சென்னை சுதேசி சங்கம் (1852)

சென்னை மாகாணத்தில் மக்கள் உரிமைகளை நிலைநாட்ட ஏற்படுட்தப்பட்ட முதல் அமைப்பு சென்னை சுதேசி சங்கம். இதனை 1852-ஆம் ஆண்டு ஹார்லி, லெஷ்மி நரசுச் செட்டி மற்றும் சீனிவாசப் பிள்ளை ஆகியோர் நிறுவினர். இச்சங்கம் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் கொள்கைகளை விமர்சனம் செய்தது.

சென்னை மாகாணத்தில் மக்கள் உரிமைகளை நிலைநாட்ட ஏற்படுட்தப்பட்ட முதல் அமைப்பு சென்னை சுதேசி சங்கம். இதனை 1852-ஆம் ஆண்டு ஹார்லி, லெஷ்மி நரசுச் செட்டி மற்றும் சீனிவாசப் பிள்ளை ஆகியோர் நிறுவினர். இச்சங்கம் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் கொள்கைகளை விமர்சனம் செய்தது.

சென்னை மகாஜன சபை (1884)

1884-ஆம் ஆண்டு சென்னை மாகாஜன சபை உருவாக்கப்பட்டது. எஸ்.இராமசாமிமுதலியார், பி.அனந்தாசாருலு, மற்றும் இரங்கையா நாயுடு ஆகியோர் இதனை ஏற்படுத்தினர். இச்சபை சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ளது. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக பி.இரங்கையா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசுப் பிரதிநிதி எல்ஜின் பிரபு, டிசம்பர் 1895-ஆம் ஆண்டு சென்னைக்கு பயணம் மேற்கொண்ட போது, சென்னை மகாஜன சபை வழங்கிய வரவேற்பை ஏற்க மறுத்தார்.

சென்னை மகாஜன சபை சுதந்திரப்போராட்டத்தில் பெரும் பங்காற்றியது. இந்திய மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் எழுப்பியது. 1920-ஆம் ஆண்டு உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தை சென்னையில் ஜார்ஜ்டவுன், யானைக்கவுனி, உயர்நீதிமன்றம் மற்றும் கடற்கரைப்பகுதியில் தலைமையேற்று நடத்தியது. அப்போராட்டத்தின் போது உறுப்பினர்கள் கடுமையாகத் இதனை விசாரிக்க நீதிபதி தாக்கப்பட்டனர்.

டி.ஆர்.இராமச்சந்திர அய்யர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆங்கில அரசு காங்கிரஸ் கட்சிக்குத் தடை விதித்த போது, சென்னை மகாஜன சபை பல்வேறு பொருட்காட்சிகளை நடத்தி, குறிப்பாக அனைத்திந்திய காதி (கைத்தறி) கண்காட்சி மற்றும் சுதேசி பொருட்கள் கண்காட்சி மூலம் மக்கள் மனதில் தேசியப்பற்றை வளர்த்தது.

1896 அக்டோபர் 24-ம் நாள் தேசத்தந்தை மகாத்மா காந்தி சென்னை மகாஜன சபையில் உரையாற்றினார். இச்சபையின் பொன்விழா கொண்டாட்டத்தில் ஜவஹர்லால்நேரு கலந்து கொண்டார்.

சங்கங்களின் பெயர்:                                         தோற்றுவித்த ஆண்டு:                                                              தோற்றுவித்தவர்:

இந்து இலக்கிய சங்கம்சங்கம்       1830                                                                   -
சென்னை சுதேசி சங்கம் (Madras Native Association)  1852                                       லெட்சுமி நரசு செட்டி
இந்து முன்னேற்ற மேன்மை சங்கம் (Hindu Progressive Improvement Society) - 1853                    சீனிவாசப் பிள்ளை
மத்திய தேசிய முகமதிய சங்கம் - 1883                                                                               -
மதராஸ் மகாஜன சபை                     --1884                                                              அனந்தாச்சார்லு. ரெங்கையா நாயுடு
சுயாட்சி இயக்கம்                     -1916                                                              அன்னிபெசன்ட்
நெல்லை தேசாபிமானச் சங்கம்    -1908                                                               வ.உ.சி
தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் - 1916                                                         டி.எம்.நாயர், தியாகராஜ செட்டியார்

இந்திய தேசிய காங்கிரஸ்

1885-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஆங்கில அதிகாரியான ஆலன் ஆக்டோவியன் ஹியூம் என்பவரால் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு 1885-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் நாள் பம்பாயில் கூடியது. இந்தியா முழுவதிலுமிருந்து அம்மாநாட்டில் கலந்து கொண்ட 72 பிரதிநிதிகளில், சென்னை மகாணத்திலிருந்து பங்கேற்றவர்கள் 21 பேர் ஆவர். அவர்களுள் 16 பேர் தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்து பங்கேற்றனர். தமிழ்நாட்டு பிரதிநிதிகள் அனைவரும் சென்னை மகாஜன சங்கத்தின் சார்பாகச் சென்றவர்கள் ஆவர்.

