அச்சு இயந்திரம் அறிமுகம்:

இன்று உலகில் கோடானகோடி புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. எப்படி? அச்சிட்டுத்தான்; இந்த அச்சிடும் முறை வந்த பிறகுதான் புத்தகங்கள் வெளி வந்தன... கல்வியில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது. காகித தயாரிப்பு முறை 1000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் ஏற்பட்டது. எனினும்... அச்சுமுறை 14 - ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் உருவானது. ஆதியில் கற்பலகையில் எழுதினார்கள்... ஓலைச்சுவடிகளில் எழுதினார்கள். செப்பேடுகளில் எழுதினார்கள். (இவைகளை அருங்காட்சியகத்தில் காணலாம்). எழுத்துக்கள் எழுதத் துவங்கி பல நூற்றாண்டுகளுக்கு பின்னர், சிலர் அச்செழுத்துகளை முயன்றாலும் முழுமையான சுலபமான அச்செழுத்துகளை கொண்டு வந்த பெருமை குட்டன் பர்க் அவர்களையே சாரும்.

குட்டன்பர்க் இளமைப் பருவம்:

இன்று உலகில் கோடானகோடி புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. எப்படி? அச்சிட்டுத்தான்; இந்த அச்சிடும் முறை வந்த பிறகுதான் புத்தகங்கள் வெளி வந்தன... கல்வியில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது. காகித தயாரிப்பு முறை 1000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் ஏற்பட்டது. எனினும்... அச்சுமுறை 14 - ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் உருவானது. ஆதியில் கற்பலகையில் எழுதினார்கள்... ஓலைச்சுவடிகளில் எழுதினார்கள். செப்பேடுகளில் எழுதினார்கள். (இவைகளை அருங்காட்சியகத்தில் காணலாம்). எழுத்துக்கள் எழுதத் துவங்கி பல நூற்றாண்டுகளுக்கு பின்னர், சிலர் அச்செழுத்துகளை முயன்றாலும் முழுமையான சுலபமான அச்செழுத்துகளை கொண்டு வந்த பெருமை குட்டன் பர்க் அவர்களையே சாரும்.

அச்செழுத்துக்களால் புரட்சி செய்த ஜோஹன்னஸ் குட்டன்பர்க் ஜெர்மனியின் மெயின்ஸ் என்ற ஊரில் 1398 - ஆம் ஆண்டு பொற்கொல்லர் ஃபிரீலிலேடன் இவரின் (இரண்டாம் மனைவி) எல்சுவைரிச் தம்பதிகளின் மகனாய் பிறந்தார். வணிகர் மைன்சின் ஆயருக்கு பொற்கொல்லர், (இதுதான் முக்கிய தொழில்) துணி வியாபாரம் என பல வகை தொழில்களை அவரின் தந்தை செய்து பெரும் செல்வந்தராய் இருந்தார். அரசுக்கு நாணயங்களை செய்து கொடுப்பதில் அவரின் குடும்பம் ஈடுபட்டு வந்தது. பள்ளிப் படிப்பை உள்ளூரில் முடித்தார். பின்னர் உயர் படிப்பை எப்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். 

தந்தை மகனை தொழிலில் ஈடுபடுத்த விரும்பினார். எனினும் குட்டன்பர்க்கிற்கு அச்செழுத்து உருவாக்குவதில் கவனம் சென்றது. சீனாவில் கி.பி. 868 - ஆம் ஆண்டே புத்தகம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால் அதை உருவாக்க பெரும் சிரமப்பட்டிருந்தார்கள். 'களிமண்'ணில் எழுத்துகளை உருவாக்கி அதில் மையை தடவி காகிதத்தில் அச்சிட்டவுடன் மண் எழுத்துக்கள் நசுங்கிவிடும். இதை செய்வதற்கு மிகவும் பொறுமை வேண்டும். அப்படி செய்தாலும் ஒரு பிரதி மட்டுமே எடுக்க முடியும். ஒரு பிரதி எடுக்கவே பல மாதங்கள் ஆகும். அந்த பிரதியிலுள்ள எழுத்துக்களும் பல நாட்களில் மறைந்து போகும்.

 கண்டுபிடிப்பு:

Biography of Johannes Gensfleisch zur Laden zum Gutenberg - அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞான மேதை ஜோஹன்னஸ் குட்டன்பர்க் (1398-1468)

குட்டன்பர்க் முதலில் ரப்பரில் எழுத்துக்களை செய்து.... ஒரு மரப்பலகையில் அதை ஒட்ட வைத்து... உருளைபோல ஒன்றை உருவாக்கி... அதில் பலகையை வைத்து காகிதத்தில் சுழல் முறையில் அச்சிட்டு பார்த்தார்... என்றால் அது சரியாய் வரவில்லை. இது ஒருமுறை மட்டுமே பதிக்க வந்தது. ஒரே அச்சில் பல பக்கங்கள் அச்செழுத்துக்களை உருவாக்க முனைந்தார். முறையில் பயன்படுத்த இவர் பலகைக்கு பதில் உலோகத்தை நினைத்தார். தனது குலத்தொழில் அதற்கு பயன்பட்டது; நாணயத்தை அச்சாக பயன்படுத்த உலோக அச்சு பயன்படுத்தியது இப்போது அவருக்கு பயன்பட்டது. 

