டீப்தீரியா நோயின் தோற்றம்:

இன்று மருத்துவம் எவ்வளவோ முன்னேறி விட்டது. காலரா, டைப்பாய்ட், வைரஸ், பாக்டீரியாக்கள் என்று பல நோய்களையும், நோய்களை உண்டாக்குபவைகளை அழிக்கும் மருந்துகளை கண்டுபிடித்து 'சாதனை'களை படைத்துவிட்டோம். பெரியவர்களுக்கு நோய் வந்தால் எப்படியோ தாங்கிக் கொள்வார்கள். 

குழந்தைகளுக்கு வந்தால்... குடும்பமே ஆட்டம் கண்டுவிடும். குழந்தைகளை மிகவும் பாதிக்கும் இரு நோய்கள் டீப்தீரியா என்ற தொண்டை அடைப்பான், கக்குவான் என்ற டெட்டனஸ். இவைகள் இரண்டும் அவர்களை ஆட்டிப் படைத்துவிடும். இன்று இவைகளுக்கு உடனடி மருந்துகள் உண்டு. ஆம் பிறந்த குழந்தைகளும் தடுப்பு மருந்து என்ற பெயரில் ஆரம்பத்திலேயே போட்டு, அந்த நோய்களிலிருந்து குழந்தைகளை காப்பாற்றி விடுகிறார்கள். 

சுமார் 150 வருடங்களுக்கு முன்பு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மருந்தே கண்டுபிடிக்காத அக்காலத்தில் இந்த நோய்கள் வந்தால் குழந்தைகள் 'மரணத்தை' மட்டுமே சுவாசிக்கும். இன்று தடுப்பு மருந்துகளால்.. உயிர் வாழ்கின்றனர் குழந்தைகள். குழந்தைகளின் தேவன் இந்த நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை கண்ட மருத்துவ மாமேதையின் பெயர் எமில் அடால்ஃப் வான்பெரிங் என்ற ஜெர்மானியர்.

எமில் அடால்ஃப் வான் பெஹ்ரிங் இளமைப் பருவம்:

இன்று மருத்துவம் எவ்வளவோ முன்னேறி விட்டது. காலரா, டைப்பாய்ட், வைரஸ், பாக்டீரியாக்கள் என்று பல நோய்களையும், நோய்களை உண்டாக்குபவைகளை அழிக்கும் மருந்துகளை கண்டுபிடித்து 'சாதனை'களை படைத்துவிட்டோம். பெரியவர்களுக்கு நோய் வந்தால் எப்படியோ தாங்கிக் கொள்வார்கள். குழந்தைகளுக்கு வந்தால்... குடும்பமே ஆட்டம் கண்டுவிடும். குழந்தைகளை மிகவும் பாதிக்கும் இரு நோய்கள் டீப்தீரியா என்ற தொண்டை அடைப்பான், கக்குவான் என்ற டெட்டனஸ். இவைகள் இரண்டும் அவர்களை ஆட்டிப் படைத்துவிடும். இன்று இவைகளுக்கு உடனடி மருந்துகள் உண்டு. ஆம் பிறந்த குழந்தைகளும் தடுப்பு மருந்து என்ற பெயரில் ஆரம்பத்திலேயே போட்டு, அந்த நோய்களிலிருந்து குழந்தைகளை காப்பாற்றி விடுகிறார்கள்.

இவர் 1854 - ஆம் ஆண்டு, மார்ச் 15 - ம் தேதி ஜெர்மனியின் ஹன்ஸ்டார்ப்பில் பிறந்தார். ஆகஸ்ட் ஜார்ஜ்பெரிங் ஆகஸ்டைன் சட்ச்பெரிங் தம்பதிகளின் 13 பிள்ளைகளில் மூத்தவர். ஜார்ஜ்பெரிங் ஸ்கூல் மாஸ்டர். உள்ளூரில் பள்ளிப் படிப்பை முடித்தார். சிறுவயதிலேயே அவருக்கு மருத்துவம் படிக்க ஆர்வம். பெர்லினில் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்தார். 1874 - ல் சேர்ந்த அவர் 1878 - ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தார். அவர் போலந்து நாட்டின் ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு நோயாளிகள்... அடிக்கடி நோயால் தாக்கப்படுவதைக் கண்டார். 