முதல் காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக டபுள்யு.சி.பானர்ஜியின் பெயரை வழிமொழிந்து, மாநாட்டின் முதல் தீர்மானத்தை முன்மொழிந்த பெருமை தமிழ்நாட்டுப் பிரதிநிதியான எஸ்.சுப்பிரமணிய ஐய்யருக்கே கிடைத்தது.
காங்கிரஸின் மூன்றாவது மாநாடு 1887 டிசம்பரில் சென்னைநகரில் நடைபெற்றது. பத்ருதீன் தியாப்ஜியின் தலைமையில் கூடிய அம்மாநாடு முதன் முறையாகத் திறந்தவெளித் திடலில் அமைக்கப்பட்ட பந்தலில் நடைபெற்றது. அதில் சென்னை மாநிலத்தின் சார்பாக 362 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போதைய சென்னை கவர்னராயிருந்த கன்னிமரா பிரபு அம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் சிறப்பு விருந்தளித்துச் சிறப்பித்தார்.

1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் சி.பி.விஜராகவாச்சாரியும், 1926 கௌகாத்தி காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் எஸ்.சீனிவாச ஐய்யங்காரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே. சுதந்திரத்திற்கு முன்பாக சென்னையில் இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடுகள் 7 முறை நடைபெற்றுள்ளது.

ஆண்டு  தலைமை

1. 1887 - பத்ருதீன் தியாப்ஜி
2. 1894 - ஆல்பிரெட் வெப்
3. 1898 - ஆனந் மோகன் போஸ்
4. 1903 - லால்மோகன் கோஷ்
5. 1908 - ராஷ்பிஹாரி கோஷ்
6. 1914 - பூப்பேந்திரநாத் போஸ்
7. 1927 - எம்.ஏ.அன்சாரி

தமிழ்நாட்டு மிதவாதிகள்

கோபாலகிருஷ்ண கோகலேயைப் பின்பற்றியவர்கள் காங்கிரஸ் மிதவாதிகள் என்றழைக்கப்பட்டனர். சேலம் விஜராகவாச்சாரியைத் தமிழ்நாட்டு மிதவாதத்தின் தந்தை எனக் கூறலாம். அவரது பாசறையில் பயிற்சி பெற்றவர் தான் சி.ராஜகோபாலாச்சாரி. வி.எஸ்.சீனிவாச சாஸ்த்திரி, பி.எஸ்.சிவகாமி ஐய்யர், வி.கிருஷ்ணசாமி ஐய்யர், டி.ஆர். வெங்கடராம சாஸ்திரி, ஜி.ஏ.நடேசன், திரு.வி.க., டாக்டர்.பி.வரதராஜூலுநாயுடு, ஈ.வெ.ராமசாமி நாயக்கர், எஸ்.சீனிவாச ஐய்யங்கார் ஆகியோர் தமிழ்நாட்டின் மிதவாதிகளாவர்.

தமிழ்நாட்டுத் தீவிரவாதிகள்

பாலகங்காதர திலகரைப் பின்பற்றியவர்கள் தீவிரவாதிகள் என்றழைக்கப்பட்டனர். டி.எம்.நாயர், எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார், ஏ.ராமசாமி ஐய்யங்கார், டி.ரெங்காச்சாரி, வ.உ.சிதம்பரம்பிள்ளை, அரவிந்தகோஷ், சுப்பிரமணிய சிவா. சி.சுப்பிரமணிய பாரதி, வ.வே.சுப்பிரமணிய ஐய்யர், நீலகண்ட பிரம்மச்சாரி, வாஞ்சிநாதன், சுதேசி பத்மநாப ஐய்யர் ஆகியோர் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க காங்கிரஸ் தீவிரவாதிகளாவர். வ.உ.சிதம்பரம் பிள்ளை தமிழ்நாட்டு திலகர் என்று அழைக்கப்பட்டார்.
வ.உ.சியும்,சுப்பிரமணிய சிவாவும் திலகரின் தளபதிகளாக கருதப்பட்டனர்.

