பல்லவர் கால ஆட்சி முறை :

பல்லவப் பேரரசானது மண்டலம், கோட்டம், நாடு, ஊர் என பல ஆட்சிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பல்லவப் பேரரசின் மிகப்பெரிய ஆட்சிப்பிரிவு மண்டலம் அல்லது ராஷ்டிரம் எனப்படும். இது இளவரசரின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி பெற்று விளங்கியது. மண்டலங்கள் பல விஷயங்களாகவும் (கோட்டங்களாகவும்), விஷயங்கள் பல நாடுகளாகவும், நாடுகள் பல ஊர்களாகவும் பிரிக்கப்பட்டன. பல்லவ ஆட்சி முறையின் மிகச்சிறிய ஆட்சிப்பிரிவு ஊர் அல்லது கிராமம் என்பதாகும்.

பல்லவப் பேரரசானது மண்டலம், கோட்டம், நாடு, ஊர் என பல ஆட்சிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பல்லவப் பேரரசின் மிகப்பெரிய ஆட்சிப்பிரிவு மண்டலம் அல்லது ராஷ்டிரம் எனப்படும். இது இளவரசரின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி பெற்று விளங்கியது. மண்டலங்கள் பல விஷயங்களாகவும் (கோட்டங்களாகவும்), விஷயங்கள் பல நாடுகளாகவும், நாடுகள் பல ஊர்களாகவும் பிரிக்கப்பட்டன. பல்லவ ஆட்சி முறையின் மிகச்சிறிய ஆட்சிப்பிரிவு ஊர் அல்லது கிராமம் என்பதாகும்.

நிர்வாகத்தின் அடிப்படை அலகு கிராமம் ஆகும். கிராமத்தை நிர்வகிக்க 'ஊர் அவை' இருந்தது. மைய அரசின் தலைவராக மன்னர் விளங்கினார். மன்னருக்கு உதவியாக அமைச்சர்களும், செயலர்களும் இருந்தனர். பல்லவ அரசின் அமைச்சர்கள் அமாத்தியர்கள் எனப்பட்டனர். அவர்களுக்கு உத்தமசீலன், பிரம்மராஜன், பேரரையன் போன்ற விருதுகளும் கொடுக்கப்பட்டன. பல்லவ அரசில் மூன்று வகையான நீதிமன்றங்கள் இருந்தன. உச்ச நீதிமன்றம் தர்மசேனா எனப்பட்டது. இதற்கு அரசனே தலைமை வகித்தார். நகரத்திலிருந்த நீதிமன்றங்கள் அதிகரணங்கள் என்றும், கிராம நீதிமன்றங்கள் கரணங்கள் என்றும் அழைக்கப்பட்டன.

நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. இது தவிர வேறு பல வரிகளும் வசூலிக்கப்பட்டன. இவை காணம், இறை, பாட்டம், பூச்சி என்று அழைக்கப்பட்டன. அரசாங்க கருவூலத்தை குமரன் பண்டாரம் என்ற அதிகாரி நிர்வகித்து வந்தார். பல்லவர்கள் ஆட்சி காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சிறந்து விளங்கின. சோழர்களின் கிராம ஆட்சி முறைக்கு பல்லவர்கள் வழிகாட்டியாக விளங்கினர்.

பல்லவர் காலத்தில் சமூக நிலை :

பல்லவர் காலத்தில் தான் பக்தி இயக்கம் தோன்றி வளர்ந்தது. பல்லவர் கால சமுதாயம் பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது. பிராமணர்கள் அக்ரஹாரம் எனப்பட்ட தனிப்பகுதிகளில் வாழ்ந்தனர். பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலக் கொடைகள் பிரம்மதேயங்கள் எனப்பட்டன. 

கோயில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்களுக்கு தேவதானம் என்று பெயர். சூத்திரர்களை பல்லவர் கால இலக்கியங்கள் புலையர் என்றும், சண்டாளர் என்றும் குறிப்பிடுகின்றன. பல்லவர் கால சமுதாயத்தில் ஆடல் மகளிர் தனிப் பிரிவாகக் காணப்பட்டனர். 

பல்லவர் காலத்தில் பொருளாதார நிலை :

தலைநகரமான காஞ்சிபுரம் முக்கிய வணிக நகரமாகவும் திகழ்ந்தது. வணிகர் சங்கம் மணிகிராமம் என்று அழைக்கப்பட்டது. அயல்நாட்டு வணிகர்கள் நானாதேசிகள் என்று அழைக்கப்பட்டனர். நிலங்கள் உழவு, நிவர்த்தனம் அல்லது பட்டிகா, ஹாலா என்னும் அளவுகளால் அளக்கப்பட்டன. கலப்பை என்பதும் ஓர் அளவு கோலாகும். பல்லவர் காலத்திலும் அரிசியே முக்கிய உணவாகும். தங்கத்தின் எடையை கழஞ்சு, மஞ்சாடி என்று குறிப்பிட்டனர். முதலாம் மகேந்திரவர்மன் மாமண்டூரில் அமைத்த ஏரியின் பெயர் சித்ர மேக தடாகம் என்பதாகும்.

