சர் பழமாநேரி சுந்தரம் சிவசாமி ஐயர் (Sir Pazhamaneri Sundaram Sivaswami Iyer)

(Sir P. S. Sivaswami Iyer, 7 பிப்ரவரி 1864 5 நவம்பர் 1946) பிரபலமான இந்திய வழக்கறிஞரும், நிருவாகியும், அரசியல்வாதியும் ஆவார். சென்னை மாகாணத் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியவர். 

(Sir P. S. Sivaswami Iyer, 7 பிப்ரவரி 1864 5 நவம்பர் 1946) பிரபலமான இந்திய வழக்கறிஞரும், நிருவாகியும், அரசியல்வாதியும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை :

சிவசுவாமி ஐயர் தஞ்சாவூர் மாவட்டம், பழமார்நேரி கிராமத்தில் சுந்தரம் ஐயர், சுப்புலட்சுமி ஆகியோருக்கு 1864 பிப்ரவரி 7 இல் பிறந்தவர். எஸ்.பி.ஜ்.பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் பானம்புசாவடி உயர்நிலைப் பள்ளியில் 1877 இல் மெட்ரிக்குலேசன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் பயின்று 1882இல் சமசுகிருதம், வரலாறு ஆகியன பயின்று முதல்வகுப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில்சட்டம் பயின்று 1885 இல் வழக்குரைஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.

வழக்கறிஞராக :

சிவசுவாமி ஐயர் வழக்குரைஞராக சிறப்பாகப் பணியாற்றினார். 1904 மே 12 இல் இவர் ஆளுநரின் நிறைவேற்றுப் பேரவையில் மேலதிக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை சட்டமன்றத்தில் 1904 முதல் 1907 அக்டோபர் 25 வரை சட்டமன்ற உறுப்பினரானார். சென்னை மாகாண தலைமை அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

சென்னை மாகாணத் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியவர்.

சிவசுவாமி ஐயர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேலவை உறுப்பினராக 1898 இல் நியமிக்கப்பட்டு 1916 முதல் 1918 வரை அதன் துணைவேந்தராகவும், 1918 முதல் 1919 வரை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணை- வேந்தராகவும் பணியாற்றினார்.

அரசியலில் :

1912 இல் அரசியலில் இறங்கினார். 1912 முதல் 1917 வரை சென்னை மாகாண ஆளுநரின் நிறைவேற்று சபையில் உறுப்பினராக இருந்தார்.

முதலாம் உலகப் போர்க் காலத்தில், பிரித்தானியாவுக்கு ஆதரவாக இந்தியத் தொண்டர் இயக்கத்துக்கு ஆதரவளித்தார். 1922 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக நாடுகள் சங்கத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் சிவசுவாமி பங்குபற்றினார்.

Previous Post Next Post