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்

1905 -இல் வங்காளத்தில் தோன்றிய சுதேசி இயக்கம் தமிழக மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. "வந்தே மாதரம்” என்ற முழக்கம் தமிழகத்தில் ஒலிக்கத் துவங்கியது. தென்னாட்டு திலகர் என்று அழைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சுதேசிக் கருத்துக்களை பரப்பி வந்தார். 1906-இல் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியை நிறுவினார்.

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்துடன் பயங்கரவாதமும் ஓரளவு தலை தூக்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் மணியாச்சி இரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான சங்கரன் நாயர், இந்தக் கொலை "தேசிய விழிப்பின் எதிரொலி" என்று குறிப்பிட்டார். சுதேசி இயக்கத் தலைவர்களான வ.உ.சிதம்பரனார், பாரதியார், சிவா போன்றவர்களது பேச்சும், எழுத்தும் மக்களை எழுச்சியுறச் செய்தன.

தன்னாட்சி இயக்கம் (1916)

1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி சென்னை கோகலே மண்டபத்தில் தன்னாட்சி கழகம் (Home Rule League) அன்னிபெசண்ட் அம்மையாரால் துவக்கப்பட்டது. தன்னாட்சி கழகத்தின் தலைவராக அன்னிபெசன்ட் அம்மையாரும், ஜி.எஸ்.அருண்டேல் அமைப்புச் செயலாளராகவும், சி.பி.ராமசாமி ஐய்யர் பொதுச் செயலாளராகவும், பி.பி.வாடியா பொருளாளராகவும் பொறுப்பேற்றனர். 

பிரிட்டிஷ் பேரரசுக்குள் இந்தியா சுயாட்சி பெற வேண்டும் என்பதே தன்னாட்சி கழகத்தின் குறிக்கோளாகும். இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டு முடங்கிக் கிடந்த காலத்தில் தன்னாட்சி இயக்கம் தேசியப் போராட்டத்தை தீரத்துடன் வழிநடத்தியது. 1917, ஆகஸ்ட் 20-இல் வெளியான மாண்டேகு பிரகடனம் அன்னிபெசண்ட் அம்மையாரின் சுயாட்சி சங்கத்துக்கு கிடைத்த பரிசு எனலாம்.

அன்னிபெசண்ட் அம்மையாரின் சாதனைகளைப் பாராட்டி அவரைப் பெருமைப்படுத்தும் பொருட்டு 1917-டிசம்பரில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரௌலட் சத்யாக்கிரகம் 

மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் தங்கியிருந்த போதுதான் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிரான ரௌலட் சத்தியாக்கிரகத்தை காந்தி தமிழ்நாட்டிலிருந்துதான் துவக்கினார். இதுவே காந்தியின் முதல் அகில இந்திய சத்தியாக்கிரக போராட்டம் ஆகும். 1919, மார்ச் 17-அன்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்த காந்தி கஸ்தூரி ரங்க ஐயங்கார் வீட்டில் தங்கினார்.

அங்குதான் ரௌலட் சட்ட எதிர்ப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் விளைவாக சத்தியாக்கிரக சபை உருவாக்கப்பட்டது. காந்தி அச்சபையின் தலைவராகவும், சி.விஜயராகவாச்சாரி, டி.பிரகாசம் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும். சி.ராஜகோபாலாச்சாரி, எம்.சி.நஞ்சுண்டராவ், எ.கஸ்தூரிரங்க ஐயங்கார்.ஜி.அரிபுரவோத்தம் ராவ், சேலம் டி.ஆதிநாராயண செட்டியார் ஆகியோர் செயலாளர்களாகவும் பொறுப்பேற்றனர். 

1919-ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழ்நாட்டில் ரௌலட் சட்ட எதிர்ப்பு நாள் துக்கத்தினமாக அனுசரிக்கப்பட்டது. பல பகுதிகளில் கண்டன ஊர்வலங்கள் நடைபெற்றன. அப்போது பத்திரிக்கை பதிவுச் சட்டத்தை மீறி சென்னை நகரில் "சத்யாகிரகி" என்ற பத்திரிக்கை வெளியிடப்பட்டது. அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட நூல்களான காந்தியின் “சர்வோதயம்” “இந்திய சுயாராஜ்யம்" ஆகியவற்றையும் வீர சவார்க்கரின் "எரிமலை' என்ற நூலையும் தமிழ்நாட்டுச் சத்தியாக்கிரகிகள் விற்பனை செய்தனர்.

