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சி சேர்க்கையில் ஒற்றை சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடைசெய்யப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் புகையிலைப் பொருட்களின் விற்பனை தடைசெய்யப்பட்டது. 2004 அக்டோபர் 18-இல் கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படையினர் "பட்டுப்பூச்சிக் கூடு ஆபரேஷன்” திட்டப்படி சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றனர்.

2006 சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. தோல்வியடைந்தது. 2011-இல் நடைபெற்ற 14 - ஆவது சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. பெரும் வெற்றிபெற்றது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதா 2011, மே 15 அன்று நான்காவது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். முதல்வராக பதவியேற்றதும் 6 இலவச திட்டங்களுக்கு கையொப்பமிட்டார்.

இலவச அரிசி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், இலவச கால்நடைகள் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கும் திட்டம், முதியோர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Previous Post Next Post