சுதந்திரத்திற்கு முன்பு இந்தி எதிர்ப்பு:

பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்தியாவில், ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கத்துடன் காங்கிரஸ் இயக்கம் இந்தி மொழியை அறிமுகப்படுத்தியது. 1918 மற்றும் 1922-ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் இந்தியைப் பரப்புவதற்காக 40 மையங்கள் தொடங்கப்பட்டன. அதற்கு நீதிக்கட்சியின் ஆதரவும் கிடைத்தது.

பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்தியாவில், ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கத்துடன் காங்கிரஸ் இயக்கம் இந்தி மொழியை அறிமுகப்படுத்தியது. 1918 மற்றும் 1922-ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் இந்தியைப் பரப்புவதற்காக 40 மையங்கள் தொடங்கப்பட்டன. அதற்கு நீதிக்கட்சியின் ஆதரவும் கிடைத்தது.

சென்னை மாகாண மக்களின் மேல் பிராமணர்களின் பண்பாட்டு ஆதிக்கமே, மீண்டும் இந்தி வடிவில் வருகிறது என்று பெரியார் கூறினார். இதனால் தமிழ் மக்களின் முன்னேற்றம் மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சியும் குன்றும் என்று கூறினார். 1930-இல் நன்னிலத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1936-இல் பொப்பிலி ராஜா தலைமையிலான நீதிக்கட்சி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியை இரண்டாவது மொழியாக பயிற்றுவிக்க ஆணை பிறப்பித்தது. முதல் முறையாக இந்தி எதிர்ப்பு போராட்டம் 1937-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இராஜாஜி தமிழக முதல்வராக பதவிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 1937 ஆகஸ்ட் 11 அன்று பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்பதை அறிவித்தார்.

இராஜாஜியின் இந்த அறிவிப்பை எதிர்த்து முதன் முதலாக மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், மற்றும் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார். சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ.டி.பன்னீர் செல்வம் மற்றும் ஈ.வெ.ரா பெரியார் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. 

இந்த எதிர்ப்புகளுக்கிடையே இந்தியை கட்டாய பாடமாக்கும் அரசாணையை இராஜாஜி 1938 ஏப்ரல் 21 அன்று வெளியிட்டார். இராஜாஜி மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது. 1938 டிசம்பர் 3 இந்தி எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது.

1939- இல் இந்தி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றதால் கைது செய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர் காவலில் இருக்கும்போதே இறந்தனர். பின்னர் இவர்கள் மொழிப்போர் தியாகிகள் என்று அழைக்கப்பட்டனர்.

இராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு 1939 ஆம் ஆண்டு பதவி விலகியது. அதைத் தொடர்ந்து சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு 1940 பிப்ரவரியில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கி அதை விருப்பப் பாடமாக்கினார்.

சுதந்திரத்திற்கு பிறகு இந்தி எதிர்ப்பு:

சுதந்திரத்திற்கு பிறகு ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தலைமையிலான அரசு சென்னை மாகாணத்தில் மீண்டும் இந்தியை கட்டாயப்பாடமாக்கியது. இதனால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் துவங்கியது.

1948 நவம்பர் 2 -இல் அண்ணாவைத் தளபதியாகக் கொண்டு திராவிடர் கழகம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கியது. 1950 மே 2-இல் அப்போதைய கல்வி அமைச்சர் மாதவராவ் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகப்பு வரை இரண்டாம் மொழியாக ஆங்கிலமும், மூன்றாம் மொழியாக இந்தியும் கட்டாய பாடம் என்ற உத்தரவை பிறப்பித்தார்.

1950-மே 10-ஆம் நாள் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு நாளாகக் கொண்டாடப்பட்டது. பின்னர் 1950, ஜூலை 18-இல் அரசு தனது கட்டாய இந்தி திணிப்பை அகற்றியது.

1952 முதல் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து மொழிப் போராட்டாத்தை துவக்கின. முதற்கட்டமாக பெயர் பலகைகளிலுள்ள இந்தி எழுத்துக்களை தார்பூசி அழிக்கும் போராட்டம் ஆரம்பமானது.

1963-ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று இந்திய ஆட்சி மொழிச் சட்டத்தை அப்போதைய உள்துறையமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி தாக்கல் செய்தார். இச்சட்டத்தின் படி 1965 ஜனவரி 26-ஆம் நாள் முதல் இந்தியாவில் இந்தி ஆட்சி மொழியாகும். இந்தி மொழிக்கு துணை மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இச்சட்டம் இந்தி பேசாத மக்களுக்கு இழைத்த அநீதி என்று கருதி இதை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. 1967 மார்ச் 6 - இல் அண்ணாதுரை தமிழக முதல்வரானார். 1968 ஜனவரி 23-இல் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளே தமிழகத்தின் ஆட்சி மொழியாக இருக்கும் என்று இருமொழி கொள்கை திட்டத்தை அறிமுகம் செய்தவுடன் நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் முடிவடைந்தது.

Previous Post Next Post