கிலாபத் இயக்கம் 

காந்தியின் ஒத்துழைப்போடு இந்திய முஸ்லீம்கள் துவக்கிய கிலாபத் இயக்கத்தில் தமிழ்நாடு ஆர்வத்தோடு கலந்து கொண்டது.
1919 ஆகஸ்டில் கூடிய சென்னை மாநில காங்கிரஸ் மாநாட்டில் ராஜகோபாலாச்சாரி அலி சகோதரர்களை விடுதலை செய்யக்கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். மேலும், அக்டோபர் 17 அன்று அனுசரிக்கப்பட்ட கிலாபத் தினத்துக்கு தமிழ்நாட்டு இந்துக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தார்.

1920- மே மாதத்தில் ராஜகோபாலாச்சாரியின் ஆதரவோடு யாகூப் ஹாசன் சென்னை மாநில கிலாபத் இயக்கத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். 1920 ஏப்ரல் 20-ஆம் தேதி சென்னை நகரில் மௌலான சவுகத் அலியின் தலைமையில் கிலாபத் மாநாடு நடைபெற்றது.
ராஜகோபாலாச்சாரி, கஸ்தூரி ரங்க ஐயங்கார், பிரகாசம் ஆகியோர் அம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசினர். 

1920 ஆகஸ்டில் தமிழ்நாட்டுக்கு வருகைதந்த காந்தி கிலாபத் இயக்கத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி கிலாபத் இயக்கத்தின் உயிர்நாடியாகத் திகழ்ந்தது. தமிழ்நாட்டில் நீதிக்கட்சியினரும், சுயாட்சி அங்கத்தினரும், லிபரல் கட்சியினரும் கிலாபத் இயக்கத்தை ஆதரிக்கவில்லை.

ஒத்துழையாமை இயக்கம்

1919-இல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை துவக்கினார். தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் சி.ராஜகோபாலாச்சாரியின் தலைமையில் நடைபெற்றது. ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தொழிலாளர் யூனியன் சார்பாக பக்கிங்காம் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டு வந்த சட்டமன்ற புறக்கணிப்பு வெற்றி பெறவில்லை. அதற்கு காரணம் நீதிக்கட்சி தேசிய நீரோட்டத்திலிருந்து விலகி அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று, ஒத்துழையாமை இயக்கத்தை ஒதுக்கிவிட்டு மக்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றியது தான்.

தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்கள் 1921 ஜனவரி 10-ஆம் தேதி சென்னைக்கு வருகைதந்த கானாட் கோமகனைப் புறக்கணித்தனர். கஸ்தூரிரங்க ஐயங்கார், சீனிவாச ஐயங்கார், சத்தியமூர்த்தி, வ.உசிதம்பரனார், சிங்காரவேலு செட்டியார், டாக்டர் வரதராஜூலு நாயுடு போன்ற தலைவர்களின் முயற்சியால் ஒத்துழையாமை இயக்கம் பெரும் பயன் அளித்தது.

மேலும் இந்து, சுதேசமித்திரன், தேசபக்தன், முகமதன் போன்ற பத்திரிக்கைகளும் இந்த இயக்கம் வளர உதவின. தமிழகத்தில் ஊர்வலங்களும், பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன. 
பல்லாயிரக்கணக்கானோர் சிறை சென்றனர். ஒத்துழையாமை இயக்கத்தின் போது மலபாரில் நிகழ்ந்த மாப்பிள்ளைகள் கிளர்ச்சி தமிழ்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. 

அதனால் தமிழ்நாட்டில் கிலாபத், ஒத்துழையாமை இயக்கங்கள் வலுவிழந்துபோயின. சௌரி சௌரா வன்முறை நிகழ்ச்சியால் காந்தியே ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொண்டார்.

சுயராஜ்ஜியக் கட்சி

இந்திய விடுதலைப் போராட்டம் தேக்க நிலையிலிருந்தபோது சுயாராஜ்ஜியக் கட்சியினர் சட்டமன்றத்துக்குள் ஒத்துழையாமை இயக்கத்தை துவக்குவதென முடிவு செய்தனர். தமிழ்நாட்டில் கஸ்தூரி ரங்க ஐயங்கார், சீனிவாச ஐயங்கார், வரதராஜூலு நாயுடு, விஜயராகவாச்சாரி, ஏ.ரங்கசாமி ஐய்யங்கார் ஆகியோர் சுயராஜ்ஜியக் கட்சியில் சேர்ந்து சட்டமன்ற நுழைவை ஆதரித்தனர்.

