தமிழ்நாட்டில் புதினம் உருவான வரலாறு

தமிழில் புதினம் எழுதும் முறை 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது. தமிழில் எழுதப்பட்ட முதல் புதினம் "பிரதாப முதலியார் சரித்திரம்" இது வேதநாயகம் பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது. இராஜம் அய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம், தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது புதினமாகும். 

தமிழில் புதினம் எழுதும் முறை 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது. தமிழில் எழுதப்பட்ட முதல் புதினம் "பிரதாப முதலியார் சரித்திரம்" இது வேதநாயகம் பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது.

மாதவ அய்யர் எழுதிய பத்மாவதி சரித்திரம், தமிழில் தோன்றிய மூன்றாவது புதினமாகும். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்று புதினங்கள் மிகவும் புகழ்பெற்றவை. அகிலன் எழுதிய சித்திரப்பாவை என்ற புதினத்திற்கு 1975-ஆம் ஆண்டு ஞானபீட விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நாடகம் உருவான வரலாறு

பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடகத்தின் தந்தை என்று அழைக்கடுகிறார். இவர் 1891-இல் சுகுண விலாச சபா என்ற நாடகக் குழுவைத் தோற்றுவித்தார். சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத்தின் தலைமை ஆசிரியர் என்று அழைக்கப்படுகிறார்.

பரிதிமாற்கலைஞரின் ரூபாவதி, அண்ணாவின் ஓர் இரவு, சுந்தரம் பிள்ளையின் மனோன் மணியம், கிருஷ்ணசாமி பாவலரின் பாம்பே மெயில் போன்றவை புகழ்பெற்ற நாடகங்களாகும்.

சங்கரதாஸ் சுவாமிகள் “காளிதாஸ்” நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்தார். இருபதாம் நூற்றாண்டில் நவாப் ராஜமாணிக்கம், கண்ணையா, கந்தசாமி, பி.யூ.சின்னப்பா, பி.என்.வேலு நாயர், டி.கே.எஸ்.சகோதரர்கள், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சகஸ்ரநாமம், சோ.கே.பாலசந்தர், ஆர்.எஸ்.மனோகர், ஹெரான் ராமசாமி, பூர்ணம் விசுவநாதன், வி.கோபாலகிருஷ்ணன், டி.என்.சிவதாணு, நடிகவேள் எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சேகர், சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர்., வி.எஸ்.ராகவன், ராது போன்றோர் பல நாடகக் குழுக்களை அமைத்து நாடகத்தை வளர்த்துள்ளனர்.

Previous Post Next Post