தமிழக பல்கலைக்கழகங்கள்

சுதந்திரத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் (சென்னை மாகாணம்) சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திரப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் இருந்தன. ஆனால் இன்று தமிழகத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன.


பெயர்

அமைவிடம்

மாவட்டம்

உதவி

சிறப்பு

தொடக்கம்


1

அழகப்பா பல்கலைக்கழகம்

காரைக்குடி

சிவகங்கை

மாநில அரசு

மானுடவியல், அறிவியல்கள்

1985


2

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை

சென்னை

மாநில அரசு

பொறியியல்

1978


3

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அண்ணாமலை நகர்

சிதம்பரம்

மாநில அரசு

மானுடவியல், அறிவியல்கள், பொறியியல், வேளாண்மை

1929


4

பாரதியார் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

மாநில அரசு

மானுடவியல், அறிவியல்கள்

1982


5

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

மாநில அரசு

மானுடவியல், அறிவியல்கள்

1982


6

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை

மதுரை

மாநில அரசு

மானுடவியல், அறிவியல்கள்

1965


7

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

திருநெல்வேலி

திருநெல்வேலி

மாநில அரசு

மானுடவியல், அறிவியல்கள்

1992


8

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

கொடைக்கானல்

கொடைக்கானல்

மாநில அரசு

மானுடவியல், அறிவியல்கள்

1984


9

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்

சென்னை

சென்னை

மாநில அரசு

மருத்துவம்

1989

10

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

சென்னை

சென்னை

மாநில அரசு

சட்டம்

1998


11

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

மாநில அரசு

வேளாண்மை

1971


12

பெரியார் பல்கலைக்கழகம்

சேலம்

சேலம்

மாநில அரசு

மானுடவியல், அறிவியல்கள்

1998


13

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

சென்னை

சென்னை

மாநில அரசு

கால்நடை

1990


14

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

மாநில அரசு

மானுடவியல், அறிவியல்கள்

1981


15

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

வேலூர்

வேலூர்

மாநில அரசு

மானுடவியல், அறிவியல்கள்

2003


16

சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னை

சென்னை

மாநில அரசு

மானுடவியல், அறிவியல்கள்

1857


17

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்

சென்னை

சென்னை

மாநில அரசு

கல்வியியல்

2008


18

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

சென்னை

சென்னை

மாநில அரசு

2004


19

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்

சென்னை

சென்னை

மாநில அரசு

விளையாட்டு

2005


20

Tamil Nadu Horticulture University

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

மாநில அரசு

தோட்டக்கலை

2011


21

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

மாநில அரசு

மீன்வளம் & மீன்வளர்த்தல்

2012


1953-ஆம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்ட பல்கலைக் கழக மானியக் குழுவுடன் தமிழ்நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

1953-ஆம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்ட பல்கலைக் கழக மானியக் குழுவுடன் தமிழ்நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

மாநில ஆளுநரே அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கிறார். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒரு துணைவேந்தர் தலைமையில் இயங்குகிறது. மாநில கல்வியமைச்சர் பல்கலைக்கழகங்களின் இணை வேந்தராக இருப்பார்.

1. சென்னை பல்கலைக்கழகம் - சென்னை

இது 1857-ஆம் ஆண்டு கானிங் பிரபு கவர்னர் ஜெனரலாக இருந்த போது இந்தியாவில் தொடங்கப்பட்ட மூன்று பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் முதல் பல்கலைக்கழகம் ஆகும்.

2. அண்ணாமலை பல்கலைக்கழகம் - சிதம்பரம்

இதுவே தமிழ்நாட்டின் முதல் தனியார் பல்கலைக்கழகமாகும். இது 1929-ஆம் ஆண்டு ராஜ சர். அண்ணாமலைச் செட்டியாரால் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது.

இது ஒரு தனியார் பல்கலைக்கழகம் என்பதால் மாநில கல்வி அமைச்சர் இணைவேந்தராக இராமல், செட்டி நாட்டு அரச குடும்பத்தினர் ஒருவர் இதன் இணைவேந்தராக இருப்பார்.

3. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் - மதுரை

இது சுதந்திரத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமாகும்.

மதுரையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையம் ஒன்று தொடங்கப்பட்டது.அதுவே 1966 - இல் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரை முதல் துணை வேந்தராகக் கொண்டு மதுரைப் பல்கலைக்கழகமாக உருவாகியது.

இது 1976-ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது இந்தியாவின் முதல் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகமாகும்.

4. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர்

இது தமிழ்நாட்டில் வேளாண்மைக்காக தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஆகும். இது 1971-ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி "தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்" என்ற பெயரில் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டது.

இது 1990 -இல் ஜி.டி.நாயுடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் 1992-இல் மீண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்று பழையபடியே பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

5. காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் - திண்டுக்கல்

காந்தியடிகளின் புதிய கல்விச் சிந்தனையான "நய்தலிம்” என்பதன் அடிப்படையில், இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்ட்டது. 1976-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 - இல் மத்திய அரசு இதனை தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகமாக அறிவித்தது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இதன் வேந்தராவார். இது திண்டுக்கல்லில் காந்தி கிராமம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

6. அண்ணா பல்கலைக்கழகம் - சென்னை

இது இந்தியாவில் பொறியியல் முதலாவது பல்கலைக்கழகமாகும். துறைக்காக ஆரம்பிக்கப்பட்ட சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகம் 1978 முதல் 1982 வரை “பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்” என்று அழைக்கப்பட்டது. அதன் பிறகே அண்ணா பல்கலைக்கழகம் என்றாயிற்று. தேசிய அங்கீகாரக் குழு (National Accrediation Council) அண்ணா பல்கலைக்கழகட்திற்கு 5 நட்சத்திர அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் நாள் 5 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களாக பிரிக்கப்பட்டது.