பல்லவர் காலத்தில் கலை மற்றும் கட்டடக் கலை :

பல்லவர்களே பாறைக் கட்டடக்கலையை தமிழகத்தில் அறிமுகம் செய்தவராவர். பல்லவர்களின் கட்டடக்கலை முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கியது. குடைவரைக் கோயில்களை மகேந்திரவர்மன் பாணிக் கோயில்கள் என்று கூறுவர். ஒற்றைக்கல் ரதங்களும், மண்டபங்களும் மாமல்லன் பாணிக் கோயில்கள் எனப்படுகின்றன. மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கல் ரதங்கள் தற்காலத்தில் பஞ்ச பாண்டவ ரதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மாமல்லன் பாணி சிற்பங்களில் மிகவும் சிறப்பானது திறந்தவெளிக் கலைக்கூடம் என்று அழைக்கப்படும் பாறைச்சிற்பமாகும். இராஜசிம்மன் காலத்தில் கட்டுமானக் கோயில்கள் அமைக்கும் வழக்கம் தொடங்கியது. 

காஞ்சி கைலாசநாதர் கோயில் மற்றும் மாமல்லபுரக் கடற்கரைக் கோயில் ஆகிய இரண்டும் கட்டுமானக் கோயில்களின் தொடக்க நிலையாகும். காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்த பெருமாள் கோயில் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டது. இது நந்திவர்மன் பாணி என்று அழைக்கப்படுகிறது. மாமண்டூர் மற்றும் குடுமியான்மலை இசைக்கல்வெட்டுகள் பல்லவர்கள் இசைக்கு அளித்த சிறப்பிடத்தை உணர்த்துகின்றன. 

முதலாம் மகேந்திரவர்மன் மற்றும் முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோர் இசையில் வல்லவர்களாக இருந்தனர். சித்திரகாரப்புலி என்று போற்றப்பட்ட முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் தட்சிண சித்திரம் என்ற ஓவியக்கலை விளக்கநூல் தொகுக்கப்பட்டது.

பல்லவர் காலத்தில் கல்வி மற்றும் இலக்கிய நிலை :

பல்லவர் காலத்தில் வடமொழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் தமிழ்மொழியையும் போற்றி வளர்த்தனர். காஞ்புரத்திலிருந்த புத்த கடிகை ஒரு சிறந்த கல்வி மையமாகும். மேலும் இக்கல்விமையம் வடமொழிக்கல்விக்கும் பெயர்பெற்று விளங்கியது. யுவான் சுவாங், தர்மபாலர் போன்ற அறிஞர்கள் இங்கு கல்வி பயின்றனர். முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகாசனம் மற்றும் பாகவத வியூகம் ஆகிய வடமொழி நூல்களை இயற்றினார். 

தண்டி என்பவர் காவிய தரிசனம் மற்றும் அவந்தி சுந்தரி கதாசாரம் ஆகிய நூல்களை இயற்றினார். பல்லவர் காலத்தில் நாயன்மார்களும், ஆழ்வார்களும் பக்திப்பாடல்களை தமிழிலேயே இயற்றினர். நாயன்மார்களின் பாடல் தொகுப்பு திருமுறை என்றும் ஆழ்வார்களின் பாடல் தொகுப்பு திவ்ய பிரபந்தம் என்றும் அழைக்கப்படுகிறது. பாரவி என்பவர் 'கீர்தார்சுனியம்' என்ற நூலை எழுதினார். பல்லவர் காலத்தில் வாழ்ந்த கல்லாடனார் 'கல்லாடம்' என்ற இலக்கண நூலையும், பெருந்தேவனார் 'பாரதவெண்பா' என்ற நூலையும் இயற்றினார். நந்திக்கலம்பகம் என்ற நூலும் பல்லவர் காலத்தில் எழுதப்பட்டதாகும். 

பல்லவர் காலத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தி நெறியைப் பரப்பினார்கள். நாயன்மார்கள் அறுபத்து மூவர் ஆவர். அவர்களில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர் அவர்களில் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார் ஆகிய நால்வரும் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இதனுடன் பல்லவர் ஆட்சி முடிவடைந்தது.

Previous Post Next Post