திடீரென்று குடும்பத்தில் வறுமை சூழ்ந்தது: அச்சுக் கருவியை தயாரிக்கும் எண்ணத்தில் 'மண்' விழுந்தது. எழுத்துக்களை உலோகத்தில் உருவாக்கி ஒரு உருளையில் அதை பதித்து மேலிருந்து அழுத்துவதைபோல செய்தால் அச்சு நன்றாகவும் விழும் - நிறையவும் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார். அவரின் தொழில் ஆர்வத்தைக் கண்ட 'ஜோஹனீச் ஃபரீஸ்ட்' என்ற செல்வந்தர் உதவிக்கு வந்தார். மிகவும் மகிழ்ந்த குட்டன்பர்க் அச்சுக் கூடத்தை உருவாக்கினார். இயங்கும் எழுத்து உருக்களை (Movable Type) தயாரித்தார். அந்த அச்சுக்கூடத்தின் மூலம் முதன்முதலில் 1450 - ஆம் ஆண்டு ஜெர்மனிய கவிதை ஒன்றை அச்சடித்தார்.

Biography of Johannes Gensfleisch zur Laden zum Gutenberg - அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞான மேதை ஜோஹன்னஸ் குட்டன்பர்க் (1398-1468)

பின்னர் அந்த அச்சுக்களை வீநன முறையில் எந்தவித சிரமமும் இன்றி ஒவ்வொரு பக்கமும் அச்சு விழும்படியான நகரும் அச்சில் 1455 - ஆம் ஆண்டு உலகின் முதல் புத்தமாக இலத்தீன் மொழியில் இரு பாகங்கள் (ஒவ்வொன்றும் 300 பக்கங்கள் பக்கத்திற்கு 42 வரிகள்) கொண்ட முதல் பைபிளை அச்சிட்டு... புத்தக புரட்சியை ஏற்படுத்தினார் குட்டன்பர்க். 180 பிரதிகள் அச்சிடப்பட்டது. அவைகள் சரியான முறையில் விற்கப்படவில்லை. இதனால் பணம் கொடுத்த ஃபரீஸ்ட் பர்க்கிடம் கடனை கேட்டார். பர்க்கால் கடனை திருப்பி கொடுக்க முடியாததால் ஃபரீஸ்ட் நீதிமன்றம் சென்றார். 

பைபிள் பிரதிகள் மற்றும் அச்சுக் கூடத்தையும் கடனுக்கு ஈடாக கைப்பற்றினார் ஃபரீஸ்ட் கைக்காசு இல்லாத நிலையில் வேறு சில தொழில்களை செய்து வந்தார் குட்டன்பர்க். பின்னர் மறுபடியும் அச்சுக்கூடம் அமைத்து சிறு சிறு பிரசுரங்களை அச்சிட்டுக் கொடுத்தார். 1459 - ல் ஃபரீஸ்ட் பாம்பர்க்கில் அச்சுக்கூடம் நிறுவி சில நூல்களை அச்சிட்டார். என்றாலும் 'குட்டன்பர்க்கின்' அளவிற்கு அச்சு வரவில்லை. எனவே அதை கைவிட்டார்.

மறைவு :

இன்று பல்லாயிரம் கோடிகளை அச்சிட்ட நூல்கள் மூலம் வருவாயை ஈட்டும் இத்தொழிலை உலகிற்கு வழங்கிய குட்டன்பர்க் வறுமையால் 1468 - ஆம் ஆண்டு, பிப்ரவரி 3 - ம் தேதி தன் 70 வது வயதில் மரணம் அடைந்தார். செல்போன்... கம்ப்யூட்டர்... இன்னும் புதிய புதிய மாற்றங்கள் வந்தாலும் அச்சின் மூலம் படிப்பதையே மக்கள் என்றும் விரும்புவார்கள். கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் மானிட்டரில் வாசித்தாலும், அதுவும் ஒருவகை அச்சுதானே. குட்டன்பர்க் அச்சிட்ட உலகின் முதல் பைபிளில் 22 பிரதிகள் இன்றும் பாதுகாத்து வருகின்றனர் ஜெர்மானியர். உலகில் அறிவு பரட்சிக்கு வித்திட்ட அச்சுக்கலை மேதையை என்றும் மறவோமாக!

Previous Post Next Post