இவ்வாறு தாக்கப்படுவது கிருமிகளால் என்பதை அறிந்து அதனை தடுக்க ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் அவர் ஜெர்மனிக்கு திரும்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இங்கு சுகாதார ஆய்வு மையத்தில் ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார் . இவருக்கு தலைவராக இருந்தவர் உலகப் புகழ்பெற்ற மருத்துவர் ராபர்ட் கோச். இவரிடம் உதவியாளராக சேர்ந்தது அவரின் அதிர்ஷ்டம். ராபர்ட் கோச் வைரஸ்கள் பற்றியும், பாக்டீரியாக்கள் பற்றியும், நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றியும் ஆராய்ந்த மேதை ஆவார். மருத்துவ ஆய்வில் இரண்டு, மூன்று முக்கிய ஆய்வை மேற்கொண்டார்.  குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றி ஆராய்ந்தார்.

எமில் அடால்ஃப் வான் பெஹ்ரிங் டிப்தீரியா ஆன்டிடாக்சின் கண்டுபிடிப்பு:

1890 - ஆம் ஆண்டு டிப்திரியா என்ற நோயைக் கண்டுபிடித்தார். இந்த நோயால் குழந்தைகள் படும் அவதியைக் கண்டு அதற்கு எதிர்வினை புரியும் மருந்தை கண்டுபிடித்து மருத்துவ உலகிற்கு மகத்தான சேவையை செய்தார். அடுத்து இவர் சில மனிதர்களுக்குள் புகும் கிருமிகளை எதிர்த்து வெல்லும் சக்தியை எவ்வாறு பெறுகிறார்கள்? என்பதை பற்றியும் ஆய்வு செய்தார். பலர் கிருமிகளால் பாதிக்கப்படுகிறார்கள்; அவர்களுக்கு செயற்கையாக எதிர்ப்பு சக்தியை உருவாக்க முனைந்தார். எப்படி எனில் பாதிக்கப்பட்டவரின் உடலில் செயற்கை எதிர்ப்பு சக்தியை உட்செலுத்தினால் உடலிலுள்ள கிருமிகளை வலுவிழக்கச் செய்து விடலாம் என்பதே அவர் எண்ணம்.

இதற்கு அவர் செய்த மருத்துவத்திற்கான பெயர் 'சீரம் தெரபி' என்பதாகும். ஒரு நோயாளரின் உடலில் இருக்கும் நோய்க்கிருமிகளை ஆராய்ச்சிக்குரிய சிறு விலங்குகளுக்கு கொடுத்து (நோயாளரின் நோயுக்குரிய விலங்கு) எதிர்ப்பு சக்தி வளர்த்து, அந்த விலங்கின் ரத்தத்திலிருந்து சீரம் என்ற பொருளை எடுத்து அதை நோயாளருக்கு கொடுக்க அவர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்... இவ்வாறான சிகிச்சைக்குத்தான் சீரம் தெரபி என்று பெயர்.

இத்தெரபியை பலருக்கு செய்து பல நோய்களை குணப்படுத்தி உள்ளார். ஆனால் இதை எல்லோருக்கும் செய்வது என்பது இயலாதது என்பதை உணர்ந்த பெரிங்,  நோய் எதிர்ப்பு சக்தியை தரும் தடுப்பு மருந்துகளை உருவாக்கும் பணியில் இறங்கினார். டிப்தீரியா (தொண்டை அடைப்பான்) க்கு மருந்தைக் கண்ட அவர் கடும் இருமலால் கக்குவான் இருமலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார்.

எமில் அடால்ஃப் வான் பெஹ்ரிங் சாதனை விருது:

கோடிக்கணக்கான குழந்தைகளை டிப்தீரியா, டெட்டனஸ் நோய்களிலிருந்து காப்பாற்ற அற்புதமான தடுப்பு மருந்தை கண்டுபிடித்த அவருக்கு 1901 - ல் நோபல் பரிசு வழங்கி கௌரவித்தது. தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்த இவருக்கு பல நாடுகள் பட்டங்களையும், விருதுகளையும் கொடுத்துப் பாராட்டின. 

எமில் அடால்ஃப் வான் பெஹ்ரிங் மறைவு :

நோய் எதிர்ப்பு சக்திக்காக இரவும், பகலும் உழைத்த மருத்துவ மாமேதையை 1917 - ஆம் ஆண்டு, மார்ச் 31 - ம் தேதி காலன் அழைத்துச் சென்றான். பிறந்து வளரும் குழந்தைகளை நோயிலிருந்து காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்த அவரை என்றென்றும் வணங்குவோம்.

Previous Post Next Post