தமிழ்நாட்டின் பீடபூமிப்பகுதி

மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையில் பீடபூமிப்பகுதி அமைந்துள்ளது. இப்பீடபூமி நிலம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்து காணப்படுகிறது.

தமிழ்நாட்டில் சேர்வராயன் குன்றுகளுக்கு மேற்கில் காணப்படும் பாராமஹால் பீடபூமி மைசூர் பீடபூமியின் தொடர்ச்சியாகும். இது 350 முதல் 710 மீட்டர் வரை உயரமுடையது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையில் பீடபூமிப்பகுதி அமைந்துள்ளது. இப்பீடபூமி நிலம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ச

நீலகிரியிலிருந்து தருமபுரி வரையுள்ள பகுதி கோயம்புத்தூர் பீடபூமியாகும். இது பாறை வடிவில் அமைந்துள்ளது. இதில் சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும். இதன் உயரம் 150 - 450 மீ வரை காணப்படுகிறது.

2,600 ச.கி.மீ பரப்பு கொண்ட நீலகிரி பீடபூமி மோயாற்று நீரால் மைசூர் பீடபூமியிலிருந்து பிரிக்கப்படுகிறது. இது 1800 - 2900 மீட்டர் உயரமுடையது.

பொதுவாக தமிழ்நாட்டின் பீடபூமிகளின் சராசரி உயரம் கிழக்கில் சுமார் 120 மீட்டரிலிருந்து மேற்கில் சுமார் 300 முதல் 400 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் பீடபூமிகளை கோயம்புத்தூர் பீடபூமி, தர்மபுரி பீடபூமி, மதுரை பீடபூமி என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

பீடபூமி அமைந்துள்ள மாவட்டங்கள்

கோயம்புத்தூர் பீடபூமி: அமைவிடம்- நீலகிரியிலிருந்து தர்மபுரி வரையான பகுதி. பாயும் ஆறுகள் அமராவதி, பவானி, காவேரி, நொய்யல்.

தருமபுரி பீடபூமி: அமைவிடம் பாலாற்றுக்கும் காவேரிக்கும் இடைப்பட்ட பகுதி‌‌. பாயும் ஆறுகள் பாலாறு, தென்பெண்ணை.

மதுரை உயர் நிலம்: அமைவிடம் மதுரைக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதி, பாயும் ஆறுகள் வைகை, தாமிரபரணி.

Previous Post Next Post