வானியல் அறிமுகம்:

நமது ஜோதிடர்கள் ஒன்பது கோள்களை வைத்து 'நமது வாழ்க்கை ஜாதகத்தை' கணிக்கிறார்கள். அந்த கோள்களின் பெயர்களை மட்டுமே அவர்கள் காலம் காலமாய் தெரிந்து வைத்து ஜாதகம் கணிக்கிறார்கள். 

ஆனால் கார்ல் சேகன் என்ற விஞ்ஞானிதான் கோள்கள் கிரகங்கள் இவைகளின் மேற்புறம் -உள்புறம் கோள்களுக்குள் உருவாகும் காலமாறுதல்கள், வெப்பமாறுதல்கள், அங்கே நிகழும் செயல்கள் இவைகளினால் பூமியில் ஏற்படும் மாறுதல்களை கண்டுபிடித்து 'இயற்பியலுக்கு' மாபெரும் புரட்சியை உருவாக்கினார் எனலாம். 

இன்று செவ்வாய் சென்று மனித இனம் வாழலாம் என்று 'விண்வெளி விஞ்ஞானம்' கூறி பலபேர் செவ்வாய் செல்ல 'பணமும் கட்டி'யிருக்கிறார்கள் (சென்றவர்கள் திரும்பி வரமாட்டார்கள். அது வேறு கதை)

இளமைப் பருவம்:

Biography of Carl Edward Sagan - கிரகங்கள் என்கிற கோள்களை ஆராய்ந்த மேதை கார்ல் சேகன் (1934-1996)

வேற்று கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? என்ற கேள்வியை முதன் முதலில் சிந்தித்த விஞ்ஞான மேதை. விண்வெளியில் மாபெரும் சாதனை படைத்த இவர் ஒரு யூத மரபினர். இவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் 1934 - ம் ஆண்டு, நவம்பர் 9 - ம் நாள் பிறந்தார். தந்தையின் பெயர் சாமுவேல் சாகன் தாய் ரேச்சல் மோலி கிருபர். 

தந்தையும், தாயும் கல்வியின் மீதும் குறிப்பாக அறிவியல் மீதும் நாட்டம் கொண்டவர்கள். சேகனுக்கு சிறுவயதிலிருந்தே வானத்தில் நடக்கும் வர்ணஜாலங்களில் பெரும் விருப்பம் ஏற்பட்டது. சூரியன் ... நிலவு ... விண்மீன்களை பற்றியே அவர் எண்ணம் சுழன்று கொண்டிருக்கும். 

விண்ணில் ஏறி ஆராய்ச்சி செய்து, வானில் எண்னென்ன இருக்கிறது என்பதை ஆராய வேண்டும் என்று விரும்பினார் அச்சிறுவயதில். மகனின் சிந்திக்கும் ஆற்றலைக் கண்ட அவரின் தாய், அவரை ஐந்து வயதிலேயே நூலக உறுப்பினராக சேர்த்து விட்டார். அங்கு 'விண்வெளி' சம்பந்தமான நூல்களையே எடுத்துப் படிப்பார். 

மகனை நியூஜெர்சி பள்ளியில் சேர்த்து விட்டனர். அவர் அறிவியல் ஆசிரியரிடம் 'விண் பற்றி' கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை 'திக்கு முக்காட வைப்பார். மாணவனின் கேள்விகளுக்கு விளக்கமாக பொறுப்புணர்வுடன் பதில் சொல்வார் ஆசிரியர். தந்தையிடம் விண்ணியல் மற்றும் இயற்கையின் விநோத நிகழ்வுகளை பற்றிக் கேட்பார் சேகன்.

தந்தையும் மகனுக்கு முடிந்த அளவு பதில் சொல்வார் மேலும் அறிவியல் சம்பந்தமான விழாக்கள் ... கருத்தரங்குகள் .. சொற்பொழிவுகள் .... கோளரங்குகள் ... அறிவியல் மேதைகளின் நினைவு இல்லங்கள் என மகனுக்கு அறிவியலையே ஊட்டினார். விண்ணியல் என்ற வானியல் மீது அசாத்தியமான ஆர்வம் கொண்ட அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டம் பெற்றார். 

'அண்டகோளங்களின் இயற்பியல் ஆராய்ச்சி' என்ற தலைப்பில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். இன்றும் இந்த ஆய்வு பல்கலைக்கழகங்களில் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அவரின் வானியல் திறனை அறிந்த ஹார்வேர்டு பல்கலைக்கழகம், அவருக்கு அறிவியல் விரிவுரையாளர் பணியை விரும்பி அளித்தது. 

மாணவர்களுக்கு பாடம் நடத்துவது மட்டுமின்றி .. ஓய்வு நேரங்களில் 'வானியல்' பற்றி ... குறிப்பாக 'கோள்கள் (எ) கிரகங்கள் பற்றி ஆய்வு செய்தபடி இருந்தார். சந்திரனைப் பற்றி ஆய்வு செய்து அங்கு மலைகள் .... மணற்குன்றுகள் ... காற்று இருக்க வாய்ப்புண்டு. மனிதர்கள் செல்லலாம் என்பதை முதன்முதலில் அறிவியல் பூர்வமாக விளக்க ... உலக நாடுகள் அவரைப் பாராட்டின. 