அவை,

1. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை -2007. 

2. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 2007.

3. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சி-2007. 

4. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி - 2007.

5. அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மதுரை - 2010.

2011-இல் மாநில அரசானது புதிதாக உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து ஒரே பல்கலைக்கழகமாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

7. தமிழ்ப் பல்கலைக்கழகம்-தஞ்சாவூர்

1981-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள் உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. இது தமிழ்மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வு மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டது.

8. பாரதியார் பல்கலைக்கழகம்-கோயம்புத்தூர்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் முதுநிலை மையமே 1982-ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகமாக மாறியது. இது 1985-ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) அங்கீகாரத்தைப் பெற்றது.

9. பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருச்சி முதுநிலை மையமே 1982-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் நாள் பாரதிதாசன் பல்கலைக்கழகமாக உருமாறியது.

10. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் - வேலூர்

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2002-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் வேலூரில் உருவாக்கப்பட்டது.

11. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் 1984-ஆம் ஆண்டு கொடைக்கானலில் தொடங்கப்பட்டது. 

இது 1990 -இல் சென்னைக்கு மாற்றப்பட்டது. பின்னர் 1994 -இல் சென்னையிலிருந்து மீண்டும் கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டது. இது தமிழகத்தில் மகளிருக்காக தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமாகும்.

12. அழகப்பா பல்கலைக்கழகம் - காரைக்குடி

அழகப்பா பல்கலைக்கழகம் 1985-இல் உருவாக்கப்பட்டது. இது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ளது.

டாக்டர் அழகப்பா செட்டியாரால் 1947-இல் தொடங்கப்பட்ட கலைக்கல்லூரி, 1950-இல் தொடங்கப்பட்ட கல்வியியல் கல்லூரி ஆகியவற்றை ஒருங்கிணைத்து இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

13. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் - சென்னை 

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளையும் ஒருங்கிணைந்து 1987-ஆம் ஆண்டு "தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

இது 1990-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து "தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்" என்று அழைக்கப்பட்டு வருகிறது.

14. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் - சென்னை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவந்த சென்னை கால்நடைக் கல்லூரி, நாமக்கல் கால்நடைக் கல்லூரி, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 1989-ஆம் ஆண்டு சென்னையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

15. பெரியார் பல்கலைக்கழகம் - சேலம்

பெரியார் பல்கலைக்கழகம் 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-அன்று சேலத்தில் தொடங்கப்பட்டது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - திருநெல்வேலி 

16. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 

1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இது திருநெல்வேலியில் அமைந்துள்ளது.

ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதற்காக அமைக்கப்பட்ட கஜேந்திர காட்கர் குழுவின் பரிந்துரைப்படி, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தென்பகுதி கல்லூரிகள் பிரிக்கப்பட்டு இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

17. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை

சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் முதலிய இடங்களில் செயல்பட்டுவந்த சட்டக் கல்லூரிகளை இணைத்து 1996 நவம்பர் 14 அன்று டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் சென்னையில் உருவாக்கப்பட்டது. இதுவே இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகமாகும்.

18. தமிழ் இணையக் கல்விக்கழகம்

உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும், அவர்களது இலக்கியத் தொடர்பினை நீட்டிக்கவும் 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் நாள் "தமிழ் இணையப் பல்கலைக் கழகம்" நிறுவப்பட்டது.

இது தற்போது "தமிழ் இணையக் கல்விக் கழகம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசால் நிறுவப்பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனமாகும்.

19. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - சென்னை

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 2002 - ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்று வடிவமைக்கப் பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியை தொடர முடியாமல் இருப்பவர்களுக்கு பயன்தரும் வகையில் இது நிறுவப்பட்டுள்ளது.

20. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் - சென்னை

தமிழ்நாடு அரசு 2005-ஆம் ஆண்டு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு துறைகளுக்கென பிரத்தியோகமாக “தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தை' சென்னையில் நிறுவியது.

இதுவே இந்தியாவில் விளையாட்டுக் கல்விக்காக அமைக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகமாகும். 

21. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் - சென்னை

தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசானது 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தை சென்னையில் நிறுவியது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

22. இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் - சென்னை

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (Indian Maritime University) 2008-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் நாள் மத்திய அரசால் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் சென்னையில் செம்மஞ்சேரி என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. 

இது தற்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் உத்தண்டி என்ற இடத்தில் அமைந்துள்ள தேசிய கடல்சார் அகாடெமி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இது கடல்சார் போக்குவரத்துக்கான கல்வித்திட்டங்களை வழங்கும் ஒரு மத்தியப் பல்கலைக்கழகமாகும். இதன் வெளிவளாகங்கள் மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

23. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் - திருவாரூர்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் இந்திய பாராளுமன்ற சட்டப்படி 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் நாள் திருவாரூரில் நிறுவப்பட்டது.

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

24. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்

1988-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெரியார் மணியம்மை மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியே, 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமாக உருமாறியது.

பெரியார் மணியம்மை மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியானது உலகின் முதலாவது மகளிர் பொறியியல் கல்லூரி என்ற தனிச்சிறப்பை பெற்றது. இது தஞ்சாவூரில் வல்லம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

Previous Post Next Post