பேஸ்மேக்கர் அறிமுகம்:

இன்று உலகம் முழுக்க சுமார் 4 கோடி மக்கள் பல்வேறு இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ... அவைகளில் அதிக இதயத் துடிப்பும் ஒன்று. அதிக இதய துடிப்புகளால் 'பம்பிங்' அதிகமாகி மாரடைப்பில் முடித்து விடும்  காரணம் நிமிடத்திற்கு 72 முறை துடிப்பதே சரியானதாகும். 

அதிகமாய் நடந்தாலோ ... ஓடினாலோ ... 5 அல்லது 10 கூடலாம் ... அது சில நிமிடங்களில் சரியாகி விடும். சிலருக்கு ஏதாவது ஒருவகை அதிர்ச்சியினாலோ, அதீத பயத்தினாலோ இதயத் துடிப்பு அதிகமாகலாம்.. இது சில நிமிடங்களில் சரியாகி விடும் . இதய நோயாளிகளுக்கு மாதங்களில் சில நாட்கள் துடிக்கும். இதை இ.சி.ஜி பார்த்து தெரிந்து கொண்டு மருத்துவம் பார்த்து சரியாக்கி விடலாம்.

மாத்திரை, மருந்துகள் கொடுத்தும் இதயத் துடிப்பு சரியான அளவில் இல்லாத பட்சத்தில் பேஸ்மேக்கர் பொருத்தப்படுகிறது. பேஸ்மேக்கர் என்ற கருவி இது பழுதுபட்ட இதயத்தை சரியான அளவில் துடிக்க வைக்க உதவும் அற்புத கருவியாகும். 

இளமைப் பருவம்:

இன்று வருடத்திற்கு ஏழு லட்சம் 'பேஸ்பேக்கர்' கருவி இதயத்தை சரியான முறையில் துடிக்க வைக்க நோயாளிக்கு பொருத்தப்படுகிறது என்றால் அதன் தேவையையும், பயனையும் அறியலாம். மனித உயிர் காக்கும் இக்கருவியைக் கண்ட மேதையின் பெயர் வில்சன் கிரேட்பேட்ச். இவர் அமெரிக்காவிலுள்ள முக்கிய நகரமான நியூயார்க்கிலுள்ள பஃபல்லோ என்ற இடத்தில் பிறந்தார். பிறந்த ஆண்டு 1919 - ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 6 - ம் தேதி. 

தந்தையின் பெயர் வாரன் சார்லாட்  பள்ளிப் பருவம் வந்ததும் அவரை பப்ளிக் கிராஜுவேட்டு ஸ்கூலில் (வெஸ்ட் செனெகா) சேர்த்தனர். அங்கு நல்லபடியாக சேர்ந்தார். படித்துத் தேறிய அவர் 1939 - ஆம் ஆண்டு ராணுவத்தில் ராணுவ சேவை முடிந்ததும் கார்னல் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் சேர்ந்து படித்தார். அப்போது அவர் சில இருதய நோயாளிகளைக் கண்டு மனவேதனை அடைந்தார். 

இன்று வருடத்திற்கு ஏழு லட்சம் 'பேஸ்பேக்கர்' கருவி இதயத்தை சரியான முறையில் துடிக்க வைக்க நோயாளிக்கு பொருத்தப்படுகிறது என்றால் அதன் தேவையையும், பயனையும் அறியலாம். மனித உயிர் காக்கும் இக்கருவியைக் கண்ட மேதையின் பெயர் வில்சன் கிரேட்பேட்ச். இவர் அமெரிக்காவிலுள்ள முக்கிய நகரமான நியூயார்க்கிலுள்ள பஃபல்லோ என்ற இடத்தில் பிறந்தார். பிறந்த ஆண்டு 1919 - ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 6 - ம் தேதி.

