களப்பிரர்கள் தேற்றம் :

கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் சங்க காலம் முடிவுக்கு வந்தது. சங்க காலத்தின் இறுதிப் பகுதியை சங்கம் மருவிய காலம் என்று கூறுகிறோம். பதினெண் கீழ் கணக்கு நூல்கள் மற்றும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களாகும். கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை களப்பிரர்கள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். களப்பிரர்களைப் பற்றி அறிய நிறைய சான்றுகள் இல்லாததால், அவர்களது காலம் "இருண்ட காலம்'' என்று அழைக்கப்படுகிறது. 

தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்காலம், பெரியபுராணம் ஆகிய நூல்கள் களப்பிரர்களைப் பற்றி குறிப்பிடுகின்றன. வேள்விக்குடி மற்றும் தளவாய்புரம் செப்பேடுகளும், திருப்புகலூர் கல்வெட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள வைகுந்த பெருமாள் கோயில் கல்வெட்டு போன்றவை களப்பிரர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகளாகும். அச்சுத களப்பாளன் என்ற களப்பிர மன்னன் உறையூரை தலைநகராகக் கொண்டு தமிழகத்தை ஆண்டான் என்று யாப்பெருங்காலம் குறிப்பிடுகிறது. களப்பிரர் காலத்தில், தமிழகத்தில் வடமொழியும் பிராகிருதமும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் வட்டெழுத்து என்ற புதிய வரிவடிவம் வளர்ச்சி பெற்றது. 

களப்பிரர் காலத்தில் நிகண்டுகள் இயற்றப்பட்டன. மேலும் சீவக சிந்தாமணி, குண்டலகேசி போன்ற காப்பியங்களும் களப்பிரர் காலத்தில் தோன்றின. களப்பிரர் காலத்தில் புத்த, சமண சமயங்கள் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தன. புத்த சமய கல்விக் கூடங்கள் கடிகை என்று அழைக்கப்பட்டது. புத்த தத்தர், புத்த கோஷர், போதி தர்மர் போன்ற புத்த சமய அறிஞர்கள் இக்காலத்தில் வாழ்ந்தனர்.

திருப்பாதிரிப்புலியூரில் சமணப் பள்ளி ஒன்று செயல்பட்டது. சர்வநந்தி, வஜ்ரநந்தி ஆகியோர் களப்பிரர் காலத்தில் வாழ்ந்த சமண சமய அறிஞர்களாவர். மதுரையில் வச்சிரநந்தி என்ற சமண முனிவர் தமிழ்ச்சங்கம் ஒன்றைத் தோற்றுவித்து அதன் மூலம் சமண சமய இலக்கியங்களைத் தமிழில் பெருக்கி அதற்கு வளமூட்டினார்.

களப்பிரர் ஆட்சி வீழ்ச்சி :

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய மன்னன் கடுங்கோன் தென் தமிழ்நாட்டை களப்பிரர்களிடமிருந்து மீட்டான். அதே சமயத்தில் களப்பிரர்களிடமிருந்து தொண்டை மண்டலத்தையும், சோழ மண்டலத்தையும் பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு கைப்பற்றினான். இவ்வாறாக தமிழ்நாட்டில் களப்பிரர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

Previous Post Next Post