ஆன்டிசெப்டிக்கின் அறிமுகம்:

இன்றைய மருத்துவ உலகில் அறுவை சிகிச்சையானது சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. உலகில் ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறுவை சிகிச்சையால் தொன்னூற்று ஒன்பது சதவீத நோயாளிகள் வெற்றிகரமாக தேறி மறுவாழ்வைப் பெறுகின்றனர். இன்றைய அறுவை சிகிச்சை பாதுகாப்பை சுமார் 100 வருடங்களுக்கு முன் எதிர்பார்க்க முடியாது. 100 வருடங்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சைக்கு ஒரு நோயாளி சென்றால்... அவர் உயிர் பிழைத்து வந்தால் பேரதிர்ஷ்டம்.

இன்றைய மருத்துவ உலகில் அறுவை சிகிச்சையானது சர்வ சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. உலகில் ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறுவை சிகிச்சையால் தொன்னூற்று ஒன்பது சதவீத நோயாளிகள் வெற்றிகரமாக தேறி மறுவாழ்வைப் பெறுகின்றனர். இன்றைய அறுவை சிகிச்சை பாதுகாப்பை சுமார் 100 வருடங்களுக்கு முன் எதிர்பார்க்க முடியாது. 100 வருடங்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சைக்கு ஒரு நோயாளி சென்றால்... அவர் உயிர் பிழைத்து வந்தால் பேரதிர்ஷ்டம்.

ஏனென்றால் அன்றைய 100 அறுவை சிகிச்சையில் 95 பேர்கள் இறந்து போய்விடுவர். மருத்துவர் நோயாளர்களை சரியான முறையில் அறுவை சிகிச்சை செய்யாததால் இறந்துவிடுகிறார்களா? என்றால் இல்லை என்றே சொல்லலாம். நல்ல முறையில்தான் அறுவை சிகிச்சை செய்கின்றனர். ஆனால் நோயாளிகள் இறந்து விடுகின்றனர். ஏன் இந்த அவல நிலை? மருத்துவ உலகிற்கு இது ஒன்றும் புரியாத புதிராகவே இருந்தது. இந்த கொடும் அவல நிலையை மாற்ற ஒருவர் பிறந்தார். அவர் ஜோசப் லிஸ்டர் என்ற மருத்துவ மேதை, இவர் 1827 - ஆம் ஆண்டு, ஏப்ரல் 5 - ம் தேதி இங்கிலாந்திலுள்ள அப்டன் என்ற ஊரில் பிறந்தார். தந்தை ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் தாய் இசபெல்லா. இவரின் தந்தையும் விஞ்ஞான ஆர்வமுள்ளவர்; ஆராய்ச்சி மனப்பாங்கு உள்ளவர். இவர் நவீன உருபெருக்கியை (மைக்ரோஸ்கோப்) உருவாக்கியவர்.

இளமைப் பருவம்:

புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முனைபவர். தன்னுடைய ஆய்வு எண்ணத்தை மகனுக்கு ஊட்டினார். லிஸ்டரும் தந்தையின் விஞ்ஞான சிந்தனையைப் பெற்று பள்ளியில் நன்கு படித்தார். உயர்நிலைப் பள்ளியில் நன்கு படித்த அவருக்கு மருத்துவராகும் எண்ணம் ஏற்பட்டது. மகனின் ஆர்வத்தை அறிந்த பெற்றோர் அவரை லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற சேர்த்தனர்.

மருத்துவப் படிப்பில் நன்றாக படித்து தேறிய அவருக்கு அறுவை சிகிச்சையில் மிகுந்த ஆர்வம் உண்டானது. இதன் விளைவாக 1861 - ஆம் ஆண்டில் கிளாஸ்கோ தேசிய மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியில் சேர்ந்தார். அறுவை சிகிச்சையின்போது நோயாளிகள் மரணமடைவதைக் கண்டு மிகவும் வேதனை அடைந்தார். இவ்வாறு ஏற்படக் காரணம் என்ன? என்பதைப் பற்றி 24 மணி நேரமும் சிந்தித்தவண்ணம் இருந்தார். மேலும் வெற்றிகரமான அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு தொற்று நோய் ஏற்பட்டு மரணம் அடைவதை நேரடியாக உணர்ந்து... இதற்கு மாற்றுவழி என்ன என்பதை தேடினார். சில சிறந்த மருத்துவர்களிடம் இதைப் பற்றி ஆலோசித்தார். சரியான பதில் அவருக்கு கிடைத்தபாடில்லை.

