தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் விருதுகள் 2010

திருவள்ளுவர் விருது - வளன் அரசு

பாரதியார் விருது - என் மமத்

பாரதிதாசன் விருது - ஆர்.இளவரசு

பெரியார் விருது - கோ.சாமிதுரை

அம்பேத்கார் விருது - டி.யசோதா

அண்ணா விருது - ரவிக்குமார் 

காமராஜர் விருது - ஜெயந்தி நடராஜன்

திரு.வி.க. விருது - பேராசிரியர் அய்யாசாமி

கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - ஆர்.மதிவாணன்

2011 விருது பெற்றவர்களின் விவரம்

திருவள்ளுவர் விருது - புலவர் வரதராசன்

பாரதியார் விருது - பேராசிரியர் பிரேமா

பாரதிதாசன் விருது - கவிஞர் ராதாகிருஷ்ணன்

பெரியார் விருது - டாக்டர்.விசாலாட்சி - நெடுஞ்செழியன்

அம்பேத்கார் விருது - பேராசிரியர் சு.காளியப்பன்

அண்ணா விருது - இரா.செழியன்

காமராஜர் விருது - திண்டிவனம் ராமமூர்த்தி

திரு.வி.க. விருது - பேராசிரியர் நா.ஜெயம்பிரகாசம்

கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - பேராசிரியர் ஆர்.மோகன்

கல்பனா சாவ்லா விருது

1984-ஆம் ஆண்டு சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. இவர் நாசா அனுப்பிய கொலம்பியா விண்கலத்தில் பயணம் செய்து பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, விண்கலம் வெடித்துச் சிதறியதால் உயிரிழந்தார்.

1984-ஆம் ஆண்டு சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா.

இவரின் நினைவாக தமிழக அரசு 2003-ஆம் ஆண்டு முதல் 'கல்பனா சாவ்லா' விருதுகளை வழங்கி வருகிறது.

வீரதீர செயல் புரிந்த தமிழக மகளிரை சிறப்பிக்கும் வகையில் இவ்விருதானது ஆண்டுதோறும் சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இவ்விருது பெற்றவர்களுக்கு 5 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும், தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.

முதலாவது கல்பனா சாவ்லா விருது கராத்தே நிபுனர் ரேஷ்மா சர்மாவுக்கு வழங்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டுக்கான இவ்விருது டாக்டர்.எஸ்.சங்கீதா (திருச்சி.ஆர்.டி-ஒ)-க்கு வழங்கப்பட்டது.

கலைமாமணி விருது

தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலைமாமணி விருதுகளை வழங்குகிறது. இலக்கியம், இசை மற்றும் நாடகத்துறையில் சிறப்பு மிக்கவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

கலைமாமணி விருதுகள் 1954- ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. கலைமாமணி விருது ஒவ்வொரு ஆண்டும் பல துறைகளில் சிறந்த கலைஞர்களுக்கு கொடுக்கப்படுகின்றது.

1. இயல்துறை

2. இசை துறை

3. பரத நாட்டியத் துறை

4. நாடகத் துறை 

5. திரைப்படத் துறை 

6. இசை நாடகத் துறை

7. கிராமியக் கலைத் துறை 

8. இதர கலைத் துறை

காந்தியடிகள் காவலர் விருது

கள்ளச் சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்படும் காவல் அதிகாரிகளை சிறப்பிப்பதற்காக 1996-ஆம் ஆண்டு "உத்தமர் காந்தி காவல்துறை பதக்கம்'' அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2001-ஆம் ஆண்டு "மகாத்மா காந்தி காவல்துறை பதக்கம்'' எனப் பெயர் மாற்றப்பட்டது. இவ்விருதானது 2006-இல் "காந்தியடிகள் காவலர் விருது" என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன் விருதுத் தொகையானது 10,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 

கணியன் பூங்குன்றனார் விருது

அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கம் நல்கும் வகையில் ஆண்டுதோறும் வெளிவரும் தமிழ் மென்பொருள்களுல் சிறந்த மென்பொருள் ஒன்றை தெரிவு செய்து, அதனை உருவாக்கியவருக்கு "கணியன் பூங்குன்றனார்" விருது வழங்கப்படுகிறது. 