இருதய நோய்கள் எப்படி ஏற்படுகிறது? இருதயத்திலுள்ள தமணிகளில் அடைப்புகள் எவ்வாறு உருவாகிறது? அதனால் நோயாளிகள் எந்தெந்த விதத்தில் பாதிக்கப்படுகிறார்கள்? என்பதையெல்லாம் பல நூல்களை படித்தும், மருத்துவர்களை நேரடியாக சந்தித்தும் இருதய நோய்களைப் பற்றி அறிந்தார்.

அவர் காலத்தில் இருதய தமணிகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை போக்க பெரிய கருவியைக் கொண்டு ஷாக் கொடுப்பார்கள். அதனால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். மேலும் ... இதயமும், அதன் துடிப்புகளையும் சரியாக இயங்க 'பேஸ்மேக்கர்' போன்ற கருவி 'பூட்டு போல' வெளியே தொங்கிக் கொண்டிருக்கும். 

இந்த நிலை மிகவும் துயரமானது. இந்த நிலையை மாற்ற முடிவு செய்த பேட்ச்... இதயத்தின் அருகிலேயே வைத்து வெளியே தெரியாத அளவிற்கு சிறிய அளவிலான கருவியை கண்டுபிடித்தார். அவர் முதலில் இதய துடிப்பைப் பதிவு செய்யும்படியான கருவியை தயாரித்தபோது, அதற்கு டிரான்சிஸ்டரை உபயோகப்படுத்தினார்.

பேஸ்மேக்கர் கண்டுபிடிப்பு:

டிரான்சிஸ்டரை பொருத்திய கருவியானது , இதயத் துடிப்பை போன்ற ஒலியை எழுப்பியது . இதில் ஏதோ மாறுபாடு தோன்றுவதாக இருந்தாலும் பின்பு அதுவே அவருக்கு சரியாக இதயத்தை துடிக்கச் செய்வதை உணர்ந்தார். 40 கிராம் எடை கொண்ட பேஸ்மேக்கரை உருவாக்கி நோயாளிகளுக்கு வைத்து (உள்புறம்தான்) பரிசோதனை செய்து வெற்றி கண்டார் பேட்ச். 

தோலுக்கு அடியில் வைக்கும் பேஸ்மேக்கர் - துருப்பிடிக்காத லித்தியம் அயோடினாலானது. ஆம் பேஸ்மேக்கர் பேட்டரி ... அதன் மூலம் செய்யப்பட்டதால் ... நீண்ட காலம் ஒழுங்காக வேலை செய்கிறது. அவர் காலத்தில் சில ஆண்டுகள் பணி புரிந்து இதயத்தைக் காத்தது. இன்று பல ஆண்டுகள் பாதுகாக்கும் காவலனாக பணியாற்றுகிறது.

வில்சன் கிரேட்பேட்ச் மறைவு :

பேஸ்மேக்கரானது மார்பில் இதயம் இருக்கின்ற பகுதியின் பொருத்தப்படுகிறது. மேற்புரத்தில் அறுவை சிகிச்சை செய்து, தசைப் பகுதிக்குள் இந்த பேஸ்மேக்கரிலுள்ள மிகமிக மெலிந்த கம்பி ... இதயத்தோடு இணைக்கப்பட்டு விடுவதால்... மின்கலத்திலிருந்து வரும் மின் அதிர்வானது இதயத்தை சீராக பணியாற்றச் செய்கிறது. 

இயங்காத இதயத்தை சீராக இயங்க வைக்கும், இயல்பாக துடிக்காத இதயத்தை ஒழுங்காக துடிக்க வைக்கும் மிகமிக அதி அற்புதமான பேஸ்மேக்கர் கருவியை உருவாக்கி, கோடிக்கணக்கான இதய நோயாளிகளை வாழவைத்துக் கொண்டிருப்பதற்கு மூலகாரணமான மேதை பேட்ச் அவர்கள் 2011 - ஆம் ஆண்டு, செப்டம்பர் 27 - ம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். அந்த இதய தெய்வத்தை என்றென்றும் நினைப்போம்.

Previous Post Next Post