போர்த்துகீசியர்கள்

தமிழகத்திற்கு வருகை புரிந்த முதல் ஐரோப்பியர் போர்த்து கீசியர்கள் ஆவர். இவர்கள் தஞ்சையை ஆண்ட செவப்ப நாயக்கரிடமிருந்து நாகப்பட்டினத்தில் வியாபாரம் செய்யும் உரிமையைப் பெற்றனர்.

தமிழகத்திற்கு வருகை புரிந்த முதல் ஐரோப்பியர் போர்த்து கீசியர்கள் ஆவர். இவர்கள் தஞ்சையை ஆண்ட செவப்ப நாயக்கரிடமிருந்து நாகப்பட்டினத்தில் வியாபாரம் செய்யும் உரிமையைப் பெற்றனர்.

கி.பி.1533-ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரைக்கு வந்த போர்த்துகீசிய கப்பற்படை நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களைக் கைப்பற்றியதுடன் சென்னையிலுள்ள சாந்தோம் பகுதியையும் கைப்பற்றியது. மதுரை நாயக்கர்கள் போர்த்துகீசியரை வெளியேற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

டச்சுக்காரர்கள்

டச்சு வணிகர்கள் ஹாலந்து நாட்டைச் சார்ந்தவர்கள். டச்சுக்காரர்கள் கி.பி.1608-ஆம் ஆண்டு தேவனாம்பட்டினத்தில் தொழிற்சாலையை அமைத்தனர். பின்பு காரைக்கால், புலிகாட் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய கிழக்கு கடற்கரைப் பட்டினங்களைக் கைப்பற்றினர். கி.பி.1689-இல் நாகப்பட்டினம் டச்சுக்காரர்களின் தலைமை இடமாக மாறியது.

ஆங்கிலேயர்கள்

கி.பி.1639-ஆம் ஆண்டு பிரான்சிஸ்டே என்பவர் சந்திரகிரி ஆளுநரிடமிருந்து சென்னபுரி என்ற இடத்தை விலைக்கு வாங்கினார். அங்கு கி.பி.1640-இல் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. கி.பி.1654-ஆம் ஆண்டு புனித ஜார்ஜ்கோட்டை கிழக்குப் பகுதியிலுள்ள ஆங்கில குடியேற்றங்களின் தலைமையிடமாக அறிவிக்கப்பட்டது. 1681-இல் கடலூர், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் புதிய குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதுடன் கடலூரில் புனித டேவிட்கோட்டையும் கட்டப்பட்டது.

டேனியர்

டேனியர் கிழக்கிந்திய கம்பெனி கி. பி. 1616-ஆம் ஆண்டு டென்மார்க்கில் உருவாக்கப்பட்டது. கி.பி. 1620-இல் டேனியர்கள் தரங்கம்பாடியில் வாணிப மையத்தை ஏற்படுத்தினர். 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் தங்களுடைய நாட்டிலிருந்து நிதி உதவி கிடைக்காததால் டேனியர்கள் தங்கள் இடங்களை ஆங்கிலேயருக்கு விற்றுவிட்டனர்.

பிரெஞ்சுக்காரர்கள்

பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி 1664-இல் உருவாக்கப்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் சாந்தோமைக் கைப்பற்றி அதை மீண்டும் டச்சுக்காரர்களிடம் ஒப்படைத்தார்கள். கி.பி.1674-ஆம் ஆண்டு பிரான்சிஸ்-மார்டின் என்பவர் பிஜப்பூர் சுல்தானிடமிருந்து "புதுச்சேரி” என்னும் சிறிய கிராமத்தைப் பெற்றார்.

கி.பி.1699-இல் புதுச்சேரியை டச்சுக்காரர்கள் கைப்பற்றினர். பிறகு ரிஸ்விக் உடன்படிக்கையின் படி, புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் திரும்பப் பெற்றனர். கி.பி.1701-ஆம் ஆண்டு புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் தலைமையிடமாக அறிவிக்கப்பட்டது.

தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர்களிடமிருந்து கி.பி.1725-ஆம் ஆண்டு மலபார் கடற்கரையிலுள்ள மாஹி பகுதிைையயும், 1739-இல் காரைக்கால் பகுதியையும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர்.

Previous Post Next Post