உத்தமர் காந்தி ஊராட்சி விருது 

உத்தமர் காந்தி ஊராட்சி விருது தமிழக அரசால் 2006-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சிறப்பான மற்றும் புதுமையான முயற்சிகளை செயல்படுத்தும் 15 கிராம ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.

2006-07 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

விருது பெற்ற தமிழர்கள்

நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்

சர்.சி.வி.ராமன் 1930 ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது  பரிசு பெற்ற துறை: இயற்பியல் (ராமன் விளைவு)

எஸ்.சந்திரசேகர் 1983 ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது பரிசு பெற்ற துறை: இயற்பியல் (சந்திரசேகர் எல்லை)

வெங்கட்ராமன் மற்றும் ராமகிருஷ்ணன் 2009 ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது பரிசு பெற்ற துறை: வேதியியல்

ராமோன் மகசேசே விருது பெற்றவர்கள்

ஆசியாவின் நோபல் பரிசு எனக் கருதப்படும் ராமோன் மகசேசே விருது 1957-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ராமோன் மகசேசே நினைவாக உருவாக்கப்பட்டது.

ராமோன் மகசேசே பெற்ற தமிழர்கள்

1.எம்.எஸ்.சுவாமிநாதன் 1971 ஆம் ஆண்டு துறை: சமூக தலைமை

2.எம்.எஸ்.சுப்புலட்சுமி 1974 ஆம் ஆண்டு துறை: பொது சேவை

3. ஆர்.கே.லட்சுமணன் 1984 ஆம் ஆண்டு துறை: இலக்கியம் மற்றும் இதழியல்

4. அருணா ராய் 2000 ஆம் ஆண்டு துறை: சமூக தலைமை

5. டாக்டர் வி.சாந்தா 2005 ஆம் ஆண்டு துறை: பொது சேவை

பாரத ரத்னா விருது பெற்ற தமிழர்கள்

சி.இராஜகோபாலச்சாரி 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது

எஸ்.ராதாகிருஷ்ணன் 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது

சர்.சி.வி.ராமன் 1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது

கே.காமராஜ் (மறைந்த பிறகு) 1976 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது

எம்.ஜி.ராமச்சந்திரன் (மறைந்த பிறகு) 1988 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது

எ.பி.ஜே.அப்துல்கலாம் 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது

எம்.எஸ்.சுப்புலெட்சுமி 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது

சி.சுப்ரமணியம் 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது

ஞான பீட விருது

இந்தியாவில் எழுத்துத் துறைக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ஞானபீட விருது ஆகும்.

இந்த விருது முதன் முதலில் 1965-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது இதுவரை தமிழகத்தில் இரண்டு எழுத்தாளர்கள் மட்டுமே இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

எழுத்தாளர் : பி.வி.அகிலாண்டம் (அகிலன்) வழங்கப்பட்ட ஆண்டு 1975  நூல்: சித்திரப்பாவை

எழுத்தாளர் : டி.ஜெயகாந்தன் வழங்கப்பட்ட ஆண்டு 2002 எழுத்துத்துறைக்காக வழங்கியது.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்கள்

1.விஸ்வநாதன் ஆனந்த் (1991-1992) 

2. தன்ராஜ் பிள்ளை (1999-2000)

சாகித்ய அகாடமி விருது

இந்தியாவில் எழுத்துத் துறைக்கு வழங்கப்படும் இரண்டாவது உயர்ந்த விருது சாகித்ய அகாடமி விருது ஆகும். சாகித்ய அகாடமி 1954-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் உருவாக்கப்பட்டது.

இது தற்போதுள்ள 22 தேசிய மொழிகள், ஆங்கிலம் மற்றும் ராஜஸ்தானி உட்பட மொத்தம் 24 மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் வகையில், ஆண்டுதோறும் விருதுகளை வழங்கிவருகிறது  1957,59,60,64,76 - ஆகிய ஆண்டுகளில் தமிழ் மொழிக்கு விருதுகள் வழங்கப்படவில்லை.

Previous Post Next Post