விண்வெளி ஆராய்ச்சியின் அறிமுகம்:

இன்று விஞ்ஞான கண்டுபிடிப்புகளை உலகம் ஆராய்ந்து, சரியென  பட்டால் வரவேற்பதும், அது ஏற்கப்படாவிட்டால் விமரிசிப்பதும் நடைமுறை இன்று விஞ்ஞானத்தில் மதவாதம் கலக்கப்படுவதில்லை.  ஆனால் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் 'மதவாதத்தை' விஞ்ஞானத்தால் வெல்ல முடியாததாக இருந்தது. 'உலகம்' உருண்டையானது. 'பூமி' ஒரு கிரகம். இறைவனால் பூமியின் வெளிச்சத்திற்காக இறை தூதர்களால் எரிக்கப்படவில்லை. அதுவும் ஒரு கோள். என்று விஞ்ஞானிகள் ஆய்ந்து சொன்னபோது அவர்கள் மதவாதிகளால் சிறைபடுத்தப்பட்டார்கள். சிலர் கொல்லப்பட்டார்கள்.

பூமியானது தன்னைத்தானே சுற்றியபடியே சூரியனையும் சுற்றி வருகிறது' என்று ஆதாரத்தோடு விளக்கினார் கலிலியோ. மதவாதிகள் இந்த அறிவியல் கூற்றுக்கு கொதித்தெழுந்தனர். பூமி எங்கே? சூரியன் எங்கே? ஒன்றுக்கொன்று தொடமுடியாத தூரத்தில் இருக்கிறது. அப்படி இருக்கையில் பூமி எப்படி சூரியனைப் போய் சுற்றும் என்று அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர். இதற்கு மேல் விஞ்ஞானம் என்ற பேரில் ... கண்டதை கூறினால் சிறையில் தள்ளப்படுவாய் என்று அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர் மதவாதிகள்.

கலீலியோ கலிலி இளமைப் பருவம்:

கலிலியோ கலிலீ 1564 - ஆம் ஆண்டு, பிப்ரவரி 15 - ம் தேதி இத்தாலியிலுள்ள பைசா நகரில் பிறந்தார். இவரின் தந்தை வின்சென்சோ கலிலீ - தாய் குயுலியா அம்மன்னடி இத்தம்பதிகளுக்கு முதல் மகன். அவர் காலத்தில் கல்வி பெரும்பாலும் 'இல்லத்திலேயே' கற்பிக்கப்பட்டது. கலிலீ சில வேறுபட்ட இடங்களில் கல்வி கற்றார்.

'அறிவியல்' உண்மைகளைக் கூறியதால்... மதவாதிகளால் படாதபாடுபட்ட விண்ணியல் அதிசயங்களை - தான் உருவாக்கிய தொலைநோக்கியால் கண்டு உலகிற்குக் கூறிய மாமேதையான கலிலியோ கலிலீ 1564 - ஆம் ஆண்டு, பிப்ரவரி 15 - ம் தேதி இத்தாலியிலுள்ள பைசா நகரில் பிறந்தார். இவரின் தந்தை வின்சென்சோ கலிலீ - தாய் குயுலியா அம்மன்னடி இத்தம்பதிகளுக்கு முதல் மகன். 

அவர் காலத்தில் கல்வி பெரும்பாலும் 'இல்லத்திலேயே' கற்பிக்கப்பட்டது. கலிலீ சில வேறுபட்ட இடங்களில் கல்வி கற்றார். அவருக்கு 'விண்ணியல்' மேல் ஆர்வம் ஏற்பட்டது. அவரின் பெற்றோர் மகனை பைசா மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். அவருக்கு இக்கல்வியைவிட பௌதீகத்தில்தான் நாட்டம் ஏற்பட்டது. எந்த நேரமும் ஆராய்ச்சி நோக்கமே அவருள் வியாபித்திருந்தது. ஒருநாள் அவர் மாதா கோயில் வழியாக சென்று கொண்டிருந்தவர், அதனுள் நுழைந்தார்.

கலீலியோ கலிலி கண்டுபிடிப்பு:

அக்கோயிலில் தொங்கும் விளக்கைக் கண்டார். அது காற்றில் அசைவதையும் கண்டார். அது வேகமாக அசையும் போதும், மெல்ல அசையும் போதும்... அவ்விளக்கு அசையும் நேரம் ஒன்றாகவே இருப்பதைக் கண்டார். மேலும் அது ஒரு புறத்திலிருந்து மறுபுறம் அசையும்போது... அதன் வேகம் ஒரே அளவில் இருப்பதைக் கண்டார். பின்னர் விளக்கின் அசைவையும், நாடித் துடிப்பையும் கணக்கிட்டு அதன் துடிப்பை அளக்கவும் ஒரு கருவியையும் உருவாக்கினார். பௌதீகத்தில் ஆர்வம் காட்டிய அவர் தெர்மோஸ்கோப்பை (வெப்பமானியின் முன்னோடி என கருதப்படுகிறது) கண்டுபிடித்தார். 

பிறகு அவர் கணிதத்திலும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார். 1586 - ஆம் ஆண்டு நீர் நிலை தராசை உருவாக்கி, அதைப் பற்றிய நூல் எழுதினார். கி.மு. 3 - ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற சிந்தனையாளர் அரிஸ்டாட்டில். இவர் மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியர்.