ஆன்டிசெப்டிக்கின் மருந்து கண்டுபிடிப்பு:

1865 - ஆம் ஆண்டு ஒரு விஞ்ஞான தொழில் மேதை லூயி பாஸ்டர் ( கிருமிகளை ஒழிக்க வழிவகை கண்ட மருத்துவ மேதை அவர்களின் அறிய கட்டுரை ஒன்றை படித்தார். இருண்ட அவரின் இதயத்தில் வெளிச்சம் பளிச்சிட்டது. உயிரினங்களின் திறந்த புண்களின் மேல் படியும் பாக்டீரியாக்கள் என்ற கிருமிகள் உடலில் புகுந்து நோய்த் தொற்றை ஏற்படுத்துகிறது. லிஸ்டர் உடனே ஆய்வு மேற்கொண்டார். லூயி பாஸ்டரின் கருத்து உண்மை என்பதை உணர்ந்தார். நோய் தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அறுவை சிகிச்சைக்கு முன்னர் ஆபரேஷன் தியேட்டரை சுத்தப்படுத்த வேண்டும்.

நோயாளியைத் தவிர வேறு எவரும் பக்கத்தில் வரக் கூடாது. இவர் மூலம் நோய் தொற்றலாம். அறுவை சிகிச்சை கருவிகளை சுடுநீரில் போட்டு... சிகிச்சைக்கு முன்னும் பின்னும்... நன்கு கழுவ வேண்டும். சிகிச்சையின்போது உடன் பணிபுரியும் உதவியாளர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். அறுவை சிகிச்சையின்போது மருத்துவர் 'கைகளை' சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் அறையில் பினாயில் என்ற கார்பாலிக் அமிலத்தை தெளித்துவிட வேண்டும். இவ்வாறு அறுவை கிசிச்சைக்கு முன்னர்.. பாதுகாப்பில் ஈடுபட்டால் நோயாளிகளின் இறப்பை தவிர்க்கலாம் என்பதை உணர்ந்து செயல்படுத்தினார் லிஸ்டர். பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி செய்த அறுவை சிகிச்சை நல்ல பலனைக் கொடுத்தது. ஆம் .... 90 சதவீத இறப்பு 50 சதவீதமாக குறைந்தது. மேலும் குறைக்க நோயாளியின் புண்கள் மீது 'ஆன்டி செப்டிக்' மருந்தை பயன்படுத்தினார் லிஸ்டர்.

பிறகு இறப்பு விகிதம் 15 சதவீதமாக குறைந்தது. தனது இந்த முன்முயற்சிக்கு வழிகாட்டியாய் இருந்த லூயி பாஸ்டருக்கு நன்றி கட்டுரை எழுதினார். மேலும் 1867 - ஆம் ஆண்டு தனது அறுவை சிகிச்சை பற்றிய கட்டுரையை எழுதினார் லிஸ்டர். அக்கட்டுரையை படித்த மருத்துவ உலகம்... இது உண்மைதானா? என்று வியந்தது. தனது இச்செயலை விளக்க அவர் அமெரிக்கா. ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு பயணம் செய்தார். அவரின் சொற்பொழிவைக் கேட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் முதலில் நம்ப மறுத்தாலும், அவரின் வழியை பின்பற்றியபோது அதிசயத்தக்க நிகழ்வுகள் ஏற்படுவதை கண்டு அவரை பாராட்டினர். 'நோய் தொற்று' பற்றாமல் பார்த்துக் கொண்டால் போதும் நோயாளிகள் நன்கு குணமாகி விடுவர் என்பதை புரிந்து கொண்ட மருத்துவ உலகத்தால்... பலர் விரைவில் குணம் பெற்றனர். 

லிஸ்டரின் சாதனையை பாராட்டி அவரை ராயல் சொசைட்டி உறுப்பினராக்கிக் கொண்டது. அங்கு அவர் 5 ஆண்டுகள் பணியாற்றினார். மேலும் இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் முதன்மை மருத்துவராக பதவி பெற்றார் எனில் அவரின் திறம்தான் என்னே? நோய் தொற்று கிருமி மருந்தாக கார்பாலிக் அமிலத்தை கண்டறிந்து பல உயிர்களை காத்ததால் அவரை 'ஆன்டி செப்டிக் அறுவை சிகிச்சையின் பிதாமகன்' என்று மருத்துவ உலகம் போற்றுகிறது.

மறைவு :

தனது கண்டுபிடிப்பிற்கு காரணம் தான் அல்ல. லூயி பாஸ்டரே என்று அடக்கமாக வாழ்ந்து, மக்கள் சேவையே மகத்தான சேவை என உழைத்த அந்த மகான் தனது 85 - ம் வயதில் 1912 - ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு பறந்தார். எளிய கண்டுபிடிப்பால் பல உயிர்களைக் காத்த ஜோசப் லிஸ்டரை என்றென்றும் நினைத்து வாழ்வோமாக!

Previous Post Next Post