பல்லவர்கள் தேற்றம் :

பல்லவர்களின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இவர்கள் பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சாதவாகனர்களின் கீழ் ஆட்சி அலுவலர்களாக இருந்தவர்கள் என்றும், தொண்டை மண்டலத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்றும் கூறுவர். கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்தனர். பல்லவ மரபை, முற்காலப் பல்லவர், இடைக்கால பல்லவர் மற்றும் பிற்காலப் பல்லவர் என பிரித்து வழங்குவர்.

பல்லவர்களின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இவர்கள் பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சாதவாகனர்களின் கீழ் ஆட்சி அலுவலர்களாக இருந்தவர்கள் என்றும், தொண்டை மண்டலத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்றும் கூறுவர். கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்தனர். பல்லவ மரபை, முற்காலப் பல்லவர், இடைக்கால பல்லவர் மற்றும் பிற்காலப் பல்லவர் என பிரித்து வழங்குவர்.

முற்காலப் பல்லவர்கள் :

கி.பி. 250 முதல் கி.பி. 350 வரை ஆட்சி செய்தனர். சிவஸ்கந்தவர்மன், விஜயஸ்கந்தவர்மன் ஆகியோர் இம்மரபில் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இவர்கள் பிராகிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர். 

இடைக்கால பல்லவர்கள் :

கி.பி. 350 முதல் கி.பி. 550 வரை ஆட்சி புரிந்தனர். இம்மரபில் விஷ்ணுகோபன் குறிப்பிடத்தக்கவரவார். இவர்கள் வடமொழியில் பட்டயங்களை வெளியிட்டனர். 

பிற்காலப் பல்லவர்கள் :

கி.பி. 575 முதல் ஒன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் வீழ்ச்சியடையும் வரை ஆட்சி புரிந்தனர் .

சிம்ம விஷ்ணு பல்லவர் காலம் :

இவர்கள் வடமொழி, தமிழ் மொழி ஆகிய இரண்டு மொழிகளிலும் பட்டயங்களை வெளியிட்டனர். சிம்ம விஷ்ணுவின் தலைமையில் பல்லவர்கள், களப்பிரர்களை தோற்கடித்து வடதமிழ்நாடாகிய தொண்டை மண்டலத்தில் தமது ஆட்சியை நிறுவினர். பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும். சிம்ம விஷ்ணு காலம் முதல் பிற்காலப் பல்லவர்களின் வரலாறு துவங்குகிறது. 

சிம்ம விஷ்ணு களப்பிரர்களை வென்று தொண்டை மண்டலத்தில் பல்லவர் ஆட்சியை நிறுவினார். பின்னர் சோழப்பகுதிகள் சிலவற்றையும் கைப்பற்றினார். மேலும் வடக்கில் ஆந்திரப் பகுதியான விஷ்ணுகுண்டு முதல், தெற்கில் காவிரி ஆறு வரையில் விரிந்ததொரு பேரரசை நிறுவினார். அதனால் இவர் அவணிசிம்மன் அதாவது உலகின் சிங்கம் எனப் புகழப்பட்டார். பல்லவ அரசை ஒரு பேரரசாக மாற்றிய பெருமை சிம்ம விஷ்ணுவையேச் சாரும். சிம்ம விஷ்ணுவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்களில் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவராவர்.

முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி.600 - 630)

இவர் சிம்மவிஷ்ணுவின் மகன் ஆவார். இவரது காலத்தில் சாளுக்கியர்களோடு பகைமை ஏற்பட்டது. சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி, பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தர். மகேந்திரவர்மனைத் தோற்கடித்து பல்லவநாட்டின் வடபகுதிகளை கைப்பற்றினார். இவர் "மத்தவிலாச பிரகாசனம்" என்ற நகைச்சுவை நாடக நூலை வடமொழியில் இயற்றினார். தொடக்கத்தில் சமணராக இருந்த இவர் திருநாவுக்கரசரால் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டார். இவரது காலத்தைச் சேர்ந்த சமண சமய ஓவியங்கள் சித்தன்ன வாசலில் காணப்படுகிறது.