இவரும் பல விஞ்ஞானக் கருத்துக்களை கூறியிருக்கிறார் இக்கூற்றுகளை அவரின் 'வழி வந்தவர்கள்' உண்மை என்றே ஏற்று... கூறி வந்தனர். அவர் கூறிய ஒன்று... உயரமான இடத்திலிருந்து... இரு மாறுபட்ட எடைகொண்ட பொருட்கள் விழுந்தால்... அதன் விழும் வேகத்தில் மாறுபாடு இருக்கும் என்பதே அது. இக்கூற்றை யாரும் சுமார் 600 ஆண்டுகள் மறுத்துக் கூறவில்லை, ஆனால் சிந்தனைக் களஞ்சியமான கலிலியோ, அரிஸ்டாட்டிலின் கூற்றை மறுத்தார்.

இதைக் கேட்ட விஞ்ஞானிகள் அவரை திட்டித் தீர்த்தனர். நீ என்ன அரிஸ்டாட்டிலை விட பெரிய விஞ்ஞான மேதையா? என்று கேள்வி எழுப்பினர். அரிஸ்டாட்டிலின் கூற்று தவறானது என்பதை நிரூபிக்க அறிவியல் அறிஞர்களையும், பொது மக்களையும் ஒரு உயரமான இடத்திற்கு அழைத்துச் சென்றார். 450 கிராம் கொண்ட ஒரு குண்டையும், 4500 கிராம் கொண்ட ஒரு குண்டையும்... எடுத்துக் கொண்டு உயரத்திற்கு சென்று ஒரே நேரத்தில் போட, இரண்டும் ஒரே வேகத்தில் கீழே விழுந்தது. இதைக் கொண்டு அரிஸ்டாட்டில் கூற்று தவறானது என்பதை மெய்ப்பித்தார்.

அவருக்கு ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி கிடைத்தது. அங்கு பிரச்சினை ஏற்பட, பைசா நகருக்கு சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 1590 - ல் ஆன்மோஷன் என்ற நூலை எழுதினார் . 1592 - ல் அவர் பருவா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணிக்குச் சேர்ந்தார். கணிதப் பேராசிரியராக பணியாற்றினாலும் அவர் பௌதீக ஆராய்வை தொடர்ந்து செய்து வந்தார். அவரின் ஆய்வில் 1604 - ல் 3X உருப் பெருக்கல் கொண்ட ஒரு தொலைநோக்கியை உருவாக்கினார். அதன் மூலம் 'கிரகங்களை' ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் 3X உருப்பெருக்கல் கொண்ட ஒரு தொலைநோக்கி (டெலஸ்கோப்) யை தயாரித்து அதன் மூலம் சூரியனை ஆராய்ந்தார். இதன் மூலம் சூரியனில் கரும்புள்ளிகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. எத்தனையோ மைல் தூரத்தில்  எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் 'கரும்புள்ளிகள்' எப்படி தெரியும்? என்று கேட்டனர்.

அவர் எதிர்ப்பாளர்களின் வசைமொழிகளைக் கண்டு கொள்ளாமல் மேலும் மேலும் கோள்களை ஆராய்ந்து கொண்டே இருந்தார். 1612 - ஆம் ஆண்டு 'நெப்டியூன்' கோளை ஆராய்ந்தார். அங்கு 'கானல்' ஓடுவதைக் கண்டார். மேலும் அது மங்கலாகவும் தெரிந்ததை அறிந்தார். இந்த காலக்கட்டத்தில் தான் சூரியனைப் பற்றி சூரிய மையக் கொள்கையை வெளியிட்டார். பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் அது சுற்றி வருகின்றது என்ற அவரின் கூற்றை மதவாதிகள் எதிர்த்தனர். கோபர்நிகஸ் எனும் விஞ்ஞானியும் இதைத்தான் கூறினார். ஆனால் இக்கூற்றை மதவாதிகள் ஏற்காமல் அவரை சிறையில் தள்ளினர்.

கோபர்நிகஸ் சொன்னது உண்மை என்று கலிலியோ கூற... கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டி வந்தது. என்றாலும் தன் கொள்கையிலிருந்து அசராமல் நின்றார். இதன் பின்னர் தனது கோள்களின் ஆய்வுக் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். 1632 - ஆம் ஆண்டு அவர் இரு மகத்தான உலகங்களின் பேச்சு 'என்ற விண்ணியல் ஆய்வு நூலை வெளியிட்டார் கலிலியோ. அந்த நூலில் மதத்திற்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக அவர் கிருஸ்தவ திருச்சபை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவர் குற்றவாளி என்று தீர்ப்பு கூறப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.

கலீலியோ கலிலி மறைவு :

"தனது கருத்துக்கள் யாவும் பொய்யானவை" என்று எழுதிக் கொடுத்து 22 நாட்கள் சிறைக்குப் பின் விடுதலை செய்தனர் மதவாதிகள். கோள்களின் இயக்கங்கள் பற்றி தான் தயாரித்த தொலைநோக்கி மூலம் கண்டு பல அறிவியல் உண்மைகளை கண்டறிந்த மேதையான அவர் மதவாதிகளின் குற்றச்சாட்டால் மனநலம் பாதிக்கப்பட்டு 1642 - ஆம் ஆண்டு தனது 78 - ம் வயதில் மறைந்தார். எனினும் அவரின் அறிவியல் கூற்றுகள் என்றும் மறையாது என்பது உண்மை.

Previous Post Next Post