1892 நவம்பர் 13 அன்று நடைபெற்ற மத்திய சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுயராஜ்யக் கட்சியினருள் ஏ.ரங்கசாமி ஐய்யங்கார், ஆர்.கே.சண்முகம் செட்டியார், என்.சீனிவாச ஐய்யங்கார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் சுயராஜ்யக் கட்சி 41 இடங்களைப் பெற்றாலும்கூட அமைச்சரவையை அமைக்க மறுத்து விட்டது. 

அதனால் டாக்டர் பி.சுப்பராயன் தலைமையில் சுயேட்சை அமைச்சரவை அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சுயராஜ்ஜியக் கட்சியினரால் இரட்டை ஆட்சியின் தீமைகளை எடுத்துக்காட்ட முடிந்ததேயொழிய அதை செயலிழக்கச் செய்ய முடியவில்லை.

நீல் சிலை சத்தியாக்கிரகம்

சென்னை இராணுவப் பிரிவின் தலைவராக இருந்த கர்னல் நீல் 1857 பெருங்கிளர்ச்சியை ஒடுக்குவதில் தீவிரமாக செயல்பட்டார். அவருடைய சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் சென்னையின் பிரதானப் பகுதியில் நீலின் சிலையை வைத்தது. 

விடுதலைப் போராட்டத்தின் போது அந்தச் சிலையை
அகற்றுவதற்காக நெல்லை சோமயாஜூலுவின் தலைமையில் சத்தியாக்கிரகக்குழு துவக்கப்பட்டது.

1927-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் நாள் துவங்கிய நீல் சிலை அகற்றும் போராட்டத்துக்கு சப்புராயலு நாயுடுவும், முகமது சாலியா ராவுத்தரும் தலைமை தாங்க, நீலின் சிலையை உடைத்து சேதப்படுத்தினர்.
ஆகஸ்ட் மாதம் துவக்கப்பட்ட நீல் சிலை சத்தியாக்கிரகம் டிசம்பர் வரை தொடர்ந்து நடைபெற்றது. 

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் தொண்டர்கள் சென்னைக்கு வந்து அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் 1937-ஆம் ஆண்டு இராஜாஜி முதல்வரான பின்னர் அச்சிலை அகற்றப்பட்டு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது.

சைமன் குழு புறக்கணிப்பு

1930-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி சைமன் குழு பம்பாயில் வந்திறங்கியபோது, அதை எதிர்த்து இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சைமன் குழு சென்னைக்கு வந்தபோது "சைமனே திரும்பிப் போ" என்ற முழுக்கம் எழுந்தது. அக்குழுவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்டது. கண்டன ஊர்வலமும் கடற்கரைக் கூட்டமும் நடைபெற்றன.

சைமன் குழுவிற்கு அளிக்கப்பட்ட அரசாங்க வரவேற்பில் டாக்டர் பி.சுப்பராயன் கலந்து கொண்டதைக் கண்டித்து அவரது அமைச்சரவையிலிருந்து ரங்கநாத முதலியாரும், ஆரோக்கியசாமி முதலியாரும் பதவி விலகினர்.

பூரண சுதந்திரம்

1927-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில்தான் முதன்முறையாக பூரண சுதந்திரமே இந்தியாவின் குறிக்கோள் என அறிவிக்கப்பட்டது. 1930, ஜனவரி 26-ஆம் நாள் தேசமெங்கும் பூரண சுதந்திர நாள் கொண்டாடப்பட்டது. 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஊர்தோறும் அந்நாள் கொண்டாடப்பட வேண்டும் என ராஜகோபாலாச்சாரி பத்திரிகைகளில் வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மாலையில் திருவல்லிக்கேணியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் பங்கேற்ற அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண சுதந்திர சபதம் எடுத்தனர்.

தமிழ்நாட்டில் சட்ட மறுப்பு இயக்கம் 

தமிழ்நாட்டில் சட்ட மறுப்பு இயக்கம் இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், மறியல்கள் நடைபெற்றன. இதன் உச்ச கட்டமாக உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது.

