இந்திய மாநிலங்கள் மறுசீரமைப்பு

இந்திய தேசிய காங்கிரஸ் மொழிவழி மாநில அமைப்பு முடிவை 1908-லேயே ஏற்றுக் கொண்டது. அக்கருத்தின் அடிப்படையில் தான் 1911-இல் பீகார் வங்காளத்திலிருந்து பிரிக்கப்பட்டது. 1920-ம் ஆண்டில் நாக்பூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்திய மாகாணங்கள் பிராந்திய மொழிகளின் அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்ட மன்றத் தலைவர் ராஜேந்திரபிரசாத், 1948-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.தார் தலைமையில் மாகாணங்கள் மறுசீரமைப்புக் கமிஷனை நியமித்தார்.

இந்திய தேசிய காங்கிரஸ் மொழிவழி மாநில அமைப்பு முடிவை 1908-லேயே ஏற்றுக் கொண்டது. அக்கருத்தின் அடிப்படையில் தான் 1911-இல் பீகார் வங்காளத்திலிருந்து பிரிக்கப்பட்டது. 1920-ம் ஆண்டில் நாக்பூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்திய மாகாணங்கள் பிராந்திய மொழிகளின் அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

1948-ஆம் ஆண்டு முடிவதற்கு முன்பே தார் கமிஷன் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. உடனடியாக மொழிவழி மாகாணங்கள் மறுசீரமைக்கப்படுவது விரும்பத்தக்கவல்லது என்று அக்கமிஷன் கருதியது. மேலும் மொழிவழி மாகாண மறுசீரமைப்பால் ஏற்படக்கூடிய பொருளாதார நிர்வாகச் செலவுகளைத் தாங்கக் கூடிய நிலையில் நாடு இல்லை என்றும் அக்கமிஷன் கருதியது.

மொழிவாரி மாநிலங்களை அமைப்பது பற்றிப் பரிசீலிக்க காங்கிரஸ் கட்சியும் 1948-ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரு கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டியில், 1)ஜவஹர்லால் நேரு, 2) வல்லபாய் பட்டேல், 3) பட்டாபி சீத்தாராமய்யா ஆகியோர் இடம் பெற்றனர். இவர்களது பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு இக்குழு ஜே.வி.பி. கமிட்டி என்று அழைக்கப்பட்டது.

சென்னை ராஜதானியிலிருந்த தெலுங்கர்கள் 1917-லிருந்தே தனி ஆந்திர மாகாணக் கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். சென்னை அரசாங்கம் ஆந்திர மாநிலம் அமைவதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஒரு பிரிவினைக் கமிட்டியை நியமித்தது. சென்னை மாகாண முதலமைச்சர் குமாரசாமி ராஜா அக்கமிட்டியின் தலைவராக இருந்தார்.

தனி ஆந்திர மாநிலக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பொட்டி ஸ்ரீராமலு சென்னையில் 1952 அக்டோபர் 19-ஆம் நாள் சாகும் வரை உண்ணாவிரதத்தை துவக்கினார்.

1952 டிசம்பர் 15-ஆம் தேதி இரவு தென்னக காந்தியவாதி பொட்டி ஸ்ரீராமலு தனி ஆந்திர மாநிலத்துக்காக உயிர்த்தியாகம் செய்தார். அதன்பின் தனி ஆந்திர மாநிலம் அமைவதை அனுமதிப்பதாக 1953 டிசம்பர் 19-நாள், மத்திய அரசாங்கம் அறிவித்தது.

1953 அக்டோபர் முதல் தேதி பிரதமர் நேரு ஆந்திர மாநிலத்தை மகிழ்ச்சி ஆரவாரத்துக்கிடையே துவக்கி வைத்தார். சி.எம்.திரிவேதி புதிய ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் டி.பிரகாசம் முதலமைச்சராகவும், சஞ்சீவரெட்டி துணை முதலமைச்சராகவும் பதவிப் பொறுப்பேற்றனர்.

தமிழகத்தில் எல்லைப் பிரச்சனை

வடக்கெல்லைப் போராட்டம்:

1. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதல் ஏற்பட்ட பிரச்சனைகள் பல. அவற்றுள் மிகவும் முக்கியமானது எல்லைப் பிரச்சனை ஆகும்.

2. இரு மாநிலங்களுக்கிடையேயான எல்லையை வரையறுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆந்திரத் தலைவர்கள் சென்னை நகரின் ஒரு பகுதியைக் கேட்டபோது தமிழரசுக் கட்சித் தலைவரான மா.பொ.சிவஞானம் திருப்பதி சென்னை மாகாணத்தோடு இருக்க வேண்டும் என்று கோரினார்.

3. பின்னர் ஆந்திரர்கள் திருப்பதிக்குத் தெற்கே உள்ள மற்றொரு கோயில் நகரமான திருத்தணியையும் ஆந்திராவுடன் சேர்க்க வேண்டும் என்று கேட்ட போது மா.பொ.சிவஞானம் அக்கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்தார். போராட்டத்தில் ஈடுபட்டார்.

4. இந்த எல்லைச் சிக்கலைத் தீர்க்கும் பொருட்டு நேரு அரசாங்கம் எச்.வி.படாஸ்கர் (H.V.Pataskar) கமிட்டியை அமைத்தது.

5. அக்கமிட்டி எல்லைக் கிராம மக்கள் பேசிய மொழியை அளவுகோலாகக் கொண்டு எல்லையைத் தீர்மானித்தது. அதன்படி திருப்பதி ஆந்திராவுக்கும் திருத்தணி சென்னை மாகாணத்துக்கும் கொடுக்கப்பட்டது. திருத்தணி தமிழ்நாட்டின் பகுதி ஆயிற்று. 

தெற்கெல்லைப் போராட்டம்:

1. மார்சல் நேசமணியின் தலைமையில் தெற்கில் எல்லைப் போராட்டம் விறுவிறுப்படைந்தது.

2.1953-இல் பசல் அலி மாநில மறுசீரமைப்புக் கமிஷன் அமைக்கப்பட்ட பின்னரும் போராட்டம் தொடர்ந்தது.

3. காமராஜரின் பாளையங்கோட்டை சமரச முயற்சி பலனளிக்கவில்லை. 1954 ஆகஸ்டு 11-ம் தேதி மறியல் போராட்டம் துவக்கப்பட்டது.

4. மாநிலங்கள் மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரையின் படி தமிழ்நாட்டின் தெற்கெல்லையில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய நான்கு வட்டங்களைத் திருவிதாங்கூரிலிருந்து பிரித்துக் குமரி மாவட்டமாக்கித் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

5. திருவிதாங்கூர் கொச்சியின் பகுதியாயிற்று.

Previous Post Next Post