மகேந்திரவர்மனின் இசை ஆர்வத்தை குடுமியான்மலை இசைக் கல்வெட்டு மூலம் அறியலாம். பரிவாதினி என்ற பெயர் கொண்ட வீணை வாசிப்பில் இவர் வல்லவராக விளங்கினார். இவரே குடவரைக் கோயில்களை அறிமுகப்படுத்தியவராவார். மண்டகப்பட்டு, மாமண்டூர், மகேந்திரவாடி, வல்லம், பல்லாவரம், தளவானூர், திருச்சி, திருக்கழுகுன்றம் ஆகிய இடங்களில் இவரது குடைவரைக் கோயில்களைக் காணலாம். இவர் மகேந்திரமங்கலம், மகேந்திரவாடி என்ற இரண்டு நகரங்களை நிறுவினார்.

முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி .630 - 668)

இவர் முதலாம் மகேந்திரவர்மனின் மகன் ஆவார் இவரது காலத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் (கி.பி.640) காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். மாமல்லபுரம் என்ற புதிய நகரை உருவாக்கி அங்கு ஒற்றைக்கல் ரதங்கள் மற்றும் குடைவரைக் கோயில் மண்டபங்களை அமைத்தார். இரண்டாம் புலிகேசியை கொன்று வாதாபியை வென்றதால் வாதாபி கொண்டான் என புகழப்பட்டார்.

இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி.691 - 728)

இரண்டாம் நரசிம்மவர்மன் இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்டார். இவர் மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில் மற்றும் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயில் ஆகியவற்றைக் கட்டினார். இவை இரண்டும் மணற்பாறைக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாகும். புகழ்மிக்க வடமொழி அறிஞர் தண்டி இவரது அவையில் இருந்தார். அவர் 'தண்டியலங்காரம்' என்ற சமஸ்கிருத இலக்கண நூலை இயற்றினார். இவரது ஆட்சியில் கடல் வாணிபம் செழிந்திருந்தது.

இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி.728-731)

இரண்டாம் நரசிம்மவர்மனின் மகனான இரண்டாம் பரமேஸ்வரவர்மன் கி.பி. 728 - ல் ஆட்சியில் அமர்ந்தார். சாளுக்கிய மன்னர் இரண்டாம் விக்கிரமாதித்தனால் போரில் தோற்கடிக்கப்பட்டார். கங்கர்களோடு நடைபெற்ற போரில் பரமேஸ்வரவர்மன் கொல்லப்பட்டார். இவரது மரணத்திற்கு பிறகு இவரின் மகன்கள் ஆட்சிக்கு வராத காரணத்தினால், சிம்மவிஷ்ணுவால் தொடங்கப்பட்ட பிற்கால பல்லவ மரபு முடிவடைந்தது.

இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.731 - 796)

இரண்டாம் பரமேஸ்வரனின் இறப்பிற்குப் பிறகு சிம்மவிஷ்ணுவின் தம்பியும் இரண்யவர்மனின் மகனுமான இரண்டாம் நந்திவர்மன் பல்லவ அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் நந்திவர்மன் விஷ்ணுபக்தர் ஆவார். இவர் காஞ்சியில் வைகுந்த பெருமாள் கோயிலை கட்டினார். திருமங்கை ஆழ்வார் இவரின் சம காலத்தவராவார்.

மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.847 - 870)

பல்லவ மன்னர்களில் குறிப்பிடத்தக்க மற்றொரு மன்னர் மூன்றாம் நந்திவர்மன் ஆவார். இவர் தெள்ளாறு என்னுமிடத்தில் நடைபெற்ற பெரும் போரில் பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபனை வென்றார். எனவே இவரை தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் என நந்திக் கலம்பகம் புகழ்கிறது.

பல்லவ அரசின் முடிவு :

இராஜசிம்மனுக்கு பிறகு பீமவர்மனின் வழித்தோன்றல்களான நந்திவர்மன், நிருபதுங்கன், அபராஜிதன் போன்ற பல்லவ மன்னர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டனர். சோழர்களின் எழுச்சியினால் பல்லவ அரசு தனது செல்வாக்கை இழந்தது. கி.பி. 895 - இல் திருப்புறம்பியம் போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றனர். பின்னர் விஜயாலய சோழனின் மகனான ஆதித்த சோழன் கடைசி பல்லவ மன்னன் அபராஜிதனை வென்று காஞ்சிப்பகுதியைக் கைப்பற்றினான். அத்துடன் பல்லவப் பேரரசு முடிவுக்கு வந்தது.

Previous Post Next Post