1930 ஏப்ரல் 30-ஆம் நாள் வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சுவதற்காக இராஜாஜி தலைமையில் நூறு தொண்டர்கள் திருச்சியிலிருந்து புறப்பட்டனர். வழிநெடுகிலும் சத்யாகிரகிகள் பாரதியாரின் “அச்சமில்லை” பாடலை பாடிச் சென்றனர்.

மேலும் இந்த யாத்திரைக்கென்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற பாடலை வழிநடைப் பாடலாகப் புனைந்தார்.

தஞ்சை மாவட்ட கலெக்ட்ரான எ.ஜே.தார்ன் என்பவர் இப்போராட்டத்தை நசுக்க பல வழிகளில் முயன்றார். ஆனாலும் போராட்ட வீரர்களுக்கு திருவையாறு, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற நகரங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

வேதாரண்யத்தை அடைந்து தடையை மீறி உப்பு காய்ச்சிய ராஜாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து வேதரத்தினம் பிள்ளை, டாக்டர் ராஜன், திருமதி.லட்சுமிபதி போன்ற தலைவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

ராஜாஜி தலைமையில் திருச்சியிலிருந்து உப்பு சத்தியாகிரகிகள் புறப்பட்ட அன்றே ஆந்திர கேசரி பிரகாசம் தலைமையில் சென்னை நகரில் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம் துவக்கப்பட்டது. போராட்ட தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

1930, மே 5-ஆம் தேதி காந்தி கைது செய்யப்பட்டு ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் நாடு முழுவதும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை மாநில சட்டமன்ற நியமன உறுப்பினரான திருமதி.முத்துலட்சுமி ரெட்டி, காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

காந்தி கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து ஆறுமாத காலத்திற்கு தமிழ்நாட்டில் சட்டமறுப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்றது. 1932 ஜனவரி 26-ஆம் தேதி சென்னையில் தடையை மீறி தேசிய சுயராஜ்ஜிய தினம் கொண்டாடப்பட்டது.

இறுதியாக 1934-இல் சட்டமறுப்பு இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த இயக்கம் தமிழ்நாட்டில் படித்தவர்களிடமும், பாமர மக்களிடமும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி தேசிய இயக்கம் வளர்ச்சியடைய உதவியது.

தனிநபர் சத்தியாக்கிரகம்

1940 அக்டோபர் 13-இல் வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காந்தியடிகள் தனிநபர் சத்தியாக்கிரக திட்டத்தை வெளியிட்டார்.
அதன்படி டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் என்பவர்தான் தமிழ்நாட்டின் முதல் தனிநபர் சத்தியாக்கிரகியாகச் சிறை சென்றார். 

இவரைத் தொடர்ந்து ராஜாஜி, சத்தியமூர்த்தி, டி.பிரகாசம், ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட பல தலைவர்கள் தனிநபர் சத்தியாகிரகத்தின்போது சிறைச் சென்றனர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் 

1942-ஆம் ஆண்டு ஆகஸ்டு 7,8 தேதிகளில் பம்பாயில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1942 ஆகஸ்டு 9-ஆம் திே காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து காந்தி உட்பட பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தமிழ்நாட்டில் பரப்பியவர் காமராஜர் ஆவார். காந்தி கைது செய்யப்பட்ட செய்தி எட்டியவுடன் சென்னையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. கடைகள் அடைக்கப்பட்டன. 

தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கல்விக் கூடங்கள் காலியாக இருந்தன. தஞ்சை மாவட்டத்தில் காங்கிரஸ் கலகக்காரர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கோயம்புத்தூரில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் தடையை மீறி ஊர்வலம் சென்றனர். மதுரை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு செய்யப்பட்டது. 

தீயிடல், தந்திக் கம்பங்களை அறுத்தல், பாலங்களை பெயர்த்தல் போன்ற வன்முறைச் செயல்கள் தமிழகம் முழுவதும் பரவலாக நிகழ்ந்தன.
வன்முறை அதிகமாகக் காணப்பட்ட இந்த ஆகஸ்டு போராட்டம், அரசாங்கத்தின் அடக்கு முறை நடவடிக்கைகளால் மூன்று மாதமே நீடித்தது.

இந்தியா சுதந்திரம் அடைதல்

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்தது. ஆங்கிலேயரின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு இந்தியாவின் மூவர்ணக்கொடி பறக்கவிடப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் தமிழக முதலமைச்சராக இருந்தார். நாட்டு மக்களிடையே மகிழ்ச்சி பொங்கியது. விடுதலை நாளை மக்கள் விழாவாகக் கொண்டாடினர்.

Previous Post Next Post