சோவியத் ரஷ்யா ... உடனே நிலவுக்கு மனிதர்களை அனுப்ப ஆய்வு மேற்கொண்டது; ஆனால் வெற்றி பெற்றது அமெரிக்கா. 1969 - ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. நீல் ஆம்ஸ்ட்ராங் என்ற அமெரிக்க விண்வெளி வீரர் மாபெரும் உலக சாதனையாக நிலவில் தன் காலடியை பதித்தார். இதற்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தவர் சேகன் என்ற விஞ்ஞான மேதை.

கிரகங்களைப் பற்றிய ஆராய்ச்சி :

மேலும் அவர் கிரகங்களைப் பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டார் . ஒவ்வொரு கிரகத்தினும் என்னென்ன இருக்கிறது? அங்கு விண்கலங்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள முடியுமா? அங்கு ஈரப்பதம், வெயில், மழை, காற்று, வெப்பச்சூழல் என்று பல பக்கங்களில் சிந்தித்தார். 

செவ்வாய் கிரகத்தில் மலைப்பாங்கான பகுதிகள் .... தரைப்பகுதி, லேசான காற்று ... கடும் புயல் போன்றவைகளை கண்ட அவர் செவ்வாய் ஆராய்ச்சியை தீவிரமாக்கினார். மேலும் செவ்வாயில் காற்றில் பரவும் தூசுகளால் ... மேடு. பள்ளங்கள் சமதரைகள் ஏற்படுவதும், அங்கு வெப்ப சலனங்கள் உண்டாவதும் ... இயற்கையின் அதிசயங்களாக கண்டறிந்து கூறினார். 

இவர் கிரக ஆராய்ச்சியின் பயனாக அயல்நாடுகளும், அவ்வாராய்ச்சியில் தீவிரமாயின. இவர் கிரக ஆராய்ச்சிகள் பற்றி பல நூறு ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினார். 'காஸ்மாஸ்' என்ற இவரின் நூல் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞான நூல். இது தொலைக்காட்சித் தொடராக வந்து உலக மக்களை ஈர்த்தது. செவ்வாய் ஆய்வின் பயனாக மாரினர் -9 என்ற விண்கலம் செவ்வாயை ஆராய அனுப்பப்பட்டது.

சாதனை விருது:

மேலும் வியாழன் , நெப்டியூன், யுரேனஸ் போன்ற கிரகங்களை ஆராய வாயேஜர் -1, 2 விண்கலங்களை நாசா அனுப்பியபோது அதற்கு உறுதுணையாக இருந்தார். இவர் டிராகன்ஸ் ஆப் ஈடன், புரோகாஸ், காண்டாக்ட், என்ற விண்வெளி ஆய்வு பற்றி நூல்களை எழுதினார். 

இவரின் விஞ்ஞான ஆய்வைப் பாராட்டி அமெரிக்கா உட்பட பல நாடுகள் டாக்டர் பட்டங்களையும், விருதுகளையும் அள்ளி வழங்கியது. சிறந்த நூலுக்காக புலிட்சர் விருது (1978), மனிதாபிமான விருது (1981), பொதுநல விருது (1994), சிறந்த நூலுக்காக புலிட்சர் அல்லாமல் அசிமோவ் விருது (1994) மற்றும் ஹூகோ எம்மி, லோக்காஸ் போன்ற விருதுகளைப் பெற்று புகழ் அடைந்தார். மூன்று முறை திருமணம் செய்து வாழ்ந்த அவர் ... 

மறைவு :

கோள்களின் மாறுபாடுகளை உலகம் அறியவே அல்லும் பகலும் பாடுபட்ட அவர் ... 1996 - ஆம் ஆண்டு, டிசம்பர் 20 - ம் நாள் தன் பணிகளை முடித்துக் கொண்டு விண்ணுலக ஆய்விற்கு பயணமானார். விண்ணில் உள்ள கோள்களில் அறிவாற்றல் உள்ள உயிர்களை ஆய்வு செய்யும் 'சேட்டி' ( SETI Search For Extra Terrestrial Intelligence ) யை நிறுவி புதிய விண்ணுலக ஆய்வுக்கு வழி அமைத்தார் சேகன். 

கிரகங்களின் ஆய்வுக்காக தன்னை அர்ப்பணித்த 'சேகனின்' உழைப்பை பாராட்டி ஒரு விண் கல்லுக்கு அவரின் பெயரை சூட்டி பெருமை தேடிக் கொண்டிருக்கிறது விஞ்ஞான உலகம் நமது மாணவர்களும் அவரின் விண்ணியல் - கிரக ஆய்வை தொடர்ந்து செய்து மாபெரும் கண்டுபிடிப்புக்களை வெளிஉலகிற்கு வெளிப்படுத்துவதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகக் கொள்ளலாம்.

Previous Post Next Post