இராமநாதபுரம் மாவட்டத்தின் வரலாறு

பாண்டியர்கள் மற்றும் சேதுபதிகள் ஆண்ட இப்பகுதியானது பின்னர் (ஆங்கிலேயர் வசமானது) 1910-இல் திருநெல்வேலி, மதுரையின் சில பகுதிகளை இணைத்து இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இது ஆங்கிலேயர் காலத்தில் 'ராம்நாட்' என்று அழைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்துதான் சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் 1985 மார்ச் 15 - இல் உருவாக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்துதான் சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் 1985 மார்ச் 15 - இல் உருவாக்கப்பட்டன.

இராமநாதபுரம் மாவட்டத்தின் அடிப்படைத் தகவல்கள்

தலைநகர்: இராமநாதபுரம்

மொத்தம் பரப்பளவு: 4068.31 ச.கி.மீ.

இராமநாதபுரம் மாவட்டத்தின் மக்கள் தொகை

2001 ஆம் ஆண்டு அன்று கணக்கெடுப்பின்படி, 11,87,604 ஆக இருந்தது, 2011 ஆம் ஆண்டு அன்று எடுக்க மக்கள் தொகை எண்ணிக்கை 13,53,445 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம்: 13,53,445

ஆண்கள்: 6,82,658

பெண்கள்: 6,70,787

இராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லைகள்

கிழக்கில் - வங்காள விரிகுடா

மேற்கில் - விருதுநகர் மாவட்டம்

வடக்கில் - புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள்

தெற்கில் - தூத்துக்குடி மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டத்தின் நிர்வாகப் பிரிவுகள்

வருவாய் கோட்டங்கள்- 2 - இராமநாதபுரம், பரமக்குடி

வட்டங்கள் : 9

இராமநாதபுரம் மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகள்

நகராட்சிகள் : 4

பேரூராட்சிகள் : 7

ஊராட்சி ஒன்றியங்கள் : 11

கிராம பஞ்சாயத்துகள் : 429

வருவாய் கிராமங்கள் : 400

நாடாளுமன்றத் தொகுதி : 1 - இராமநாதபுரம்

சட்டமன்றத் தொகுதிகள் : 4 - இராமநாதபுரம், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூர்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயம்

நெல் முக்கிய பயிராகும். சோளம், கம்பு, நிலக்கடலை, பருப்பு வகைகள் போன்றவை இதர பயிர்களாகும்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய ஆறுகள்

வைகை, குண்டாறு.

இராமநாதபுரம் மாவட்டத்தின் தொழில் வளம்

நூற்பாலைகள், இரசாயன ஆலைகள் மற்றும் சிறுதொழிற்சாலைகள் பல உள்ளன.

இராமநாதபுரம் மாவட்டத்தின் சிறப்புகள்

"தென்னிந்தியாவின் காசி” எனப்படும் இராமேஸ்வரம் கோயில், 'தர்பசயனம்' என்றழைக்கப்படும் திருப்புல்லாணி பெருமாள் கோயில், ஜான் டி பிரிட்டோவின் ஓரியூர் தேவாலயம் போன்றவை. முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும்.

தேவிப்பட்டினம் இந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்கு சடங்குகள் செய்யும் கடலோரக் கிராமமாகும்.

உலகிலேயே மிக நீளமான சுற்றுப் பிரகாரத்தைக் கொண்டது இராமேஸ்வரம் இராமநாதஸ்சுவாமி கோயில் ஆகும். இக்கோயில் கட்டுமானப் பணிகள் 12-ஆம் நூற்றாண்டில் மறவன் சேதுபதியால் துவக்கி வைக்கப்பட்டது.

2.3 கி.மீ நீளம் கொண்ட இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம்) இராமேஸ்வரம் தீவை இணைக்கிறது. இதுவே இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கடல் பாலமாகும். மும்பையிலுள்ள பாந்திரா- வொர்லி (நீளம் 5.6 கி.மீ) கடற்பாலத்திற்கு அடுத்தபடியாக இது இந்தியாவின் இரண்டாவது நீளமான கடல் பாலமாகும்.

மன்னார் வளைகுடா கடலுயிரி காப்பகம் இந்தியாவின் முதலாவது கடலுயிரி காப்பகமாகும். இங்கு டால்பின்கள் மற்றும் கடல்-பசு போன்றவை காணப்படுகின்றன.

இராமேஸ்வரம் கோயிலில் உள்ள அக்னி தீர்க்கத்தில் ஒரு முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

இராமநாதபுரம் மாவட்டத்தின் பிறப்பு வீதம் கிராமங்களில் 21.4% நகரங்களில் 18.8% ஆக உள்ளது.

இறப்பு வீதம் கிராமங்களில் 6.8% நகரங்களில் 6.2% ஆக உள்ளது.

திருஉத்திரகோசமங்கை என்ற இடத்தில் உள்ள மங்களேசுவரர் கோயில் மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற தலமாகும் இங்குள்ள சிவன் மரகதத்தால் ஆன நடராசர் திருமேனியுடன் ஆண்டு முழுவதும் சந்தன காப்பிலேயே காட்சியளிக்கிறார்.

முத்துராமலிங்க சேதுபதி, பாஸ்கர சேதுபதி, வள்ளல் சீதக்காதி, முத்துராமலிங்கத் தேவர், டாக்டர் அப்துல்கலாம் போன்றோர் பிறந்த மாவட்டம்.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவிலிருந்து வந்த இப்ராஹிம் சையத் அலி சுல்தான் நினைவாக கட்டப்பட்ட கல்லறையே ஏர்வாடி தர்கா ஆகும். இது மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறந்த இடமாகும். இங்கு நடைபெறும் “சந்தனக்கூடு” திருவிழா மிகவும் சிறப்புப் பெற்றது. இது சமய நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்குகின்றது.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக இராமநாதபுரம் மாவட்டத்தில்தான் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

ஜனவரி 15, 2010 இல் இந்த மில்லினியத்தின் மிக நீண்ட நேர சூரிய கிரகணம் தனுஷ்கோடியில் நிகழ்ந்தது.

இராமேஸ்வரம் தீவின் தென்கோடி முனையில் அமைந்திருந்த (தனுஷ்கோடி) 1964-ஆம் ஆண்டு புயலால் முற்றிலும் அழிக்கப்பட்டது.

உப்பு உற்பத்திக்கு புகழ்பெற்ற வாலிநொக்கம் கப்பல்களை உடைக்கும் துறைமுகமாகவும் விளங்குகின்றது. இங்கு தமிழ்நாடு உப்புக்கழகம் 1974-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

Previous Post Next Post